Mathematics Past Paper (In 3 Languages)

September 20, 2019
Examination Department
G.C.E. A/L Past paper
Mathematics 1 & 11
Click the link below for English medium paper

English medium
Click the link below for Tamil medium paper

Tamil medium
Click the link below for Sinhala medium paper

Sinhala medium
Mathematics Past Paper (In 3 Languages) Mathematics Past Paper (In 3 Languages) Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5

அதிபர் நியமனம்: விஷேட அறிவித்தல்:

September 20, 2019
இலங்கை அதிபர் சேவை 111 ஆம் தரத்த்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் 2018(2019) தொடர்பாக 2019.09.21 ஆம் திகதி அலரி மாளிகையில் நடாத்தப்படுவதற்கிருந்த நியமனம் வழங்கும் வைபவம் 
அன்றைய தினத்தில் நடாத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதிபர் நியமனம்: விஷேட அறிவித்தல்: அதிபர் நியமனம்: விஷேட அறிவித்தல்: Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு..

September 20, 2019
ஜனாதிபதித் தேர்தலில் தம்மால் குறிப்பிட்ட வாக்கு பதிவு மத்திய நிலையத்தில் வாக்களிப்பதற்கு நியாயமான அச்சம் இருக்குமாயின் அந்த வாக்காளருக்கு 
வேறொரு வர்க்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்கை அளிப்பதற்காக விண்ணபிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
அச்சம் உள்ள வாக்காளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்ப பத்திரம் 
அனைத்து மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தரினால் உறுதி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
(அ.த.தி)
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு.. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு.. Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5

காணாமல் போனோருக்கான கொடுப்பணவு..

September 20, 2019
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இடைக்கால கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 
நவம்பர் மாதத்தில் இருந்து ஆறாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
முப்படை மற்றும் பொலிஸ் சேவையில் இருந்தபோது காணாமல் போனோர்களின் குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கவுள்ளது. தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக 
சான்றுப்படுத்தும் அறிக்கையை முன் வைக்கும் குடும்பங்கள் இந்த இடைக்கால கொடுப்பனவு பெறத் தகுதி பெறுவர் என, காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக இந்த சான்று பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் இடைக்கால கொடுப்பனவு வைப்பலிடப்படவுள்ளன. இழப்பீட்டு காரியாலயத்தினால் நஷ்டஈடு மற்றும் வேறு விதமான கொடுப்பனவுகள் கிடைக்கும் வரை குறித்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 656 குடும்பங்கள் இந்த சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
காணாமல் போனோருக்கான கொடுப்பணவு.. காணாமல் போனோருக்கான கொடுப்பணவு.. Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5

20-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

September 20, 2019
20-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம்.
இதில்,

அரச தொழில் வாய்ப்பு
தடைதாண்டல் பரீட்சை

கற்கை நெறி போன்ற பல்வேறு விடையங்கள் அடங்கியள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Gazzette-Tamil
20-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 20-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5

எரிவாயு குறைந்தது: பால்மா கூடியது:

September 19, 2019

12.5 Kg எரிவாயுவின் (காஸ் சிலிண்டர்) விலை 
250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்க்கைச் செலவினக் குழு அனுமதி அளித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு வாழ்க்கைச் செலவினக் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை
 
20 ரூபாவால் அதிகரிப்பதற்கும் அந்தக் குழு அனுமதியளித்துள்ளது.
(அ.த.தி)
எரிவாயு குறைந்தது: பால்மா கூடியது: எரிவாயு குறைந்தது: பால்மா கூடியது: Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

10% ஆன ஆசிரியர்கள் சேவைக்குப் பொருத்தமற்றவர்கள்

September 19, 2019


ஆசிரியர் சேவையிலுள்ள சுமார் 280,000 பேரில் சுமார் 10% சதவீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட

புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணமாகும் என்றும் குறிப்பிட்டார். 
நேற்று(18) முற்பகல் குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
(அ.த.தி) 
10% ஆன ஆசிரியர்கள் சேவைக்குப் பொருத்தமற்றவர்கள் 10% ஆன ஆசிரியர்கள் சேவைக்குப் பொருத்தமற்றவர்கள் Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம்

September 19, 2019


கல்விப் போதனைகளுடன் மட்டும் ஆசிரியர்களின் பணி முடிந்துவிடாது என்றும் பாடசாலையின் மாணவர்கள் குறித்த பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(18) முற்பகல் குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன 

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். 
மேலும் பிள்ளைகள் நவீன தொழிநுட்பத்துடன் முன்நோக்கி செல்கின்றபோது வகுப்பறையின் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரியரின் அறிவு இற்றைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். 

வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சாந்த பண்டார, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர்களான தர்மசிறி தசநாயக்க, அதுல விஜேசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  
இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டது. 100 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 
(அ.த.தி) 
பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம் பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

September 19, 2019


பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துப் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது? என்று பாராளுமன்ற அமர்வின் போது வாய்மூலம் கேட்ட கேள்விக்கு 

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும் இன்றைய தினம் நீர் விநியோகம் மறறும் வடிகால் அமைப்பு சபைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப்பரீட்சை

 சட்ட ரீதியாகும் என்றும் தெரிவித்தார்.  
(அ.த.தி)
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

2019 உயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

September 19, 2019


கடந்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பிலான விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


பாட இல, பாடம், பரீட்சை நடைபெறும் திகதி, மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெறும் திகதி இங்கு தரப்பட்டுள்ளன.


பாட இல        பாடம்                            பரீட்சை  திகதி        மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெறும் திகதி 
     28       மனைப் பொருளியல்    2019.10.19 – 2019.10.26                                      2019.10.14,15 
     52      நாடகம் (தேசிய)              2019.09.24 – 2019.10.06                                      2019.09.18,19 

     53       நடனம் (பரதம்)                 2019.09.24 – 2019.10.06                                      2019.09.20 
     54       கீழைத்தேய சங்கீதம்    2019.09.24 – 2019.10.06                                       2019.09.17 

     55       கர்நாடக சங்கீதம்           2019.09.24 – 2019.10.06                                        2019.09.21 
     56       மேற்கத்தேய சங்கீதம் 2019.09.24 – 2019.10.06                                               - 
     57       நாட்டிய நடனக்கலை(சிங்களம்) 2019.09.24 – 2019.10.06                  2019.09.20
 
     58       நாட்டிய நடனக்கலை (தமிழ்) 2019.09.24 – 2019.10.06                        2019.09.16 
     59       நாட்டிய நடனக்கலை (ஆங்கிலம்) 2019.09.24 – 2019.10.06                       - 
     65      பொறியியல் தொழில்நுட்பம் 2019.09.28 – 2019.10.09                         2019.09.23,24 
     66      உயிரியல் பௌதீக தொழில்நுட்பம் 2019.10.31 – 2019.11.06            2019.10.23,24,25
(அ.த.தி)
2019 உயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2019 உயர் தர செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

Chemistry Past Paper (in 3 Languages)

September 19, 2019

Examination Department
Chemistry past paper 1 & 11
click the link below to English medium paper


English medium paper
click the link below to Tamil medium paper


Tamil medium paper
click the link below to Sinhala medium paper


sinhala medium paper


Chemistry Past Paper (in 3 Languages) Chemistry Past Paper (in 3 Languages) Reviewed by irumbuthirai on September 19, 2019 Rating: 5

17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 18, 2019
17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம்.
இதில்,

'தகவல் மாதம்' பிரகடனம்,
தற்காலிக ஊழியர்களுக்கு

நிரந்தர நியமனம் வழங்குதல் நிலக்கரியை கொள்வனவு செய்தல்
 உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்... 
இதன் முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

cabinet decision
17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 17.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 18, 2019 Rating: 5

வெளிவாரி பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்

September 18, 2019



நாளை (18)ம் திகதி புதன்கிழமை அலரிமாளிகையில் வழங்கப்படவுள்ள வெளிவாரி பட்டதாரி பயிலுனர் நியமனத்துக்கான


அழைப்புக்கடிதம் கிடைக்காத மட்டக்களப்பு பட்டதாரிகள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்றுக்குகிடைத்த அங்கீகாரத்திற்கு அமைய தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு 2012-2013 கல்வியாண்டில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை


பூர்த்தி செய்தவர்களுக்கு நாளை புதன்கிழமை பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப் படவுள்ளது . அன்றயதினம் காலை 8மணிக்கு அலரிமாளிகையில் வழங்கப்படவுள்ள பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து


326 வெளிவாரி பட்டதாரிகளை குறித்த அமைச்சு தெரிவுசெய்திருப்பதாகவும் இவ்வாறுதெரிவு செய்யப்படடவர்களின் பட்டியல்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் மற்றும் சகல பிரதேசசெயலாளர் அலுவலகங்களின் விளம் பரப்பலகையிலும் நேற்று (16) மாலை போடப்பட்டிருப்பதாகவும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ காந்த் தெரிவித்தார்.
இந்த நியமனத்துக்கான அழைப்புக்கடிதம் கிடைக்காதவர்கள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று தமது உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று புதன்கிழமை 18ம் திகதி பிரதமரின் அலறி மாளிகைக்குச்சென்று இந்த நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
வெளிவாரி பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் வெளிவாரி பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on September 18, 2019 Rating: 5
Powered by Blogger.