டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை
irumbuthirai
January 18, 2020
'ட்ரோன' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால் . கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். ஆதர் சி கிளார்க் நிறுவனத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி 6 மாத கால குறுகிய காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் நிறுவனங்களில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான சேவையை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
ட்ரோன தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் நிலப்பரப்பில் நுளம்பின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத் முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை
Reviewed by irumbuthirai
on
January 18, 2020
Rating: