பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம்

September 19, 2019


கல்விப் போதனைகளுடன் மட்டும் ஆசிரியர்களின் பணி முடிந்துவிடாது என்றும் பாடசாலையின் மாணவர்கள் குறித்த பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(18) முற்பகல் குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன 

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். 
மேலும் பிள்ளைகள் நவீன தொழிநுட்பத்துடன் முன்நோக்கி செல்கின்றபோது வகுப்பறையின் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரியரின் அறிவு இற்றைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். 

வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சாந்த பண்டார, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர்களான தர்மசிறி தசநாயக்க, அதுல விஜேசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  
இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டது. 100 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 
(அ.த.தி) 
பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம் பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

September 19, 2019


பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துப் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது? என்று பாராளுமன்ற அமர்வின் போது வாய்மூலம் கேட்ட கேள்விக்கு 

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும் இன்றைய தினம் நீர் விநியோகம் மறறும் வடிகால் அமைப்பு சபைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப்பரீட்சை

 சட்ட ரீதியாகும் என்றும் தெரிவித்தார்.  
(அ.த.தி)
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

2019 உயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

September 19, 2019


கடந்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பிலான விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


பாட இல, பாடம், பரீட்சை நடைபெறும் திகதி, மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெறும் திகதி இங்கு தரப்பட்டுள்ளன.


பாட இல        பாடம்                            பரீட்சை  திகதி        மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெறும் திகதி 
     28       மனைப் பொருளியல்    2019.10.19 – 2019.10.26                                      2019.10.14,15 
     52      நாடகம் (தேசிய)              2019.09.24 – 2019.10.06                                      2019.09.18,19 

     53       நடனம் (பரதம்)                 2019.09.24 – 2019.10.06                                      2019.09.20 
     54       கீழைத்தேய சங்கீதம்    2019.09.24 – 2019.10.06                                       2019.09.17 

     55       கர்நாடக சங்கீதம்           2019.09.24 – 2019.10.06                                        2019.09.21 
     56       மேற்கத்தேய சங்கீதம் 2019.09.24 – 2019.10.06                                               - 
     57       நாட்டிய நடனக்கலை(சிங்களம்) 2019.09.24 – 2019.10.06                  2019.09.20
 
     58       நாட்டிய நடனக்கலை (தமிழ்) 2019.09.24 – 2019.10.06                        2019.09.16 
     59       நாட்டிய நடனக்கலை (ஆங்கிலம்) 2019.09.24 – 2019.10.06                       - 
     65      பொறியியல் தொழில்நுட்பம் 2019.09.28 – 2019.10.09                         2019.09.23,24 
     66      உயிரியல் பௌதீக தொழில்நுட்பம் 2019.10.31 – 2019.11.06            2019.10.23,24,25
(அ.த.தி)
2019 உயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2019 உயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

Chemistry Past Paper (in 3 Languages)

September 19, 2019

Examination Department
Chemistry past paper 1 & 11
click the link below to English medium paper


English medium paper
click the link below to Tamil medium paper


Tamil medium paper
click the link below to Sinhala medium paper


sinhala medium paper


Chemistry Past Paper (in 3 Languages) Chemistry Past Paper (in 3 Languages) Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 18, 2019
17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம்.
இதில்,

'தகவல் மாதம்' பிரகடனம்,
தற்காலிக ஊழியர்களுக்கு

நிரந்தர நியமனம் வழங்குதல் நிலக்கரியை கொள்வனவு செய்தல்
 உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்... 
இதன் முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

cabinet decision
17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 18, 2019 Rating: 5

வெளிவாரி பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்

September 18, 2019



நாளை (18)ம் திகதி புதன்கிழமை அலரிமாளிகையில் வழங்கப்படவுள்ள வெளிவாரி பட்டதாரி பயிலுனர் நியமனத்துக்கான


அழைப்புக்கடிதம் கிடைக்காத மட்டக்களப்பு பட்டதாரிகள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்றுக்குகிடைத்த அங்கீகாரத்திற்கு அமைய தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு 2012-2013 கல்வியாண்டில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை


பூர்த்தி செய்தவர்களுக்கு நாளை புதன்கிழமை பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப் படவுள்ளது . அன்றயதினம் காலை 8மணிக்கு அலரிமாளிகையில் வழங்கப்படவுள்ள பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து


326 வெளிவாரி பட்டதாரிகளை குறித்த அமைச்சு தெரிவுசெய்திருப்பதாகவும் இவ்வாறுதெரிவு செய்யப்படடவர்களின் பட்டியல்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் மற்றும் சகல பிரதேசசெயலாளர் அலுவலகங்களின் விளம் பரப்பலகையிலும் நேற்று (16) மாலை போடப்பட்டிருப்பதாகவும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ காந்த் தெரிவித்தார்.
இந்த நியமனத்துக்கான அழைப்புக்கடிதம் கிடைக்காதவர்கள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று தமது உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று புதன்கிழமை 18ம் திகதி பிரதமரின் அலறி மாளிகைக்குச்சென்று இந்த நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
வெளிவாரி பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் வெளிவாரி பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on September 18, 2019 Rating: 5

Examination Department: Physics Past Paper (In 3 Languages)

September 17, 2019

Department of Examination
G.C.E. (A/L) Past paper
Physics 1 & 11
Click the link below for English medium paper

English medium
Click the link below for Tamil medium paper

Tamil Medium
Click the link below for Sinhala medium paper

Sinhala Medium

Examination Department: Physics Past Paper (In 3 Languages) Examination Department: Physics Past Paper (In 3 Languages) Reviewed by irumbuthirai on September 17, 2019 Rating: 5

DEPARTMENT OF EXAMINATIONS, Theory Examination in Western Music – 2019.

September 17, 2019


Application forms for the above English medium Examination will be issued by post and to personal callers from 06 th September 2019. Application Forms also can be downloaded from the Department website (www.doenets.lk). 

Closing date: 04 th October 2019.
Please click the link below for more details

00000
DEPARTMENT OF EXAMINATIONS, Theory Examination in Western Music – 2019. DEPARTMENT OF EXAMINATIONS, Theory Examination in Western Music – 2019. Reviewed by irumbuthirai on September 17, 2019 Rating: 5

விரைவில் 4667 பட்டதாரிகள் இணைப்பு

September 17, 2019

விரைவில் 4667 பட்டதாரிகள் பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அமைச்சரவையினால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்ட்ட தீர்மானத்திற்கு அமைவாக தற்பொழுது வெற்றிடமாக உள்ள 4667 பட்டதாரி பயிற்சியாளர் பதவிகளுக்காக 
45 வயது வரையறைக்குள் இருக்கும் உள்ளக பயிற்சி மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி கால அடிப்படை முறைக்கு அமைவாக 
2012 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டத்தை பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகளை பயிற்றுவிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 
இது தொடர்பில் கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் முன்வைத்த அறிவிப்பை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

விரைவில் 4667 பட்டதாரிகள் இணைப்பு விரைவில் 4667 பட்டதாரிகள் இணைப்பு Reviewed by irumbuthirai on September 17, 2019 Rating: 5

10.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள்

September 17, 2019

10.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில்,

 பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளல்

உட்பட பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களை முழுமயாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet Decision
10.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் 10.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 17, 2019 Rating: 5

South Asia’s largest tower declared open

September 16, 2019


South Asia’s largest tower, The Lotus Tower, was declared open by President Maithripala Sirisena a short while ago.USD 104 million has been spent for construction of the tower and eighty per cent of the cost has been funded by the EXIM Bank of China.

The tower comprises a telecommunication museum, a restaurant, supermarkets, food courts, conference halls with seating for 400 people, a 1,000-seat auditorium, luxury hotel rooms, ballrooms and an observation gallery. Sri Lanka Telecom (SLT), the premier telecommunication service provider in Sri Lanka is delighted to announce its epic accomplishment in the arena of technological infrastructure with the utmost dedication and commitment of the entire SLT family.
The ‘Lotus Tower – Multifunctional TV and Telecommunications Tower’ is foreseen to be one of the significant landmarks and an epitome of Sri Lankan economy, culture and development. Few years back, SLT partnered with China National Electronics Import and Export Corporation, the main contractor of this project and signed a MoU with TRCSL to develop ICT solutions of this magnificent architectural building. The time has arrived to present the fulfilment of this mammoth venture carried out by SLT. The infrastructure is built with fibre optic cables and is fully equipped with necessary telecommunication equipment which are supported in two ways ensuring zero downtime incidences. 

To elaborate further, if one line turns out to be faulty, the second line would definitely perform as the back-up since the installed fibre optic cables are furnished to serve as a resilient network. Accordingly, all the technological services and devices will run smoothly even without a mild disturbance. The exceptional and intricate fibre optic telecommunication infrastructure on the Lotus Tower can be categorised into two main parts. Under the ‘Basic Telecommunication Infrastructure Development’, SLT focused on three substantial deliverances. Firstly, this sophisticated telecommunication infrastructure can cater to all Enterprise level, SME and Consumer customers’ telecommunication needs simultaneously. 
Secondly, other telecommunication service providers in the country also can perform their network and service platforms on the built infrastructure of SLT. 
Thirdly, the Lotus Tower is expected to be Sri Lanka’s ‘Digital TV Tower’ in the long run. Considering the forthcoming requirements of digital TV broadcasters, SLT has already laid the desirable telecommunication infrastructural paths to transport content to ‘Lotus Tower’ from their respective control centres. 
The second main segment of this advanced infrastructure is introduced as ‘Extra Light Voltage Solution/Weak Current System’. SLT partnered with the main contractor of the lotus tower project to develop ICT Solutions under 14 sub-systems of internal telephones, LAN – WAN and IPTV, Information Publishing, Building Management, Access Control, Video Surveillance and Control, Public Addressing, Walkie-Talkie (wireless intercom), Wireless Patrolling, Energy Management, Fire Detection and Alarming, Smart Solutions for VIP guest rooms, Wireless Ordering Solution(for revolving Restaurant and Banquet Halls) and GPS Synchronized Digital Clock System. Excited Sri Lankans can experience, eyewitness and relish on all meticulously arranged facilities exclusively provided by Sri Lanka’s national telecommunication partner.
(DGI) 
South Asia’s largest tower declared open South Asia’s largest tower declared open Reviewed by irumbuthirai on September 16, 2019 Rating: 5

சவுதி எண்ணெய் தொழிற்சாலை மீதான தாக்குதல்: இந்தியாவிற்கு எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்?

September 16, 2019

உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. மசகு எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 
20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலின் மூலம் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் ஐந்து சதவீதமான தொகை பாதிக்கப்பட்டுள்ளது. 
சவுதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எமெர்ஜென்சி நிறுவனத்தின், புக்கியாக் நகரில் உள்ள அப்கைக் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, குர்அய்ஸில் உள்ள அதே நிறுவனத்தின் எண்ணெய் வயலிலும் தாக்குதல் நடந்தது. 
இதனால் இரு இடங்களிலும் தீப்பற்றி எரிந்தது. ஏமன் அரசிற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டுவரும் ஹூவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் போன்ற நாடுகள் ஏமன் அரசிற்கு ஆதரவாக உள்ளதால் சவுதி மீது ஏறக்குறைய 100 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 
தற்போது நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈரான் பின்புலமாக இருந்து செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. எண்ணெய் வளமிக்க ஈரான் நாட்டுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அமெரிக்கா அந்த நாட்டிற்கு பொருளாதார தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
98 லட்சம் பேரல் மசகு எண்ணெய் உற்பத்தியாகும் சவுதியில் தற்போது நடத்தப்பட்ட தாக்குதலால் 
57 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 50 சதவீத எண்ணெய் அழிந்ததாக கூறப்படுகிறது. 53 லட்சம் டன் மசகு எண்ணெய் சேமிப்பு கிடங்கு வைத்துள்ள இந்தியாவால், 
22 நாட்கள் வரை இறக்குமதியில்லாமல் நிலைமையை சமாளிக்க முடியும். 
இந்நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வது மட்டுமின்றி, இறக்குமதியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவிவரும் சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சவுதியை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் உலக எண்ணெய் சந்தை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் தாக்குதல் என்றும் சவுதி அரசு குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி) 
சவுதி எண்ணெய் தொழிற்சாலை மீதான தாக்குதல்: இந்தியாவிற்கு எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்? சவுதி எண்ணெய் தொழிற்சாலை மீதான தாக்குதல்: இந்தியாவிற்கு எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்? Reviewed by irumbuthirai on September 16, 2019 Rating: 5

தெற்காசியாவின் அதி உயர் கோபுரம் சற்று முன்னர் திறப்பு

September 16, 2019

தெற்காசியாவின் உயரமான கோபுரத்தை ஜனாதிபதி சற்றுமுன்னர் திறந்துவைத்தார். பல்வேறு விஷேட அம்சங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது.
 இதன் விஷேட அம்சங்கள் வருமாறு:

உயரம் 1168 அடிகள் (356 மீற்றர்)

தெற்காசியாவில் மிக உயரமான கோபுரம்

ஆசியாவில் 11வது உயரமான கோபுரம்

உலகில் 19 ஆவது உயரமான கோபுரம்

8 மாடிகளைக் கொண்டுள்ளது.
வருமான மூலம்: சுற்றுலா மற்றும் ஒலி ஒளிபரப்பு கோபுர குத்தகை.
00000
மேலும் பற்பல விஷேட அம்சங்களைக் காண கீழுள்ள படத்தைப் பாருங்கள்.


தெற்காசியாவின் அதி உயர் கோபுரம் சற்று முன்னர் திறப்பு தெற்காசியாவின் அதி உயர் கோபுரம் சற்று முன்னர் திறப்பு Reviewed by irumbuthirai on September 16, 2019 Rating: 5
Powered by Blogger.