மேல் மாகாண ஆசிரியர் நியமனம்
irumbuthirai
October 12, 2019
மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப் பெற்ற
547 பட்டதாரிகளில் இருந்து 205 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த பயிற்சி எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகள்
மேல் மாகாண பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். எஞ்சிய பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் இம் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்று என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மேல் மாகாண ஆசிரியர் நியமனம்
Reviewed by irumbuthirai
on
October 12, 2019
Rating: