மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை..
irumbuthirai
November 29, 2019
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 4 மில்லியனுக்கு மேற்பட்ட பாடசாலை மணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் சில ஊடகங்களிலும், சில இணையத்தளங்களிலும்
வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் பொறுப்பற்ற வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்து செய்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இந்த காப்புறுதி பயனுள்ள திட்டமாகும் என்று அடையாளம் கண்டிருப்பதாகவும்
இதனை நடைமுறைப்படுத்துவதில் சீர்குலைவு மற்றும் தேவையற்ற செயற்பாடுகளை புறம்தள்ளி ஆகக்கூடிய நன்மைகளை பெறக்கூடிய வகையில் செயற்படுத்தப் படவேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை..
Reviewed by irumbuthirai
on
November 29, 2019
Rating: