இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி
irumbuthirai
September 01, 2019
தொழில் செயற்றிறனைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி நாரங்கொல்ல என்ற இடத்தில் இதற்கான நிர்மாணப் பணிகள் நேற்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், கல்வியில் நவீன மய நடவடிககையையும், பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக கூறினார். தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம்
உருவாக்கப்படுவார்கள். ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போன்று நாட்டிலும், பயிற்சி முறை செயலணி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பெற்றுக்கொடுக்க தேவையான வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரிய நாட்டின் நிதி உதவியின் கீழ் நாட்டில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் ஒறுகொடவத்தையில் சமீபத்தில் திறந்து வைக்கப்படதாகவும் பிரதமர் கூறினார்.
நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உரையாற்றுகையில் இந்த தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியில் நான்கு வருடப் பயிற்சியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.
(அ.த.தி)
இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி
Reviewed by irumbuthirai
on
September 01, 2019
Rating: