நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய
irumbuthirai
November 18, 2019
எனது இந்த தேர்தலின் வெற்றிக்கு அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பௌத்த மத மஹா சங்கத்தினரது நல்லாசியே காரணமாகும். சிங்கள மக்களின் ஆதரவுடன் மாத்திரம் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன். இருப்பினும் நான் தமிழ், முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தேன் இந்த வெற்றியில் பங்காளிகளாக இருக்குமாறு. ஆனால்
அதற்கான பெறுபேறு திருப்திகரமாக அமையவில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானதாகும். எனது அரசாங்கத்தில் பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச மட்டத்தில் நடுநிலை கொள்கையை முன்னெடுப்பதே எனது நோக்கம். அதேவேளை நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, கௌரவம் முக்கியமானதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை இனிமேல் செயற்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். இதன் அடிப்படையில் நாம் சர்வதேச நாடுகளுடன் நடுநிலைக் கொள்கையை கையாள்வோம். தீவிரவாதம் அடிப்படைவாதம், போதைப்பொருள், வர்த்தகம், பாதாள உலகக்குழுவினர், குற்றவாளிகள் இல்லாத ஒரு சமூகத்தை நாம் நிச்சயமாக உருவாக்குவோம் என இலங்கையின் புதிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அவரது கன்னி உரையை முழுமையாக வாசிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய
Reviewed by irumbuthirai
on
November 18, 2019
Rating: