அரச தொழிலை எதிர்பார்க்கும் மனோநிலை மாறவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது:
irumbuthirai
August 23, 2019
உலக திறன் சுட்டியில் இலங்கை 82வது இடத்தில் இருப்பதாகவும், இலங்கை தெற்காசியாவில் முன்னணி இடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 2வது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் இளம் சந்ததியினர் அரச தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும்
மனோநிலையில் இருந்து விலக வேண்டிய காலம் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார். தொழிற்பயிற்சி அதிகார சபையின் அனைத்துப் பாடநெறிகளும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண தொழிற்கல்வி, கைத்தொழில் மற்றும் உள்ளக வர்த்தகம் ஆகிய மூன்று துறைகளுக்காகவும் முதல் தடவையாக எதிர்வரும் தினங்களில் தேசிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
அரச தொழிலை எதிர்பார்க்கும் மனோநிலை மாறவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது:
Reviewed by irumbuthirai
on
August 23, 2019
Rating: