23-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

August 23, 2019


பல்வேறு அரச தொழில்வாய்ப்புக்கள் மற்றும் கற்கை நெறி என்பவற்றுக்கான தகவல்கள் அடங்கிய வர்த்தமானியைப் (23-08-2019) பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Gazette-tamil


23-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 23-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 23, 2019 Rating: 5

சினமென் கிராண்ட் குண்டுதாரி தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் தகவல்

August 22, 2019


கொழும்பு சினமென் கிராண்ட் கோட்டலில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இன்சாம் அஹமட் என்பவர் தன்னியக்க குண்டுதாரி 

20 இலட்சம் ரூபா வழங்கியதாக கூறப்படும் எம்.முவ்பாஹில் என்பவர் மேலும் சிலருடன் பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டிருப்பதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. 
இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு வங்கிகள் பலவற்றின் கணக்கறிக்கைகளை பெற்றுத்தருமாறு பொலிஸார் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொண்டிருந்தது. அத்தோடு இதற்கான அனுமதியினை நீதவான் வழங்கியிருந்தார். இவரது கணக்கில் குண்டுதாரர்களினால் 20 இலட்சம் ரூபா வைப்பிடப்பட்டிருப்பதாக விசாரணையில் இருந்து தெரியவந்திருப்பதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்து இரகசிய பொலிசார் இந்த உத்தரவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 குண்டுதாரி வைப்பீடு செய்தள்ள 20 இலட்சம் ரூபாவில் 6 இலட்சம் ரூபாவை இவரது மனைவி பெற்றுக்கொண்டிருப்பதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
சினமென் கிராண்ட் குண்டுதாரி தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் தகவல் சினமென் கிராண்ட் குண்டுதாரி தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் தகவல் Reviewed by irumbuthirai on August 22, 2019 Rating: 5

கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்..

August 22, 2019


கொழும்பு நகரிலும் படகில் பயணிக்கும் சந்தர்ப்பம் இனி பயணிகளுக்கு கிடைக்கின்றது. நெரிசலைக் குறைக்கும் விதமாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெருநகர மற்றும் மேல் மாகாண அமைச்சுக்குட்பட்ட இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இதில் பயணிகள் போக்குவரத்துக்கான குளிரூட்டப்பட்ட 

படகு பயன்படுத்தப்படுவதாக தலைவர் ரொசான் குணவர்த்தண கூறினார். 
யூனியன் பிளேஸில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் பேரவாவியின் ஊடாக இந்த படகு சேவை இடம்பெறுகின்றது. ஜுனியன் பிளேசில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் பஸ்ஸில் செல்வதற்க்கு அலுவலக நேரங்களில் பொதுவாக 30 நிமிடங்கள் செல்லும், ஆனால் பேர வாவியின் ஊடாக 

படகின் மூலம் பயணத்தை மேற்கொள்ளும் போது 10 நிமிடங்கள் மாத்திரமே ஆகும். இரவு நேரங்களிலும் படகு மூலம் சுற்றுலாவை மேற்கொள்ள வசதி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தில் காணப்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் படகின் மூலமான பயணிகள் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த திட்டத்தின் வெற்றிக்கு அமைவாக வெள்ளவத்தையில் இருந்து பத்ரமுல்லை வரையிலும் மட்டக்குளியில் இருந்து ஹங்வெல்ல வரையிலும், மட்டக்குளியில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் பயணிகளுக்காக படகு போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கக்கூடியாதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்.. கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்.. Reviewed by irumbuthirai on August 22, 2019 Rating: 5

G. C. E. (O/L) EXAMINATION – 2018 (Results After Re-Scrutiny)

August 22, 2019


To obtain this results please click the link below.


Re correction results
G. C. E. (O/L) EXAMINATION – 2018 (Results After Re-Scrutiny) G. C. E. (O/L) EXAMINATION – 2018 (Results After Re-Scrutiny) Reviewed by irumbuthirai on August 22, 2019 Rating: 5

Examination Department: New Syllabus Model Papers. (Vol 1)

August 21, 2019



G.C.E.(Advanced Level) Examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce and Arts up to the year 2014 and from 2015 the examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce, Art, Engineering Technology and Biosystems Technology.
Please click the link below to find Structure of Question Papers and Prototype Questions 2019 and afterwards. (Subjects: Physics, Chemistry, Mathematics, Agriculture, Biology, Combined Mathematics, Higher Mathematics)

New syllabus- Eng. Medium
Examination Department: New Syllabus Model Papers. (Vol 1) Examination Department: New Syllabus Model Papers. (Vol 1) Reviewed by irumbuthirai on August 21, 2019 Rating: 5

இலவச தொழிற்தகைமை: பதிவுகள் பிரதேச செயலகங்களில்..

August 21, 2019

வடமாகாணத்தை சேர்ந்த 5,000 இளைஞர் யுவதிகளுக்கு RPL முறையில் NVQ சான்றிதழ் வழங்குவதற்கான செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிகாட்டலுக்கமைவாக  

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சான்றிதழ்களை கணனி, மின்னியல், தையல், தச்சு வேலை, மேசன் வேலை, நீர்க்குழாய் பொருத்துதல், இரும்பு ஒட்டுனர், வர்ணப்பூச்சு வேலை போன்ற தொழில்களை மேற்கொள்பவர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். 
யாழ் மாவட்டத்தை சேர்ந்த 3,000 இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி 500, மன்னார் 500, முல்லைத்தீவு 500, வவுனியா 500 என ஐந்து மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான பதிவுகள் பிரதேச செயலகங்களில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த தொழில்சார் பயிற்சியினைப் பெற்றவர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் RPLமுறையினுடாக NVQ சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாதிருப்பின் தங்கள் பிரிவிலுள்ள பிரதேச செயலங்களுக்குச் சென்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதிக்கு முன்பாக பதிவினை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு NAITA நிறுவனத்தினால் செய்முறைப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இச்சான்றிதழ்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்வாய்ப்பிற்கு அடிப்படைத் தகைமையாக கருதப்படும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இலவச தொழிற்தகைமை: பதிவுகள் பிரதேச செயலகங்களில்.. இலவச தொழிற்தகைமை: பதிவுகள் பிரதேச செயலகங்களில்.. Reviewed by irumbuthirai on August 21, 2019 Rating: 5

புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்க புதிய நடைமுறை

August 18, 2019

வருடந்தோறும் சுமார் 350,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு  தோற்றுகின்றனர். இவர்களுள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டுவருகின்றது.

புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறும் மாணவர்கள் இது வரைகாலமும் தமக்கான கொடுப்பனவுகளை பெற ஒவ்வொரு மாதமும் அதற்கான உறுதிச்சீட்டுகளை (Voucher) சமர்ப்பிக்க வேண்டும் என்பதே நடைமுறை.
இதன் காரணமாக நிலவிய பிரச்சினை மற்றும் தாமதங்களைக் கருத்திற்கொண்டு தற்போது புதிய முறை அறிமுகமாகிறது. அதாவது online முறை இனிமேல் கொடுப்பணவுகள் மேறகொள்ளப்படவிருக்கின்றன.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கான நடவடிக்கைகளை செயல்திறன் மிக்கதாகவும், மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைக்கக்கூடிய வகையிலும் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த முறை அறிமுகமாகிறது.
இதே போன்று தரம் 13 வரையிலான கட்டாய கல்வியின் கீழ் தொழில்நுட்ப கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் இதன் கீழ் ஒழுங்குகள் மெற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தகவல்கள், பரீட்டையில் பொற்றுக்கொண்ட புள்ளிகள் என்பவற்றை உள்ளடக்கி புலமைப்பரிசில் கொடுப்பனவிற்க்கான தகுதியை பெற்ற மாணவர்களின் சகல தகவல்களும் Online முறைக்கு அமைவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. 

புலமைப்பரிசில்கான கொடுப்பனவு மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பு செய்யப்பகின்றது. தற்பொழுது மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவான 500 ரூபா 750 ரூபாவாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அலோசனை வழங்கியிருக்கிறார்.
 புலமைப்பரிசில் கொடுப்பனவிற்காக அரசாங்கம் வருடாந்தம் 362 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டாவது கட்டமாக 2020 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் அனைத்து அரசாங்க பாடசாலைகள், பிரிவெனாக்கள், தனியார் மற்றும் அரச நிதி உதவியுடன் செயற்படும் பாடசாலை மாணவர்களுக்காக Online முறையின் மூலம் புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
(அ.த.தி)

புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்க புதிய நடைமுறை புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்க புதிய நடைமுறை Reviewed by irumbuthirai on August 18, 2019 Rating: 5

உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்...

August 18, 2019
சகல அம்சங்களும் வாக்கெடுப்பிற்கு உட்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 
பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்திருக்கிறார். Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார். 
இதுமட்டுமன்றி Chris Evans, David Beckham, Robert Pattinson போன்ற உலகப்புகழ் பெற்ற பிரபலங்களை ஹ்ரித்திக் ரோஷன் வீழ்த்தியிருக்கிறார். 
(கிசு கிசு)
உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... Reviewed by irumbuthirai on August 18, 2019 Rating: 5

புதிதாக 5 000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள்

August 17, 2019

புதிதாக ஐயாயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 13 வருட கட்டாயக் கல்வியின் வேலைத்திட்டத்திற்காக இந்நியமனம் இடம்பெறவிருக்கிறது. 

நேற்று இடம்பெற்ற 2020ஆம் ஆண்டிற்கான இலவச பாட நூல் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் இதனைக் தெரிவித்துள்ளார். 
இந்த ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சின் செயலாளரினால் கல்வி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் கல்வித்திட்டத்திற்காக இதற்கு முன்னர் 1500 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். 

13 வருட கட்டாயக் கல்வியின் ஊடாக உயர் தரத்தில் தொழில் துறைசார்ந்த 26 பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களுக்கான தொழில் பயிற்சிக் காலத்தில் நாளொன்றிற்கு 500 ரூபா வீதம் வழங்கவும் கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கல்வியமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
புதிதாக 5 000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் புதிதாக 5 000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் Reviewed by irumbuthirai on August 17, 2019 Rating: 5

Examination for the Issue of Amateur Radio Operator’s License by the Telecommunications Regulatory Commission of Sri Lanka

August 17, 2019

Examination for the Issue of Amateur Radio Operator’s License by the Telecommunications Regulatory Commission of Sri Lanka (Advance Class / General Class / Novice Class)

To find above past paper 2017 (2018) please click the link below.


past paper
Examination for the Issue of Amateur Radio Operator’s License by the Telecommunications Regulatory Commission of Sri Lanka Examination for the Issue of Amateur Radio Operator’s License by the Telecommunications Regulatory Commission of Sri Lanka Reviewed by irumbuthirai on August 17, 2019 Rating: 5

Limited Competitive Examination for Filling of Vacancies in the Home Based Personal Assistants’ Post in Sri Lanka Missions Abroad

August 17, 2019

Limited Competitive Examination for Filling of Vacancies in the Home Based Personal Assistants’ Post in Sri Lanka Missions Abroad.
To find the past paper (2012) of the above mentioned exam click the link below.


past paper
Limited Competitive Examination for Filling of Vacancies in the Home Based Personal Assistants’ Post in Sri Lanka Missions Abroad Limited Competitive Examination for Filling of Vacancies in the Home Based Personal Assistants’ Post in Sri Lanka Missions Abroad Reviewed by irumbuthirai on August 17, 2019 Rating: 5

PRACTICAL EXAMINATION IN WESTERN MUSIC - 2019 (GRADE I TO GRADE VIII & DIPLOMA)

August 17, 2019

DEPARTMENT OF EXAMINATIONS. 
PRACTICAL EXAMINATION IN WESTERN MUSIC - 2019 (GRADE I TO GRADE VIII & DIPLOMA) 

Those who wish to obtain application forms by post should send a self - addressed, stamped (to the value of Rs.15.00) envelope of size 9"x4" to the under mentioned address before 31st August 2019. Closing date of applications will be 20th September 2019.

To find more details please click the link below.


Practical exam
PRACTICAL EXAMINATION IN WESTERN MUSIC - 2019 (GRADE I TO GRADE VIII & DIPLOMA) PRACTICAL EXAMINATION IN WESTERN MUSIC - 2019 (GRADE I TO GRADE VIII & DIPLOMA) Reviewed by irumbuthirai on August 17, 2019 Rating: 5

உயர்தர புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சை திணைக்களத்திலிருந்;து....

August 16, 2019

இலங்கையின் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதிச் சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக க.பொ.த (உ.தர)ப் பரீட்சை உள்ளது. இது முக்கியமாக சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக நடைபெற்ற போதும் பல்கலைக்கழகங்கள், வேறு உயர்கல்வி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரிகள் என்பவற்றிற்குத் தகைமைத் தெரிவு செய்வதற்கும் இப்பரீட்சையின் பெறுபேறு அடிப்படையாகக் கொள்ளப்படுவதால் இது ஒரு தேர்வுப் பரீட்சையாகவும் கருதப்படுகிறது.


இது போன்றே நடுத்தர மட்டத்தில் தொழிலைப் பெறுவதற்கும் இப்பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படைத் தகைமையாகக் கருதப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு வரை க.பொ.த (உ.தர)ப் பரீட்சை தரம் 12, 13 என்பவற்றின் பாடத்திட்டத்தினை அடிப்டையாகக் கொண்டு உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை என நான்கு பாடத்துறைகள் இடம் பெற்றதுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொழினுட்பவியல் பாடத் துறையின் கீழும் பரீட்சை நடைபெற்றது. இதற்கமைய உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை, பொறியியல் தொழினுட்பவியல், உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் எனும் பாடத்துறைகளிலும் பரீட்சைகள் நடைபெறும்.
அந்த வகையில் 2019 முதல் நடைபெறும் புதிய பாடத்திட்டத்தின்படியான பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களையும் அது தொடர்பான விரிவான விளக்கங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


சித்திரக்கலை
நாட்டியம் (பரதம்)
சங்கீதம் (கர்நாடகம்)
சங்கீதம் (மேலைத்தேய)
நாடகமும் அரங்கியலும் (தமிழ்)
நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்)
போன்ற பாடங்கள் தொடர்பான வினாத்தாள்களையும் ஏனைய விபரங்களையும் பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்.


model papers-A.L. New syllabus
உயர்தர புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சை திணைக்களத்திலிருந்;து.... உயர்தர புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சை திணைக்களத்திலிருந்;து.... Reviewed by irumbuthirai on August 16, 2019 Rating: 5
Powered by Blogger.