4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

September 04, 2019


தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன. 

இவர்களுள் 2,340 பேர் சிங்கள மொழியிலும், 1,300 பேர் தமிழ் மொழியிலும், 646 பேர் ஆங்கிலம் மொழியிலும் 3 வருட காலம் கற்கை நெறியினைத் தொடர்ந்த பின்னர் 1 வருட காலம் ஆசிரியர் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. 19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 

31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர். அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த நகழ்வில் கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விபரங்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வை இடமுடியும்.
(அ.த.தி)
4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம் 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 04, 2019 Rating: 5

587 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்

September 04, 2019

மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களினாலேயே தீர்மானிக்கப்படுவதுடன், அவர்கள் தொடர்பான தீர்மானங்களை ஆழமான புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 
நேற்று(02) கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய 15,000 விண்ணப்பதாரிகளுள் முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 
587 பேருக்கு இவ்வாறு நேற்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கற்றறிந்த சமூகமொன்றை உருவாக்கி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கமாகும் என்று கூறினார். ஆசிரியர் சேவையின் ஆளுமை, நம்பிக்கை, இருப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தொழிநுட்ப யுகம் பற்றிய தமது அறிவையும் ஆசிரியர்கள் இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 
ஆசிரியர் நியமனம் வழங்குதலை அடையாளப்படுத்தும் வகையில் 10 பேருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார் பாராளுமன்ற உறுப்பினர்கள் லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், இசுரு தேவப்பிரிய, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜீ. விஜயபந்து மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
(அ.த.தி)
587 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் 587 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 04, 2019 Rating: 5

காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு...

September 04, 2019


காணாமல் போனமை குறித்து உறுதிசெய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்காக இடைக்கால நிவாரணத்தை வழங்குதல் என்ற தலைப்பில் இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10ஆவது தினத்தன்று காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்காக 

நேரடியாக பணத்தை வைப்பீடு செய்வதன் மூலம் மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காகவும் காணாமல் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு அழுத்தத்திற்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்களும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு... காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு... Reviewed by irumbuthirai on September 04, 2019 Rating: 5

Japan Scholarship

September 01, 2019

The project for human resource development scholarship by Japanese grant Aid in Sri lanka 2019 scholarship includes,
monthly living allowance 
one round trip air fare 

full tuition fees 
and other designated allowances 
click the link below for more details


japan scholarship details
Japan Scholarship Japan Scholarship Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

VACANCY: Ministry of Education: Nearest School is the Best School

September 01, 2019
Applications are invited from suitably qualified and experienced individuals for the following positions of the Project Management Unit of the “Nearest School is the Best School” National Programme for school development. 
closing date: 4-9-2019.
Click the link below for more details.

vacancy details
VACANCY: Ministry of Education: Nearest School is the Best School VACANCY: Ministry of Education: Nearest School is the Best School Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு...

September 01, 2019

அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வழங்கப்படவுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள கிரிக்கெட் அணிக்கே இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. 
இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இது தொடர்பாக தெரிவிக்கையில் தானும் கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மாஷல் ஒவ்.டி.எயார்போஸ் றொஷான் குணதிலக்கவும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தோம். பாதுகாப்பு நிலைமையை கண்டறிவதற்காக சென்ற நாம் அங்கு அது தொடர்பான நிலமைகளை கண்டறிவதற்காக சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டோம். 

இதன்போது பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பு பிரிவு மற்றும் அந் நாட்டு கிரிக்கட் பேரவை இலங்கை அணிக்கு அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குவதாக உறுதி தெரிவித்தனர். இலங்கை அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு மைதானங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. ஹோட்டலில் இருந்து விளையாட்டு மைதானம் வரையில் பயணிக்கும் பஸ்ஸிற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற சுப்பர்லீக்ஸ் போட்டியில் இறுதிப்போட்டி சிலவற்றிற்கு கலந்து கொண்ட வெளிநாட்டு வீரர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திதி இலங்கை அணி மீது லாகூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்படவில்லை. 

அன்றிலிருந்து இதுவரை அங்கு ஒருசில போட்டிகளே நடந்துள்ளன. 2015 ஆம் ஆண்டில் சிம்பாவே அணி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் பாகிஸ்தானில் ஒருநாள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டது. 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சர்வதேச அணி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையில் கண்காட்சி ரி-20 கிரிக்கெட் போட்டிகள் 3 நடைபெற்றுள்ளன. திசர பெரேராவின் தலைமையில் இலங்கை அணி 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் லாகூர் நகரில் ரி-20 போட்டியில் கலந்து கொண்டார். இம் முறை பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மூன்றிலும், ரி-20 கிரிக்கெட் போட்டி மூன்றிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி

September 01, 2019

தொழில் செயற்றிறனைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குளியாப்பிட்டி நாரங்கொல்ல என்ற இடத்தில் இதற்கான நிர்மாணப் பணிகள் நேற்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டன. 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், கல்வியில் நவீன மய நடவடிககையையும், பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக கூறினார். தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம் 


உருவாக்கப்படுவார்கள். ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போன்று நாட்டிலும், பயிற்சி முறை செயலணி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பெற்றுக்கொடுக்க தேவையான வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரிய நாட்டின் நிதி உதவியின் கீழ் நாட்டில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் ஒறுகொடவத்தையில் சமீபத்தில் திறந்து வைக்கப்படதாகவும் பிரதமர் கூறினார்.

நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உரையாற்றுகையில் இந்த தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியில் நான்கு வருடப் பயிற்சியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு பட்டம் வழங்கப்படும். (அ.த.தி)
இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரி Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம்

September 01, 2019

215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (31) நடைபெற்றது. இதில் 148 ஆரம்பக்கல்வி ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனமும் 67 உடற்கல்வி டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனமும் ஆளுநரினால் வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஆரம்பகால கல்வி என்பது மிகவும் முக்கியமானது. விழுந்திருக்கின்ற இந்த தேசத்தின், விளிம்பிலே இருக்கின்ற மக்களை திரும்பவும் வாழவைப்பதற்காகவும், வருகின்ற சந்ததியின் ஆரம்பகல்வியை உங்கள் கைகளில் இந்த மாகாணம் இன்று கொடுக்கின்றது. எனவே இந்த பொறுப்பை

இறைபக்தியுடனும் சமுதாய நோக்கத்துடனும் செய்து இந்த தேசத்தை திருப்பவும் கட்டியெழுப்பும் பணியை செவ்வனே செய்யவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள் என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் 215 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

August 30, 2019

30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி முழு விபரத்துடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில்,


இலங்கை கணக்காளர் சேவைக்கான ஆட்சேர்ப்பு
குடும்ப நல உத்தியோகத்தர் பதவிக்கான பயிற்சி நெறி
முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவி


நீதிமன்ற ஏல விற்பனை
இன்னும் பல விடையங்களுடன் வெளிவந்த அரச வர்த்தமானியைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Gazette-tamil
30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 30-08-2019 அன்று வெளியான வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு:

August 30, 2019

பகிடிவதைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையை உயர் கல்வி அமைச்சு அமுல்படுத்தவுள்ளது. அந்தவகையில் 2018/2019 கல்வி ஆண்டுக்காக 

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தொல்லைக்கு உட்படுத்தினால் அதனுடன் தொடர்புபட்ட மாணவர்கள், இந்த செயற்பாட்டிற்கு உதவி ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உயர்நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே.மாயாதுண்னே கூறியுள்ளார். 

மாணவர் ஒருவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு மரணம் அல்லது ஊனமுற்ற நிலைக்கு உள்ளானால் சம்பந்தப்பட்ட பீடாதிபதி முதல் பொறுப்பு கூறவேண்டிய அனைத்து தரப்பினருக்கும் எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
கொடூர பகிடிவதைக்கு எதிராக சட்டத்தில் உள்ள விதிகள் கடுமையானது என்றும் அவர் தெரிவித்தார். 10 வருட சிறைத்தண்டனையும் வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்னார்.

பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் தொல்லைகளின் காரணமாக வருடாந்தம் 2,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு விலகிச் செல்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு: பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு: Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்:

August 30, 2019

புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் இணைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவிருக்கிறது. 2019 ஆம் ஆண்டுக்காக 

குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கே 850 பேர் சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதற்கு 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் மற்றும் இரசாயன விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக மாத்திரம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். 
அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Online மூலம் விண்ணப்பிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Apply online


புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்: புதிதாக 850 பேருக்கு சுகாதார துறையில் பயிற்சிக்கான சந்தர்ப்பம்: விண்ணப்பிக்கும் முறை Online மூலம்: Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

2019 உயர் தர பெறுபேறின்படி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல்

August 29, 2019

உயர் நீதிமன்ற பணிப்பிற்கமைய 2019 ஆம் ஆண்டு புதிய மற்றும் பழைய பாடத்திட்டப் படி பரீட்சைக்குத் தோற்றியவர்களை இரு வேறு குடித்தொகையினராக பல்கலைக்கழக அனுமதியின் போது கருத்திற்கொள்ளப்படவிருக்கின்றனர். 
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Special notice
2019 உயர் தர பெறுபேறின்படி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் 2019 உயர் தர பெறுபேறின்படி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5

Calling of applications to the Post for Graduate Translator Grade III(Tamil/English)

August 29, 2019

University Grants Commission
Application for the post of graduate translator
To find more details please click here


Graduate Translator (Tamil/ English)
To get Application form please the link below.


application
Calling of applications to the Post for Graduate Translator Grade III(Tamil/English) Calling of applications to the Post for Graduate Translator Grade III(Tamil/English) Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5
Powered by Blogger.