ஆயுத அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல்
irumbuthirai
October 22, 2019
ஆயுத அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ளது. ஆயுதங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ள நபர்கள், நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டுக்கான ஆயுத அனுமதிப்பத்திரத்தை
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 2019 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் 2020 ஆம் ஆண்டுக்கான
ஆயுத அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படமாட்டாது என்று பாதுக்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டளைச்சட்டத்தின் 22 ஆவது சரத்தின் விதிகளுக்கு அமைவாக அனுமதிப்பத்திரம் இன்றி ஆயுதங்களை வைத்திருப்பது தண்டணைக்குரிய குற்றமாகும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயுத அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல்
Reviewed by irumbuthirai
on
October 22, 2019
Rating: