01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 01, 2019
01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 
அரச வேலைவாய்ப்பு, 
பரீட்சை, 
நீதமன்ற ஏல விற்பனை 
போன்ற பல விடையங்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 01, 2019 Rating: 5

அரசியல் விளம்பரங்களுக்கு தடை

October 31, 2019


டுவிட்டர் எனப்படும் சமூகவலைத்தளத்தில் அரசியல் விளம்பரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர்சமூக வலைத்தளதின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெக் டோனி இது தொடர்பான அறிவிப்பைவெளியிட்டுள்ளார். அடுத்த மாதம்


முதல் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
அரசியல் விளம்பரங்களுக்கு தடை அரசியல் விளம்பரங்களுக்கு தடை Reviewed by irumbuthirai on October 31, 2019 Rating: 5

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ..

October 31, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 
அரை நாள் தொடக்கம் 2 நாட்கள் வரை வழங்கலாம். 
தூரத்தை அடிப்படையாகக் கொண்டு இது தீர்மானிக்கப்படும். 
இது தொடர்பான முழு விபரத்தையும் தூரத்திற்கேற்ப பெற முடியுமான லீவு விபரத்தையும் அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ.. அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ.. Reviewed by irumbuthirai on October 31, 2019 Rating: 5

29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 30, 2019


29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், 

யூரியாவை மேலதிகமாக இறக்குமதி செய்தல், 
முதியோர்களின் புகையிலை பாவணை தொடர்பான சர்வதேச ஆய்வு, 

'சிலோன் டி' மேம்படுத்தும் வேலைத்திட்டம், 
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விதிகள் மாற்றம், 
போன்ற பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டம். 
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? விளக்குகிறார் மஹிந்த

October 30, 2019


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார். வாக்களிக்கும் போது இலக்கம் ஒன்றினை பயன்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொண்டுள்ளார். 
இது தொடர்பான மேலதிக விளக்கத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? விளக்குகிறார் மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? விளக்குகிறார் மஹிந்த Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5

நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள்

October 30, 2019

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்  உள்ள சகல பாடசாலைகளும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன வலயத்தில் உள்ள பாடசாலைகளும் நாளையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்ட்டதாக 
தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். இப்பிதேசத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட தாக ஆளுநர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினமும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள் நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள் Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5

வாக்களிப்பு நேரம் நீடிப்பு

October 30, 2019


எதிர்வரும் 16ஆம்திகதி நடைபெறவுள்ள எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் காலை 7 மணிமுதல் 

மாலை 5 மணிவரை வாக்களிக்க முடியும். தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும், கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதனால், அவர்கள் அனைவரினதும் பெயர்கள் அடங்கிய வாக்குச்சீட்டின் நீளம் 

2 அடி 26 அங்குலமாக அமைந்துள்ளதால் வாக்காளர்களுக்கு உரிய முறையில் வாக்களிப்பதற்கான காலஅவகாசம் வழங்கும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
வாக்களிப்பு நேரம் நீடிப்பு வாக்களிப்பு நேரம் நீடிப்பு Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5

Logic and Scientific Method Past Paper in Three Languages

October 28, 2019

Examination Department
General Certificate of Education (Advanced Level) Examination
Logic and Scientific Method (1 & 11) Past paper
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for sinhala medium paper


Sinhala
Logic and Scientific Method Past Paper in Three Languages Logic and Scientific Method Past Paper in Three Languages Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு தபால் மா அதிபரின் வேண்டுகோள்

October 28, 2019

வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால்காரர் வீடுகளுக்குவரும் போது வீட்டில் நாய் முதலான செல்லப்பிராணிலிருந்து தபால்காரர்களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
(அ.த.தி)

செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு தபால் மா அதிபரின் வேண்டுகோள் செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு தபால் மா அதிபரின் வேண்டுகோள் Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

ஹோட்டல் கற்கை நெறி

October 28, 2019


சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில்இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம் 

யாழ்ப்பாணதில்  ஹோட்டல் கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளது. யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் கற்கை நெறி தொடர்பான தமது கிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளதாக, இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனூடாக, வட மாகாணத்தில் சுற்றுலாத்துறைதொடர்பில் பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஹோட்டல் கற்கை நெறி ஹோட்டல் கற்கை நெறி Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி

October 28, 2019


2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அடையாள அட்டை இல்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் 

9 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பொற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்டத்தில் வேலை செய்பவராயின் தோட்ட அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளப்படும் இதற்கான உறுதிச் சான்றிதழை 

மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும். ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் போது இந்த தற்காலிக அடையாள அட்டை, வாக்காளர் வாக்களிகத்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்று மேலதிக ஆணையாளர் தெரிவித்தார். 
(அ.த.தி)
தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

இன்று ஆரம்பமாகும் சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள்

October 28, 2019


2019 கல்வி பொதுத்தரதார சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாவதாக,பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் 

எட்டாம் திகதி வரை நடைபெறும். செயல்முறைபரீட்சைக்காக ஒரு இலட்சத்து 74 ஆயிரம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இன்று ஆரம்பமாகும் சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகும் சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

October 25, 2019

25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

அரச வேலைவாய்ப்பு, 
தொழில்நுட்பக் கல்லூரிகளில் பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் 

போன்ற பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 25-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 25, 2019 Rating: 5
Powered by Blogger.