தகுதியற்றவர்களினால் மேற்கொள்ளப்படும் மேலதிக வகுப்புக்கள் பற்றி...
irumbuthirai
January 04, 2020
தகுதியற்றவர்களினால் நடத்தப்பட்டு வரும் மேலதிக வகுப்புக்கள் (Tution class) தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் நாட்டில் மாணவர்களின் கல்விக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள் மூலம் 5 பில்லியன்
ரூபா பணப் பரிமாற்றம் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர் இது தொடர்பில் அரசாங்கம் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுவதை ஒழுங்குறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்று சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன...
நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் முறையான கல்வி வசதியினை ஏற்படுத்துவதற்காக உயர் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் நானும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன் மூலம் தகுதி குறைவான சிலரினால் நடத்தப்பட்டு வரும் மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சகல மாணவர்களுக்கும் முறையான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் 1000 மும்மொழி தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன. பிரதேசங்கள் தோறும் அமைக்கப்படும் இவ்வாறான பாடசாலைகள் மூலம் முறையான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
(அ.த.தி)
தகுதியற்றவர்களினால் மேற்கொள்ளப்படும் மேலதிக வகுப்புக்கள் பற்றி...
Reviewed by irumbuthirai
on
January 04, 2020
Rating: