2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்..

October 08, 2019


மனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மூவருக்கு 2019 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும், 

மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ஒட்சிசனை உணர்ந்து, எடுத்துக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளைச் மேற்கொணடுள்ளனர். இவர்களின் ஆய்வுகள் எதிர்காலத்தில் புற்றுநோய், பக்கவாதம், தீவிரமான நோய்வாய்ப்படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும். நேற்று இந்த விருது தொடர்பான அறிவிப்பு 

சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டொக்ஹோமில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கெலின் மற்றும் கிரேக் செமென்சா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ரெட்கிளிப் ஆகியோர் 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கு வழங்கப்படும் நோபல் விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். நோபல் பரிசுத்தொகையானது 9.18 இலட்சம் டொலர் ஆகும். இந்த பரிசுத்தொகையானது மூவரிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.  
(அ.த.தி)
2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்.. 2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்.. Reviewed by irumbuthirai on October 08, 2019 Rating: 5

Price of 30 more drugs to be controlled

October 08, 2019


Minister Dr. Rajitha Senaratne says that the price of 30 more types of medicinal drugs will be regulated. Minister Senaratne said that a number of new recruitments to the Health Management will be made soon and new technologies will be made available to make the decision making process more efficient in the health sector. 
He was addressing the Annul General Meeting of the Health Management assistants held at Biyagama Village recently. Senaratne pointed out that currently the Health Service gives free stents and lenses.A total of over 

1500 Cochlear Implant Surgeries have been done free of charge. This government had invested so much money on health care. The prices of 73 drugs have already been reduced and the price of 30 more drugs will be reduced soon.
“According to a study by Prof. Galappatty the benefit gained by Sri Lankans through these price reductions (annually) are Rs. 4.4 billion. People are now using high quality drugs and as people use medicines as prescribed, they are healthier. The results can will be visible in two years as the life expectancy of people increase,” he added
(GID)
Price of 30 more drugs to be controlled Price of 30 more drugs to be controlled Reviewed by irumbuthirai on October 08, 2019 Rating: 5

GIT Exam: Application for Selection of Marking Examiners

October 06, 2019

Examination Department
GIT Exam
 Application for Selection of Marking Examiners
Closing date:


2019-10-08
Click the link below to get application:


application
GIT Exam: Application for Selection of Marking Examiners GIT Exam: Application for Selection of Marking Examiners Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல்

October 06, 2019

இந்த வருடம் (2019) இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தலாக மாறுகிறது. இம்முறை என்றும் இல்லாதவாறு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 19 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 2 வேறு அரசியல் கட்சிகளும் 19 சுட்யேட்சை வேட்பாளர்களுமாக 41 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் 

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளனர்..கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். 
இதேவேளை எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இடம்பெறவுள்ளது. 11.30ற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிக்க முடியும். 
கட்டுப்பணம் செலுத்திய 41 பேரின் விபரங்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல் Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்: பார்வையிடும் முறைகள் இதோ...

October 06, 2019


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பார்வையிடும் முறைகள் இதோ.... பரீட்சைத் திணைக்கள இணையத்தள முகவரியில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


results
பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பெற முடியாவிட்டால் கீழுள்ள லிங்க் ஐக் கிளிக் செய்து பார்வையிடுக.


Gr 5 result 
இது தவிர செல்லிட தொலைபேசி வாயிலாக பார்வையிடும் முறைகள் இதோ..

EXAMS என டைப் செய்து இடைவெளிவிட்டு சுட்டெண்ணை டைப் செய்து கீழுள்ள வலையமைப்புக்களுக்கேற்ப உரிய இலக்கங்களுக்கு SMS செய்க.

Dialog 7777
Mobitel 8884


Hutch 8888
Etisalat 3926.
Airtel 7545
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்: பார்வையிடும் முறைகள் இதோ... வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்: பார்வையிடும் முறைகள் இதோ... Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

அடுத்த வாரம் என்றிருந்த தரம் 5 பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகின.. பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது

October 06, 2019

இந்த வருடம் (2019) நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பரீட்சைத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பெறுபேறுகளைப் பார்வையிடுக.

result
அடுத்த வாரம் என்றிருந்த தரம் 5 பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகின.. பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது அடுத்த வாரம் என்றிருந்த தரம் 5 பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகின.. பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

October 05, 2019

கிராம உத்தியோகத்தர்கள் இரு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர். சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சேவகர்களும் எதிர்வரும் 

16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். கிராம உத்தியோகத்தர் சேவையை தனியொரு சேவையாக அறிவிக்குமாறும், தமக்கு 5000 ரூபா சலுகை கொடுப்பனவை பெற்றுத் தருவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிப்பதாக தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அதனை 

சமர்பிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த மாதம் 9 ஆம் மற்றும் 10 திகதிளில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் எல்பிட்டிய பிரதேச தேர்தல் நடைபெறுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் தமது போராட்டத்தை முன்னேடுக்க போவதாக அந்த தொழிற்;சங்கத்தின் தலைவர் கே.டி.சுமித் கொடிகார கூறியுள்ளார்.
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள் Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு

October 05, 2019

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதில் தமது பிள்ளைகளை சித்தியடைய வைக்க பெற்றார் படும் கஷ்டங்கள் தியாகம் எண்ணிலடங்கா. அந்தவகையில் இம்முறை இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறுக்காக 

ஆவலோடு பலரும் காத்திருப்பர். இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

October 05, 2019

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

பதிவாளர் நாயக திணைக்கள பதவி வெற்றிடங்கள், 
விவசாய திணைக்கள தர கற்கை நெறி உட்பட பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர்

October 03, 2019


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்களை வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரச்சார பதாதைகளையும் பெனர்களையும் அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொண்டோம். அவை அகற்றப்படா விட்டால் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவற்றை அகற்றுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(அ.த.தி)

வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர் Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி

October 03, 2019


அண்மையில் கல்வி அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுக்கு நேற்று முதல் மகரம கல்வியற் கல்லூரியில் உள்ளக பயிற்சி ஆரம்பமானது. இது தொடர்பான நிகழ்வில் 

கல்வி அமைச்சரும் சட்டத்தரணியுமான அகிலவிராஜ் காரிவசம் உரையாற்றினார். கல்வித் துறையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் டெப் கணனியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போழுது வசதி செய்யப்பட்டுள்ளது. இது இலவச கல்வியில் ஏற்பட்ட பாரிய புரட்சியாகும். இந்த புரட்சி விளையாட்டிற்குரிய 

விடயம் அல்ல. சர்வதேசத்துடன் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப கல்வி துறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தொரிவித்தார்.
(அ.த.தி)
அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம்

October 03, 2019


பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகிதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையமானது தற்போது 

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும். இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும். கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும். இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 

5 ஆக அதிகரித்துள்ளது. இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.
(அ.த.தி)
பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம் பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம் Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages

October 02, 2019


Examination Department
past paper
G.C.E. (A/L)
Electrical , Eletronic and Information Technology (1 & 11)
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for Sinhala medium paper


Sinhala
Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5
Powered by Blogger.