பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை:

December 15, 2019


பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள. இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களது பிள்ளைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த புலமைப்பரிசில்கள் 

க.பொ.த. உயர்தரம் , பட்டப்படிப்பு கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில் நுட்ப கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானதாகும். க.பொ.த. சாதாரண தரத்தில் குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் 

இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு சான்றிதழ், க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் நிழற் பிரதிகளுடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அல்லது விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 3638, காலி வீதி , கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம் , இல. 31, ரஜபிகில்ல மாவத்தை , கண்டி ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் செயலாளர், CEWET மே/ பா , இந்திய உயர் ஸ்தானிகராலயம் , த.பெ.எண். 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
(அ.த.தி)
பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: Reviewed by irumbuthirai on December 15, 2019 Rating: 5

அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி

December 14, 2019


2020 தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து


83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் 1,000 புதிய தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுவதால் கிராம பிரதேசத்தில் உள்ள 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கு நன்மை கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தற்பொழுது உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு அமைவாக இதற்கான திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபா தொடக்கம் 1,000 பில்லியன் ரூபா வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
(அ.த.தி)
அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது

December 14, 2019


மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தமது தாய் அல்லது தந்தையின் மறைவின் போது 2 இலட்சம் ரூபா 

பாதுகாப்பு நன்மை கிடைக்கவுள்ளது.இது வரையில் இந்த பாதுகாப்பு நன்மை தாய் அல்லது தந்தையின் இயற்கை மரணத்திற்காக மாத்திரமே வழங்கப்பட்டது. இருப்பினும் எதிர்காலத்தில் இயற்கை மரணம் மாத்திரமன்றி எந்த சந்தர்ப்பத்திலாவது பெற்றோரை இழக்கும் மாணவர்களுக்கு அவர்களது எதிர்கால கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் குறிப்பிட்ட 2 இலட்சம் ரூபா நிதி நன்மையை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
இதற்கு அமைவாக 2019.12.01. திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் எந்தவொரு பாடசாலை மாணவரும் தமது தாய் அல்லது தந்தையில் எவராவது எந்த வகையிலும் இழக்கப்படும் பொழுது (தற்கொலை போன்றவை) சுரக்ஷா காப்புறுதியின் மூலம் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்த 2 இலட்ச ரூபா நன்மையை வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மாணவர்களின் தேக ஆரோக்கியத்துக்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த மாணவர்கள் காப்புறுதி மூலமான நன்மைகள் 5 வயது தொடக்கம் 21 வயது எல்லைக்கு பின்னரும் அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. சுரக்ஷா காப்புறுதி மூலமான நன்மைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது ஏதேனும் தாமதம் ஏற்படுமாயின்; கல்வி அமைச்சின் சுகாதர மற்றும் போசாக்கு கிளையுடன் 011 2784163 / 011 3641555 / 011 2784872 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும். 
(அ.த.தி)
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

December 14, 2019


13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

2019.12.10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 14, 2019


2019.12.10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 

1000 தேசிய பாடசாலைகள் திட்டம்
புதிய மும்மொழி பாடசாலை திட்டம் 
Z-Score நடைமுறையில் மாற்றம் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

2019.12.10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 2019.12.10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

இலங்கையில் புதிய முச்சக்கர வண்டி அறிமுகம்

December 14, 2019


சுற்றாடலுக்கு பொருத்தமான முச்சக்கர வண்டியாக சூரிய எரி சக்தியின் மூலம் செயற்படும் முச்சக்கர வண்டி முதன் முறையாக நாட்டில் நேற்று (13) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மீலக்க அரங்கில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. கொரிய நாட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இது தொடர்பாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சூரிய பெனர் ஒன்றின் மூலம் 

இலத்திரனியல் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய பெற்றி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் செயற்பாட்டுக்கு தேவையான எரி சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இலங்கையில் புதிய முச்சக்கர வண்டி அறிமுகம் இலங்கையில் புதிய முச்சக்கர வண்டி அறிமுகம் Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

Z .Score முறை மறுசீரமைப்பு ஏன்?

