சந்திரயான்-2 என்ன நடந்தது?
irumbuthirai
September 07, 2019
இந்தியாவினால் அனுப்பப்பட்ட சந்திராயன் - 2 பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்
சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கியநிலையில், அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், 'லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்று கூறினார்.
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.
புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி 'சந்திரயான்-2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை 'சந்திரயான்-2' விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த 2 அம் திகதி 'சந்திரயான்-2' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.
இந்நிலையில் 'சந்திரயான்-2' விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், 'லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
இன்று, அதிகாலை, 2:15 மணி அளவில், 'லேண்டர்' தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார்.
இங்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி , 'விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்' என கூறி, இஸ்ரோ நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
சந்திரயான்-2 என்ன நடந்தது?
Reviewed by irumbuthirai
on
September 07, 2019
Rating: