ஹோட்டல் கற்கை நெறி

October 28, 2019


சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில்இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம் 

யாழ்ப்பாணதில்  ஹோட்டல் கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளது. யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் கற்கை நெறி தொடர்பான தமது கிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளதாக, இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனூடாக, வட மாகாணத்தில் சுற்றுலாத்துறைதொடர்பில் பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஹோட்டல் கற்கை நெறி ஹோட்டல் கற்கை நெறி Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி

October 28, 2019


2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அடையாள அட்டை இல்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் 

9 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பொற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்டத்தில் வேலை செய்பவராயின் தோட்ட அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளப்படும் இதற்கான உறுதிச் சான்றிதழை 

மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும். ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் போது இந்த தற்காலிக அடையாள அட்டை, வாக்காளர் வாக்களிகத்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்று மேலதிக ஆணையாளர் தெரிவித்தார். 
(அ.த.தி)
தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

இன்று ஆரம்பமாகும் சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள்

October 28, 2019


2019 கல்வி பொதுத்தரதார சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாவதாக,பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் 

எட்டாம் திகதி வரை நடைபெறும். செயல்முறைபரீட்சைக்காக ஒரு இலட்சத்து 74 ஆயிரம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இன்று ஆரம்பமாகும் சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகும் சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

October 25, 2019

25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

அரச வேலைவாய்ப்பு, 
தொழில்நுட்பக் கல்லூரிகளில் பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் 

போன்ற பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 25, 2019 Rating: 5

Political Science Past Paper in Three Languages

October 25, 2019

Examination Department
General Certificate of Education (Advanced Level) Examination
Past Paper
Political Science (1 & 11)
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for Sinhala medium paper


Sinhala

Political Science Past Paper in Three Languages Political Science Past Paper in Three Languages Reviewed by irumbuthirai on October 25, 2019 Rating: 5

திங்கட்கிழமை விஷேட விடுமுறை கிடைக்கும் பாடசாலைகள்

October 25, 2019


இம்மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து 

தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (27) என்பதினால் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்து மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர், சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக 

வேறொரு பொருத்தமான தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கு பாடசாலை அதிபர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என். எம். ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
திங்கட்கிழமை விஷேட விடுமுறை கிடைக்கும் பாடசாலைகள் திங்கட்கிழமை விஷேட விடுமுறை கிடைக்கும் பாடசாலைகள் Reviewed by irumbuthirai on October 25, 2019 Rating: 5

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை

October 25, 2019


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை  தோற்றிய விசேட தேவைகளைக் கொண்ட 250 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தரம் 13 வரை இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வரை 15,000 மாணவர்கள் மாத்திரம் இந்தப் புலமைப்பரிசிலைப் பெற்றனர். இந்த வருடம் முதல் இந்த எண்ணிக்கையை 20,000 வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இவர்களில் 19,750 மாணவர்களுக்கு 

அவர்கள் பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளியின் அடிப்படையில் புலமைப்பரிசில் வழங்கப்படும். எனினும், விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு இந்தப் பரீட்சையில் தோற்றியதை அடிப்படையாகக் கொண்டு புலமைப்பரிசிலை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புலமைப்பரிசில் கொடுப்பனவை 500 ரூபா முதல் 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை Reviewed by irumbuthirai on October 25, 2019 Rating: 5

அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள்

October 24, 2019


அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான அரசாங்கத்தின் செலவினத்தை சமாளிப்பதற்காக ஆயிரத்து 474 பில்லியன் ரூபா பெறுமதியான இடைக்கால கணக்கீட்டு அறிக்கையை  சமர்ப்பித்தார். இதில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, 

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்படும் 14 நாள் விசேட கொடுப்பனவு டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் புதிய கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. 
அரச ஊழியர்களின் அனர்த்த கடனை உயர்ந்தபட்ச தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து மூன்று லட்சத்து 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி வீதம் மூன்று சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இன்னும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் முழு விபரத்தை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் Reviewed by irumbuthirai on October 24, 2019 Rating: 5

Short Course in Professional Computer Applications

October 24, 2019


Short Course in Professional Computer Applications at Open university of Sri lanka
The Department of Computer Science conducts the Certificate in Professional Computer Applications (CPCA) that would enhance the knowledge and skills of the students in Computer Applications.
For Whom:


School Leavers, Employees of Government Ministries, Departments, Corporations & Private Sector Employees, University Students and those who wish to enhance their knowledge in Office Applications.
Closing Date for Applications:


03rd November 2019
Click the link below for more details


Details
Click the link below for Application


Application
Short Course in Professional Computer Applications Short Course in Professional Computer Applications Reviewed by irumbuthirai on October 24, 2019 Rating: 5

2019 கல்வி பொது தராதர சாதாரண தர நுண்கலை செயன்முறைப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

October 24, 2019


 நாடு முழுவதிலும் உள்ள 1,295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். மேற்படி செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. சங்கீதம் (மேற்கத்தேய) பரீட்சை அடுத்த மாதம் 

3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்கள் பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விபரத்தை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

2019 கல்வி பொது தராதர சாதாரண தர நுண்கலை செயன்முறைப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் 2019 கல்வி பொது தராதர சாதாரண தர நுண்கலை செயன்முறைப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on October 24, 2019 Rating: 5

Geography Past Paper in Three Languages

October 23, 2019


Department of Examination
General Certificate of Education (Advanced Level) Examination
Geography (1 & 11)
Click the link for English medium paper


English
Click the link for Tamil medium paper


Tamil
Click the link for Sinhala medium paper


Sinhala
Geography Past Paper in Three Languages Geography Past Paper in Three Languages Reviewed by irumbuthirai on October 23, 2019 Rating: 5

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தெரிவுக்குழு வெளிப்படுத்திய விடையங்கள் இதோ....

October 23, 2019


உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய சில தரப்பினர் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  தாக்குதலை தடுப்பதற்கு தவறியவர்களின் பெயர்கள் இந்த அறிக்கையில் பின்வருமாறு உள்ளடக்கப்பட்டுள்ளது. 

அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர், 
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் 
ஆகியோர் இதில் இடம்பெற்றிருப்பதாக தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த அறிக்கையை சபாநாயகர் மூலம் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க முடியும். 
இதுமட்டுமன்றி உலகில் நிலவும் பயங்கரவாத்ததுடன் நமது நாட்டில் நிலவும் சட்ட விதிகள் அதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கபட வேண்டும் என்றும் இந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். எமது மக்கள் இது தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால் இந்த விசேட தெரிவுக்குழு அதற்கான நடவடிக்கை மேற்கொண்டது. எவருக்கும் தண்டனை விதிப்பது குழுவின் நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்தார். 
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கவில்லை. இந்த அறிக்கையின் ஊடாக எட்டு சிபார்சுகளை முன்வைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டார். அவையாவன,

பாதுகாப்பு மற்றும் இராணுவ சேவைகளை மீளமைத்தல், 
நிதித் துறையை கண்காணிக்கும் வலுவான முறைமையை ஸ்தாபித்தல், 
மத ரீதியான கடும்போக்குவாதத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்தல், ஊடகங்களைக் கட்டுப்படுத்தி போலிச் செய்திகள் பரவுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் 

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்தல், அடிப்படைவாத்ததை கட்டுப்படுத்தும் வகையில் கல்வி முறைமையை மீளமைத்தல் என்பன அந்த எட்டு சிபார்சுகளாகும். 
ஒரு குழுவென்ற வகையில் எவரையும் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாததன் காரணமாக சிபார்சுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்தார். இந்த குழுவின் உறுப்பினரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில் 

இந்த அறிக்கையை தயாரிக்கும் பொழுது எந்தவொரு விடயத்தையும் மறைப்பதற்கோ அல்லது அழுத்தத்தை மேற்கொள்வதற்கோ தாம் முயற்சிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தெரிவுக்குழு வெளிப்படுத்திய விடையங்கள் இதோ.... உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தெரிவுக்குழு வெளிப்படுத்திய விடையங்கள் இதோ.... Reviewed by irumbuthirai on October 23, 2019 Rating: 5

திரையரங்குகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா?

October 23, 2019


சினிமா அரங்கு மற்றும் டிஜிற்றல் (LED) திரைகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தக அறிவிப்புக்கள் பிரச்சாரம் செய்யப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை 

சவாலுக்குட்படுத்தி உயர் நீதி மன்றத்தில் இன்று (23) ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனுவை தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினால் சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மனுதாரான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் 

தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை இடைநிறுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரி மனுதாரரான நிறுவனம் கோட்டுக்கொண்டுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்கழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரமைகளை மீறுவதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
(அ.த.தி)
திரையரங்குகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா? திரையரங்குகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா? Reviewed by irumbuthirai on October 23, 2019 Rating: 5
Powered by Blogger.