December 12, 2019


18 வருட நடைமுறையில் இருக்கும் தற்போதைய வெட்டுப்புள்ளி முறையில் மாற்றங்களை  மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் தற்போது அமுலில் உள்ள வெட்டுப்புள்ளி (Z.Score) முறையை மறுசீரமைக்க இருப்பதாக கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது தேசிய ரீதியிலான திறமைகளின் கீழ் பல்கலைக்கழங்களுக்கு 40 சதவீதமான மாணவர்களே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிகாட்டினார். மாவட்ட ரீதியில் 55 சதவீதத்தினரும், பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து 

மேலும் 5 சதவீதத்தினரும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதன் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் அமைச்சர் சுட்டிகாட்டினார். மாவட்ட முறை அடிப்படையில் கொழும்பில் முன்னணி பாடசாலை மாணவர்களுக்கும் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே புள்ளி முறைமையே கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் 3,098 கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் உண்டு. இந்த பாடசாலைகளில் 101 பாடசாலைகளிலேயே உயர் தரத்தில் கணிதப்பாடம் கற்பிக்கப்படுகின்றது. 926 பாடசாலைகளில் உயிரியல் விஞ்ஞானம் கற்பிக்கப்படுகின்றது. 440 பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடம் கற்பிக்கப்படுகின்றது மற்றும் 360 பாடசாலைகள் கலைப்பிரிவு பாடம் கற்பிக்கப்படுவதாகவும்; அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த 55 சதவீதத்தினரை இணைத்துக் கொள்ள வெட்டுப்புள்ளி மறுசீரமைப்பின் கீழ் ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
Z .Score முறை மறுசீரமைப்பு ஏன்? Z .Score முறை மறுசீரமைப்பு ஏன்? Reviewed by irumbuthirai on December 12, 2019 Rating: 5

தரம் 05 (தமிழ் மொழி): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 11, 2019


தரம் 05 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 05 (தமிழ் மொழி): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 05 (தமிழ் மொழி): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 11, 2019 Rating: 5

தரம் 10 வடிவமைப்பும் நிருமாணத் தொழினுட்பவியலும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 11, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி வடிவமைப்பும் நிருமாணத் தொழினுட்பவியலும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.  
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 வடிவமைப்பும் நிருமாணத் தொழினுட்பவியலும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 வடிவமைப்பும் நிருமாணத் தொழினுட்பவியலும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 11, 2019 Rating: 5

தரம் 10 சைவநெறி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 10, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி சைவநெறி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 சைவநெறி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 சைவநெறி  (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 10, 2019 Rating: 5

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை

December 10, 2019

கொழும்பு நாரஹன்பிட்டி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று (09) 
காலை நாரஹன்பிட்டியில் உள்ள மோட்டரர் போக்குவரத்து திணைக்களத்துக்கு அமைச்சர் திடீரென விஜயம் செய்தார் . இதன்போதே அமைச்சர் இந்த ஆலோசனையை அதிகாரிகளுக்கு வழங்கினார். நாரஹன்பிட்ட பிரதான அலுவலகம் மற்றும் மாவட்ட கிளை அலுவலகங்களுக்கு அருகாமையில் உள்ள இந்த தரகர்களினால் பொதுமக்கள் பெரும் சிரமங்கள் மற்றும்; துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக தாம் திடீரென திணைக்களத்துக்கு விஜயம் செய்ததாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை Reviewed by irumbuthirai on December 10, 2019 Rating: 5

இனி அரைசொகுசு பஸ் சேவை இல்லை..

December 09, 2019

அரைசொகுசு பஸ் சேவையை ரத்துச்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது..இந்த பஸ் சேவையின் மூலம் பயணிகளுக்கு எந்தவித வசதிகளும் கிடைப்பதில்லைஎன்பது தெளிவாகி இருக்கிறது என, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அரை சொகுசு பஸ் சேவையின் மூலம் பயணிகளுக்கு 
குறைந்த சேவையேனும்கிடைப்பதில்லை என்பது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீரதலைமையில் ,போக்குவரத்து அமைச்சு,தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பனவற்றின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்பின்னர் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை பஸ் வண்டிகளில் ஒலிபரப்படும் பாடல்களினால்ஏற்படும் இரைச்சலை கட்டுப்படுத்த தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இனி அரைசொகுசு பஸ் சேவை இல்லை.. இனி அரைசொகுசு பஸ் சேவை இல்லை.. Reviewed by irumbuthirai on December 09, 2019 Rating: 5

2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 09, 2019


2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில்,

கல்வி சேவையை (Closed) மூடிய சேவையாக அமைத்தல், 
மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்கு உள்ள அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் தேவையை நீக்குதல், 
தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மேம்படுத்துதல் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet dec...
2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 09, 2019 Rating: 5
Powered by Blogger.