நேபாளத்தில் சாதாரண தர பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்கள்
irumbuthirai
November 08, 2019
2019 ஆம் ஆண்டு நடைபெறும் சாதாரண தர பரீட்சைக்கு இலங்கை மாணவர்கள் 7 பேர் நேபாளத்திலிருந்து தோற்றவுள்ளனர். நேபாளத்தின் காத்மண்டு நகரில் இம்முறை நடைபெறவுள்ள
13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் 7 மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கல்வி பொது சாதாரண தர பரீட்டைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக கல்வி அமைச்சின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த மாணவர்களுக்கு நேபாளத்திலேயே இந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தினால்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் இணைப்பு நடவடிக்கையின் மூலம் போட்டியில் கலந்து கொள்ளும் சாதாரண தர பரீட்சார்த்திகளான இலங்கை மாணவர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேபாளத்திற்கு செல்லவுள்ள இலங்கை பரீட்டை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இந்த பரீட்சை தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த அதிகாரிகளின் விமான பயணச் செலவுகளை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது.
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் சட்ட விதிகளுக்கு அமைவாக பாதுகாப்பான முறையில் இலங்கையில் இந்த பரீட்டை நடைபெறும் நேரத்திற்கு அமைவாக இந்த மாணவர்களுக்கு நேபாளம் காத்மண்டு நகரில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு இந்த வசதிகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
நேபாளத்தில் சாதாரண தர பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்கள்
Reviewed by irumbuthirai
on
November 08, 2019
Rating: