மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

January 14, 2020

தற்போது உள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் அமைச்சர் டளஸ் அளகப்பெரும எதிர்வரும் மார்ச் மாதம் 

முதலாம் திகதி அளவில் நாட்டில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். 
கடந்த கால அரசாங்கத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மாத்திரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  இவர்கள் எந்தவித வேறுபாடுமின்றி பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படுவர் என்று  தெரிவித்தார்.
(அ.த.தி)

மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு Reviewed by irumbuthirai on January 14, 2020 Rating: 5

தரம் 03 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது...

January 13, 2020


தரம் 03 பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
குறித்த விளக்கங்கள் படங்கள் மூலமும் Animation முறையிலும் காட்டப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 03 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... தரம் 03 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... Reviewed by irumbuthirai on January 13, 2020 Rating: 5

வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு, மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கான நடவடிக்கை ...

January 13, 2020


வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக  செல்லும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்து 

15 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் வாக்குறுதியின்படி வெளிநாடுகளில் கல்வி கற்க முடியாமல் போகின்றது.  
இது தொடர்பில் தாம் பங்களாதேஷ் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.
(அ.த.தி.)
வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு, மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கான நடவடிக்கை ... வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு, மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கான நடவடிக்கை ... Reviewed by irumbuthirai on January 13, 2020 Rating: 5

Z-Score நடைமுறை இனி பாடசாலைக் கட்டமைப்பில்....

January 12, 2020

மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதத்தில் பாடசாலைக் கட்டமைப்பில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது திறமையின் அடிப்படையில் இணைத்துக் கொள்வது 40 சதவீதமாக நடைமுறைப்படும். மாவட்டஅடிப்படையில் 

55 சதவீதமும் பின்தங்கிய பகுதி அடிப்படையில் 5 சதவீதத்திற்குப் பதிலாக பாடசாலை கட்டமைப்பில் 60 சதவீதம பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுபீட்சமிக்க தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் விசேட தேவையைக் கொண்ட மாணவர்களுக்கு கல்விக்ககான சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்படுமெனறும் அவர் கூறினார். 
அரசியல் தலையீடுகள் இன்றி பாடசாலைகளுக்காக அதிபர்களை நியமிப்பதற்குத் தேவையானதிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகளுக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

Z-Score நடைமுறை இனி பாடசாலைக் கட்டமைப்பில்.... Z-Score நடைமுறை இனி பாடசாலைக் கட்டமைப்பில்.... Reviewed by irumbuthirai on January 12, 2020 Rating: 5

தரம் 03 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

January 11, 2020

தரம் 03 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக பயிற்சிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 03 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 03 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கான திகதி அறிவிப்பு

January 11, 2020

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும், 

15ம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 
மஹாபொல புலமைப்பரிசில் தொகை 10 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 
மஹாபொல நிதியத்திற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் மஹாபொல புலமைப்பரிசிலுக்காக 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்றது என்றும் அமைச்சர் கூறினார். மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல நிதியத்தில் 10.5 மில்லியன் ரூபா நிதி இருந்தது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் 2 பில்லியன் ரூபா நட்டம் இழக்கப்பட்டது. நட்ட நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும். இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். மஹாபொல நிதியத்தை 20 பி;ல்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கான திகதி அறிவிப்பு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

January 11, 2020

09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
இதில்,

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும்
சமூகப்பணி முதுமாணி, 
சமூகப்பணி உயர் டிப்ளோமா பாடநெறி, 
உளவளத்துணை உயர் டிப்ளோமா பாடநெறி, 
உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி , 
சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறி, 
முதியோர் பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி, 
சமூகப்பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி , 
சமூகப்பணி சான்றிதழ் கற்கைநெறி , 
உளவளத்துணை சான்றிதழ் கற்கைநெறி , 
சிறுவர்களை மையப்படுத்திய சமுதாய அபிவிருத்திச் சான்றிதழ் கற்கைநெறி 
போன்ற கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மற்றும்

பௌத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சைச் சேர்ந்த தொல்பொருள் திணைக்களத்தின் நிறைவேற்று சேவைகள் வகுதியின் சட்ட அலுவலர் பதவிக்காக திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  
இதன் முழு வடிவத்தை மும்மொழிகளிலும் பார்வையிட கீழுள்ள உரிய மொழிக்குரிய லிங்கை கிளிக் செய்க.

Tamil                        English                   Sinhala

09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை

January 11, 2020


பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு  பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் அலரி மாளிகையில் பேச்சுவார்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்தையின் போது பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் 

சம்பள முரண்பாடு சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து அதற்கு தீர்வைப் பெற்றுத்தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதற்காக குழு வொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
(அ.த.தி)

பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

தரம் 03 (கணிதம்): இலகு முறையில்...

January 10, 2020


தரம் 03 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 03 (கணிதம்): இலகு முறையில்... தரம் 03 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 10, 2020 Rating: 5

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்...

January 10, 2020


மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 06 வேண்டுகோள்களை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று (09) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக வந்த மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இவ்விடயம் பற்றி அறிந்த ஜனாதிபதி 

மாணவர்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தருவதற்கு வழிவிடுமாறு பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை வழங்கினார். ஜனாதிபதியும் ஜனாதிபதியின் செயலாளரும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு வெளியே சென்றிருந்தமையினால் மாணவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வு காண வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.  ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன அபேரத்ன, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 
மாணவர்களின் வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை தெளிவுபடுத்திய அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை உடனடியாகப் பெற்றுக்கொண்டனர். 
இதன்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகையினை எதிர்வரும் திங்கட்கிழமை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. விரிவுரைகளுக்கான 80 சதவீத வரவினை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசினை வழங்குதல், மாணவர் உதவித்தொகை மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் ஆகியவற்றை சமமான மட்டத்திற்கு கொண்டு வருதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் தொடர்பான பிரச்சினைகள், மாணவர் உதவித்தொகையை வழங்கும்போது கருத்திற் கொள்ளப்படும் பெற்றோரின் வருமானத்தை 7 இலட்சம் வரை அதிகரித்தல், தொழில்புரியும் மக்களின் சம்பளத்தினை அதிகரித்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடப்பட்ட விடயங்களை எழுத்து மூலமாக வழங்குவதற்கு அதிகாரிகள் 

இணக்கம் தெரிவித்தனர். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது மாணவர்களின் விருப்பப்படி இரண்டு வாரங்களுக்கொரு தடவையோ கலந்துரையாடுவதற்கு முன்மொழியப்பட்டதுடன், அவ்விடயம் தொடர்பில் மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக மாணவ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த மாணவர்கள் மிக அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
(அ.த.தி.)
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்... பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்... Reviewed by irumbuthirai on January 10, 2020 Rating: 5

University College of Anuradhapura.. Free Courses...

January 10, 2020


The University College of Anuradhapura offers National Diploma (NVQ Level 5) and Higher National Diploma (NVQ Level 6) courses leading to a degree offered by the UNIVOTEC. 
Courses offered by The University College of Anuradhapura: 

National Diploma in Aquaculture and Aquatic Resources Management (NVQ Level 5 & 6) National Diploma in Building Services Technology (NVQ Level 5 & 6) 
National Diploma in Electrical Technology (NVQ Level 5 & 6) 
National Diploma in Electronic Technology (NVQ Level 5 & 6) 
English Language 
Hospitality Management programme (NVQ Level 6) 
Information Communication Technology National Diploma in Post-harvest Technology (NVQ Level 5 & 6) 
National Diploma in Quantity Surveying (NVQ Level 5 & 6) 
National Diploma in Travel & Tour Management (NVQ level 5 & 6)  
Closing date of application : 

31-01-2020. 
Duration : 2 years. 
Click the link below for more details & to download the application


University College of Anuradhapura.. Free Courses... University College of Anuradhapura.. Free Courses... Reviewed by irumbuthirai on January 10, 2020 Rating: 5

தரம் 03 (தமிழ் மொழி): இலகு முறையில்...

January 09, 2020

தரம் 03 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சிகளை செய்து தாமே சரி பிழை பார்த்துக்கொள்ளலாம். இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Tamil Lang..

தரம் 03 (தமிழ் மொழி): இலகு முறையில்... தரம் 03 (தமிழ் மொழி): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 09, 2020 Rating: 5

Past Paper.. Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka

January 09, 2020

Department of Examinations
Past Paper
Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka – 2018
Click the link below for Past Paper


Past Paper

Past Paper.. Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka Past Paper.. Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka Reviewed by irumbuthirai on January 09, 2020 Rating: 5
Powered by Blogger.