ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு

August 26, 2019

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் அபிவிருத்தி இணைப்புக் குழு இணைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாச தலைமையில் நடைபெற்றது. 

இதில் உரையாற்றிய விஷேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலையத்தின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்து ஆசிரியர் பயிற்சிகளை முடித்துக் கொண்ட பயிற்றபட்ட ஆசிரியர்களுக்கு தரம் 3-1 ற்கு பதவி நிலைபடுத்தி அவர்களுக்கான கொடுப்பனவை மத்திய மாகாணம் வழங்காததினால் பயிற்றபட்ட ஆசிரியர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். ஏனைய சில மாகாணங்களில் அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கபட்டு வருகின்றது. அதேபோல் இவர்களுக்கும் கூடிய விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றார். 
இதற்கு பதிலளித்து உரையாற்றிய மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் இதற்கான தீர்வினை 

பெற்றுக் கொடுப்பதில் நானும் இணைந்துக் கொள்கின்றேன். தற்போது பயிற்சி பெற்ற 215 ஆசிரியர் உதவியாளர்களின் விபரம் கிடைத்து உள்ளது. இவர்களில் மூன்று இரண்டுக்கு நிலைப்படுத்த தேவையான அனைத்து விபரங்களும் சரி செய்யபட்டு வருகின்றன. இன்னும் ஒரிரு வாரங்களில் இவர்களுக்கான பதவியை நிலைபடுத்தி கொடுப்பனவை மத்திய மாகாணம் மூலம் வழங்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதே போல் பயிற்சி பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கும் பயிற்சி பெற இருப்பவர்களுக்கும் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு Reviewed by irumbuthirai on August 26, 2019 Rating: 5

திடீரென மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா:

August 26, 2019

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள ஜி7 மாநாடு பிரான்சில் நடைபெற்றது. இதில் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென ஈரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார். 

ஈரான் - அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மாநாட்டில் ஈரான் அமைச்சர் கலந்து கொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
பிரான்ஸ் அதிபரோடு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக இரான் வெளியுறவு அமைச்சர் ட்விட் செய்துள்ளார். 2015 இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு அமெரிக்கா விலகியதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திடீரென மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா: திடீரென மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா: Reviewed by irumbuthirai on August 26, 2019 Rating: 5

புதிய வாக்காளர் இடாப்பு: மேன்முறையீட்டுக்கான திகதி அறிவிப்பு:

August 26, 2019

2019 அம் வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு வெளியிடப்பட்டமை யாவரும் அறிந்ததே. கிராம சேவகர் காரியாலயம், பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் என்பவற்றில் பார்வையிட முடிவதோடு தேர்தல்கள் திணைக்களத்தின இணையத்தளத்திலும் பார்வையிடும் வசதி காணப்படுகிறது. 
இந்த வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 

10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. தமது விபரங்களில் மாற்றம் இருந்தாலோ பெயர் இடம்பெறாவிட்டாலோ முறைப்பாட்டை மேற்கொள்ளலாம். 
2019 ஆம் வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு கடந்த 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளும் இச்சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாம்.
புதிய வாக்காளர் இடாப்பு: மேன்முறையீட்டுக்கான திகதி அறிவிப்பு: புதிய வாக்காளர் இடாப்பு: மேன்முறையீட்டுக்கான திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 26, 2019 Rating: 5

2019 சா.தர பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளரின் அறிவித்தல்.

August 25, 2019

எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 

திட்டமிட்டபடி இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் செய்முறைப் பரீட்சை இம்முறை பரீட்சைக்கு முன்னதாக அடுத்த மாதம் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
2019 சா.தர பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளரின் அறிவித்தல். 2019 சா.தர பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளரின் அறிவித்தல். Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி

August 25, 2019

2013 ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. 
4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நடந்தது. 
தற்போது மேற்கிந்திய தீவில் விளையாடும் விராட் கோலி அங்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாடினார். அப்போது உரையாற்றிய கோலி,


‘அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப் பெரிய வரம். மிகச் சரியான துணையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனென்றால், அவரது பணிகளை அவராகவே சிறப்பாக செய்து வருகிறார். அதோடு எனக்கான இடத்தையும் சரியாக தருகிறார். என்னை சரியான பாதையில் வழிநடத்துவதும் அவர்தான். அவரிடம் இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

'சாஃப்ட் திசு புற்றுநோய்' என்றால் என்ன?

August 25, 2019

இது ஒரு அரியவகைப் புற்று நோயாகும். திசுக்கள், தசைகள், தசைநார்கள், மூட்டுகள் மற்றும் பிற உடல் அமைப்புகள் வழியாக மிகவும் மெதுவாகப் பரவுவதால், 

இந்த வகைப் புற்றுநோயை கண்டறிவது மிகவும் கடினம். மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, மனித உடலில் புற்று அல்லாத பல கட்டிகள் உள்ளன. இவை உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதில்லை. உயிருக்கு ஆபத்தானதும் அல்ல. ஆனால், புற்றாக மாறுவதற்குச் சாத்தியமுடைய கட்டிகள் படிப்படியாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடுகின்றன. இதுதான் 

’சாஃப்ட் திசு சார்கோமா’ என்று அழைக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. தசைகளில் வீக்கம், எலும்புகள் மற்றும் கட்டிகளில் ஏற்படும் வலி நீண்டகாலம் தொடர்வது இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த நோய் உடலின் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்றும், பொதுவாக கைகள் மற்றும் கால்களிலுள்ள தசைகளை பாதிக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(பிபிசி)

'சாஃப்ட் திசு புற்றுநோய்' என்றால் என்ன? 'சாஃப்ட் திசு புற்றுநோய்' என்றால் என்ன? Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை

August 25, 2019

இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அலையன்ஸ் எயார், இன்டிகோ ஆகிய இரண்டு இந்திய விமான சேவை நிறுவனங்களும் பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கின்றன. 

