புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்:
irumbuthirai
November 02, 2019
புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து அதனை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டமை, மற்றும் அவற்றை பரிமாறிய நபர்கள், இருவர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது
வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவை மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் இருவரும் கம்பளை பொலிஸ் நிலையத்தினால் பாடசாலை காவலாளி ஒருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுகின்றன.
(அ.த.தி)
புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்:
Reviewed by irumbuthirai
on
November 02, 2019
Rating: