Test flight to Jaffna International Air port

October 15, 2019


Today, Test flight to Jaffna from India arrived linking Palali International airport in Jaffna and Chennai in South India.
(GID)
Test flight to Jaffna International Air port Test flight to Jaffna International Air port Reviewed by irumbuthirai on October 15, 2019 Rating: 5

Agro Technology Past Paper (In 3 Languages)

October 13, 2019

Examination Department
Past paper
General Certificate of Education (Advanced Level) Examination - 2017 August
Agro Technology (1 & 11)
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for Sinhala medium paper


Sinhala
Agro Technology Past Paper (In 3 Languages) Agro Technology Past Paper (In 3 Languages) Reviewed by irumbuthirai on October 13, 2019 Rating: 5

சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி: சாதித்த இலங்கை மாணவன்:

October 13, 2019

சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி இந்தோனேசியாவில் கடந்தவாரம் நடைபெற்றது. இதில் கல்முனை பற்றிமா கல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவு மாணவன் கி.முகேஷ் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளார். 
இதில் 19வயதுக்குக் உடபட்டவர்களுக்கான போட்டியில் 

SAFETY HELMET எனும் பயணங்களின் போது ஏற்படும் விபத்துகளுக்கு பயன்படுத்தக்கூடிய கண்டுப்பிடிப்புக்காக வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி: சாதித்த இலங்கை மாணவன்: சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி: சாதித்த இலங்கை மாணவன்: Reviewed by irumbuthirai on October 13, 2019 Rating: 5

அங்கத்தவர்களின் பெயரோடு வெளிவரவுள்ள வர்த்தமானி

October 13, 2019

எதிர்வரும் புதன்கிழமை வெளிவரவுள்ள வர்த்தமானியில் அண்மையில் நடந்து முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவரவுள்ளன.  25 சதவீத 

பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தமது அங்கத்தவர்களைப் பெயரிட்டு அனுப்புமாறு அந்தந்தக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.  பெயர்ப் பட்டியலை வர்த்தமானியின் மூலம் அறிவித்த பின்னர், 

பிரதேச சபையின் ஆரம்பக் கூட்டம் நடைபெறும் தினம் அறிவிக்கப்படும். தலைவரும் பெயரிடப்படுவார் என்று காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண மேலும் தெரிவித்தார். 
(அ.த.தி)
அங்கத்தவர்களின் பெயரோடு வெளிவரவுள்ள வர்த்தமானி அங்கத்தவர்களின் பெயரோடு வெளிவரவுள்ள வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 13, 2019 Rating: 5

பல்கலைக்கழக புதிய மாணவர் அனுமதி தொடர்பான அறிவித்தல்

October 13, 2019

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும். அதேவேளை கடந்த வருடத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி

 நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார். அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று தெரிவித்த அவர் பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு மாத காலம் 

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. தொழில்சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்ட போது பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும முதல் சுற்றுத் தெரிவு பூர்த்தி செய்யப்பட்டு வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டார். மருத்துவ மற்றும் பொறியியல் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இரத்தினபுரி - குளியாப்பிட்டிய புதிய வைத்திய பீடங்கள் ஆரமபிக்கப்படுவதுடன், மருத்துவ கற்கை நெறியைத் தொடர்வதற்காக பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 

200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்திய பீடங்களுக்குத் தேவையான கட்டிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன மேலும தெரிவித்தார்.
(அ.த.தி)
பல்கலைக்கழக புதிய மாணவர் அனுமதி தொடர்பான அறிவித்தல் பல்கலைக்கழக புதிய மாணவர் அனுமதி தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on October 13, 2019 Rating: 5

மேல் மாகாண ஆசிரியர் நியமனம்

October 12, 2019

மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப் பெற்ற 

547 பட்டதாரிகளில் இருந்து 205 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த பயிற்சி எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகள் 

மேல் மாகாண பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். எஞ்சிய பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் இம் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்று என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 
(அ.த.தி)
மேல் மாகாண ஆசிரியர் நியமனம் மேல் மாகாண ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on October 12, 2019 Rating: 5

2019 ஆம் ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசைப் பெறுவோர்

October 11, 2019


1901 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நோபல் குழுவிடம் இருந்து, இதுவரை 183 பேர் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஆண்டின் இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆய்வில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக 2019ஆம் ஆண்டின் இரசாயனவியல் துறைக்கான நோபல் 

3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 97 வயது ஜோன் பி குட் எனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரோ யோஷினோ இரசாயனவியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர். மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயர்ன் மின்கலம் மீதான இவர்களது ஆய்வுமுடிவை பாராட்டி நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. 

1970ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், ஸ்டான்லி விட்டிங்ஹாம் முதன்முறையாக லித்தியம் மின்கலன்களை உருவாக்கினார். ஜோன் குட் எனாப், அந்த லித்தியம் மின்கலத்தின் செயற்திறனை இருமடங்காக உயர்த்தினார். இதன்மூலம் அனைத்து இலத்திரனியல் சாதனங்களில் இதன் பயன்பாடு இன்றியமையாததாக அமைந்தது. அகிரோ யோஷினோ லித்தியம் மின்கலத்தில் உள்ள தூய லித்தியத்தை அகற்றி, 

லித்தியம் அயனிகளை பயன்படுத்தி அதன் பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்தார். தற்போது நடைமுறையில் இந்த லித்தியம் அயனி மின்கலன்களே பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

2019 ஆம் ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசைப் பெறுவோர் 2019 ஆம் ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசைப் பெறுவோர் Reviewed by irumbuthirai on October 11, 2019 Rating: 5

இந்த ஆண்டு (2019) வழங்கப்படும் 100ஆவது அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுபவர் இவர்தான்..

October 11, 2019


ஆல்பிரட் நோபலின் உயிலின்படி உலக அமைதிக்கான நோபல் பரிசை நோர்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் 

அபி அகமட் அலிக்கு 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்கப்படுவது 100வது அமைதிக்கான நோபல் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான எரித்ரியாவுடனான சிக்கலான எல்லை பிரச்சினையை 

தீர்த்ததற்காகவும் அமைதியை ஏற்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்புக்காக அவரின் முயற்சிக்காகவும், அகமட் அலிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
(அ.த.தி)
இந்த ஆண்டு (2019) வழங்கப்படும் 100ஆவது அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுபவர் இவர்தான்.. இந்த ஆண்டு (2019) வழங்கப்படும் 100ஆவது அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுபவர் இவர்தான்.. Reviewed by irumbuthirai on October 11, 2019 Rating: 5

75 வீத வாக்குப் பதிவோடு நிறைவடைந்தது தேர்தல்: இரவு 10 மணிக்கு முன் பெறுபேறு:

October 11, 2019


இன்று (11-10-2019) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 75 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, 

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்புக்களை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் இந்த தேர்தல் போன்று ஜனாதிபதி தேர்தலும் அமைதியான முறையில் நடைபெறவேண்டும். சட்டம் முறையாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். எல்பிட்டிய மக்கள் தேர்தலுக்காக 

சண்டை போடுபவர்கள் அல்ல என்று தெரிவித்த அவர் 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்குகள் இன்று மாலை 4.00 மணிக்கு பின்னர் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து தேர்தல் பெறுபேறுகள் காலி தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடாக அறிவிக்கப்படும். பெறுபேறுகள் இரவு 10 மணிக்கு முன் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
75 வீத வாக்குப் பதிவோடு நிறைவடைந்தது தேர்தல்: இரவு 10 மணிக்கு முன் பெறுபேறு: 75 வீத வாக்குப் பதிவோடு நிறைவடைந்தது தேர்தல்: இரவு 10 மணிக்கு முன் பெறுபேறு: Reviewed by irumbuthirai on October 11, 2019 Rating: 5

09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 11, 2019


09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
 பல்வேறு முக்கிய தீர்மானங்கள் அடங்கிய இதன்
முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Cabinet dec
09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 11, 2019 Rating: 5

11-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

October 11, 2019


11-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதில், 

பதிவாளர் நாயக திணைக்கள பதவி வெற்றிடம், 
நீதிமன்ற ஏல விற்பனை 
உள்ளிட்ட பிற அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
இதனை முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

11-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 11-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 11, 2019 Rating: 5

சாதாரண தர செயன்முறை பரீட்சை

October 11, 2019


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை தொடர்பிலான விசாரணைகளுக்கு விசேட அழைப்பிலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அடையாள அட்டை கிடைக்காத பரீட்சை விண்ணப்பதாரிகள் 

0115 226 115 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
(அ.த.தி)

சாதாரண தர செயன்முறை பரீட்சை சாதாரண தர செயன்முறை பரீட்சை Reviewed by irumbuthirai on October 11, 2019 Rating: 5

வறிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு..

October 10, 2019


உலகில் வறிய நாடுகளின் அறிக்கை ஒன்றை Focus Economics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 126 நாடுகளில் உள்ளுர் உற்பத்தியை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த பட்டியலில் உலகில் வறிய நாடுகளின் மத்தியில் முதலாவது இடத்தில் 

கொங்கோ குடியரசு இடம்பெற்றுள்ளது. உலகில் வறிய நாடுகள் மத்தியில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களின் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டா நாடுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை இந்த வறிய நாடுகளின் மத்தியில் 

36 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. பொருளாதார ஆய்வு நிறுவனம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் வறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 36 ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த பட்டியலில் 19 ஆம் மற்றும் 12 ஆம் இடங்களில் இடம்பெற்றுள்ளன. சீனா 69 ஆவது இடத்திலும் அமெரிக்கா இந்த பட்டியலில் 121 ஆவது இடத்திலும், ரஷ்யா 71 ஆவது இடத்திலும்  இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
வறிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு.. வறிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு.. Reviewed by irumbuthirai on October 10, 2019 Rating: 5
Powered by Blogger.