இதற்குத் தேவையான குடிவரவு, குடியகல்வு வசதிகளையும், சேவைகளையும் வழங்கத் தயார் என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வேலைத்திட்டத்திற்கு இந்த நேரடி விமான சேவை உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? வெளியானது பிரதமரின் அறிவிப்பு

August 25, 2019

மலேசிய இந்தியர்கள், சீனர்கள் குறித்து மதப் போதகர் ஜாகிர் நாயக் அண்மையில் தெரிவித்த சில கருத்துகள் காரணமாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை அதிகரித்தது.

நாடு முழுவதும் ஜாகிர் நாயக் மீது 200 க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மலேசிய காவல்துறை அவரிடம் பல மணிநேரம் விசாரணையும் நடத்தியிருக்கிறது. இதையடுத்து இன, மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்களுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட மாட்டாது என்றும், உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் மலேசிய காவல்துறை தலைவர் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இதனால் ஜாகிர் நாயக் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பிரதமர் மகாதீரின் திட்டவட்டமான அறிவிப்பு வெளியாகியது.

ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். 
மேலும் ஜாகிர் நாயக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டாம் என்பது மலேசிய அமைச்சரவை ஒருமித்த முடிவு என அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி: பிபிசி)
ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? வெளியானது பிரதமரின் அறிவிப்பு ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? வெளியானது பிரதமரின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

பரீட்சைத் திணைக்கள வெளியீடு: Online முறையிலான GIT பாட மாதிரி வினாத்தாள் (மூன்று மொழிகளிலும்)

August 25, 2019

பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட Online முறையிலான GIT பாட மாதிரி வினாத்தாளை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

GIT online exam-model papers
பரீட்சைத் திணைக்கள வெளியீடு: Online முறையிலான GIT பாட மாதிரி வினாத்தாள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சைத் திணைக்கள வெளியீடு: Online முறையிலான GIT பாட மாதிரி வினாத்தாள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

GIT Online exam model paper by Examination Department (All 3 Languages)

August 24, 2019

G.C.E.(Advanced Level) Examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce and Arts up to the year 2014 and from 2015 the examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce, Art, Engineering Technology and Biosystems Technology. 
Please click the link below to find Structure of Question Papers and Prototype Questions Online GIT paper in Sinhala , tamil & English.

GIT Online exam
GIT Online exam model paper by Examination Department (All 3 Languages) GIT Online exam model paper by Examination Department (All 3 Languages) Reviewed by irumbuthirai on August 24, 2019 Rating: 5

Practical Examination in Western Music - 2019

August 24, 2019


Application form must be completed legibly and accurately and forwarded to the Commissioner General of Examinations, Organization (Institutional & Foreign Examinations) Branch, Department of Examinations, Pelawatte, Battaramulla by Registered post. 

The name of the Examination should be written on the top left hand corner of the envelope. 
These Examinations will be held in Colombo, Galle, Kandy, Badulla and Kurunegala. 

Please click the link below to get application.

Application form
Practical Examination in Western Music - 2019 Practical Examination in Western Music - 2019 Reviewed by irumbuthirai on August 24, 2019 Rating: 5

வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது?

August 24, 2019


2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களுக்கு தற்சயம் வாக்காளர் பெயர் பட்டியல் அனுப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். குறித்த வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளதா என்பதை பின்வரும் முறைகளில் பரீட்சிக்கலாம். 

1.    கிராம சேவையாளர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்           பட்டியல். 
2.    பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல். 
3. மாவட்ட செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல். இதற்கு மேலதிகமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொடுத்து பரீட்சிக்கலாம்.
குறித்த இணையத்தளத்திற்குச் செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என்றால் அது தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு அறியத் தருமாறும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது? வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது? Reviewed by irumbuthirai on August 24, 2019 Rating: 5

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதா?

August 23, 2019


கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியதைத் தொடர்ந்து அவசர காலச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அனுமதி வழங்கியது. அன்று முதல் 

ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வந்தார். 
 இந்த நிலையில், நேற்றிரவுடன் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து  உறுதிப்படுத்தினார். எனினும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போலீஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான தேவைக்கு அமைய, ராணுவத்தினர் போலீஸாருக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் சுமித் அத்தபத்து சுட்டிக்காட்டினார். 
அத்துடன், ராணுவ சோதனை சாவடிகள் தேவையேற்படும் பகுதிகளில் மாத்திரம் அவ்வாறே முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் சுமித் அத்தபத்து தெரிவித்தார். இந்த நிலையில், நேற்றிரவுடன் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு நிறைவடைந்துள்ள பின்னணியிலேயே, மேலும் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வருட கால உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் இது ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் ஒன்பது வருடங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பீபீசி)
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதா? இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதா? Reviewed by irumbuthirai on August 23, 2019 Rating: 5
Powered by Blogger.