75 வீத வாக்குப் பதிவோடு நிறைவடைந்தது தேர்தல்: இரவு 10 மணிக்கு முன் பெறுபேறு:
irumbuthirai
October 11, 2019
இன்று (11-10-2019) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 75 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்புக்களை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் இந்த தேர்தல் போன்று ஜனாதிபதி தேர்தலும் அமைதியான முறையில் நடைபெறவேண்டும். சட்டம் முறையாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எல்பிட்டிய மக்கள் தேர்தலுக்காக
சண்டை போடுபவர்கள் அல்ல என்று தெரிவித்த அவர் 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்குகள் இன்று மாலை 4.00 மணிக்கு பின்னர் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து தேர்தல் பெறுபேறுகள் காலி தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடாக அறிவிக்கப்படும். பெறுபேறுகள் இரவு 10 மணிக்கு முன் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
75 வீத வாக்குப் பதிவோடு நிறைவடைந்தது தேர்தல்: இரவு 10 மணிக்கு முன் பெறுபேறு:
Reviewed by irumbuthirai
on
October 11, 2019
Rating:
