ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு: நீடிக்கப்பட்ட விண்ணப்ப கால எல்லை:
irumbuthirai
September 30, 2019
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நீடிப்பது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில்
கடந்த சில தினங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை கவனத்திற்கொண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு: நீடிக்கப்பட்ட விண்ணப்ப கால எல்லை:
Reviewed by irumbuthirai
on
September 30, 2019
Rating:
