மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு

February 01, 2020



சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக    பாடசாலை மாணவர்களுக்கு  வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 

28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு Reviewed by irumbuthirai on February 01, 2020 Rating: 5

மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்

January 31, 2020


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில்,  புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார். அதாவது 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளினால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய மென்பொருள் மூலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில், பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இவ் மென்பொருள் மூலம் இவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் குழுவுடன் தகவல் தொழில்நுட்ப பிரதிநிதிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளனர். சகல விமானப் பயணிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் Reviewed by irumbuthirai on January 31, 2020 Rating: 5

தரம் 01 (கணிதம்): இலகு முறையில்...

January 30, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 01 (கணிதம்): இலகு முறையில்... தரம் 01 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 30, 2020 Rating: 5

சாரதி அனுமதி பத்திர வைத்திய பரிசோதனை: திகதி, நேரம் இணையத்தில்...

January 27, 2020


சாரதி அனுமதி பத்திரத்திற்கு தேவையான வைத்திய பரிசோதனைக்கான தினம் மற்றும் நேரம், என்பன இணையத்தில் நேரடியாக பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. www.ntmi.lk என்ற இணையத்தளத்தில் இன்றிலிருந்து 

இயங்க ஆரம்பிக்கும். இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பதாரியின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் வெளியிடப்படும். இதேவேளை அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கையடக்க தொலைபேசிகளில் இதற்கான விசேட செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)
சாரதி அனுமதி பத்திர வைத்திய பரிசோதனை: திகதி, நேரம் இணையத்தில்... சாரதி அனுமதி பத்திர வைத்திய பரிசோதனை: திகதி, நேரம் இணையத்தில்... Reviewed by irumbuthirai on January 27, 2020 Rating: 5

தரம் 01 (தமிழ் மொழி): இலகு முறையில்...

January 27, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 01 (தமிழ் மொழி): இலகு முறையில்... தரம் 01 (தமிழ் மொழி): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 27, 2020 Rating: 5

24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்)

January 26, 2020


24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள், 
ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை, வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை, உட்பட இன்னும் பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியை (தமிழ், சிங்களம்) கிளிக் செய்து இதன் முழு வடிவத்தைப் பார்வையிடுக.

24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) 24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) Reviewed by irumbuthirai on January 26, 2020 Rating: 5

2020.01.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

January 26, 2020


2020.01.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம்.
இதில், 

இலங்கையில் உயர் கல்விக்காக வெளிநாடு மற்றும் தங்குமிட வசதியற்ற இலங்கை மாணவர்களை கவர்தல்..... 
உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

2020.01.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 2020.01.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 26, 2020 Rating: 5

தரம் 02 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

January 24, 2020


தரம் 02 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களே சுயமாக பயிற்சிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 02 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 02 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 24, 2020 Rating: 5

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு...

January 22, 2020



பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
மாதிரி விண்ணப்பம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்…… 
நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 

26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்….. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி…… 
பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு… 
பயிற்சியின் பின்னர் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நிரந்தர அரச வேலைவாய்ப்பு….. 
மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துரிதகதியில் அரச வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகள் கடந்த ஜனவரி 20ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் பிரசுரமான அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள மாதிரி படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2020.02.15ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர் அத்தகவல்களை உறுதிப்படுத்தி 

2020.02.20 ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேச செயலாளரிடம் கையளித்தல் வேண்டும். கிராம உத்தியோகத்தரினால் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படும்போது பிரதேசத்தில் கீழ் மட்டத்திலுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களிடமும் பிரதேச மத குருமார்கள் பிரிவிற்குப் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். பிழையான தகவல்களை உறுதிப்படுத்துதலானது, உத்தியோகத்திலிருந்து இடைநிறுத்தப்படுதல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.
(அ.த.தி.)

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு... ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு... Reviewed by irumbuthirai on January 22, 2020 Rating: 5

மகாபொல புலமைப்பரிசிலுக்கு இணையத்தளம்

January 22, 2020


இன்று மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளமொன்று www.mahapola.lk. என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன,  இன்று முதல் மகாபொல புலமைப்பரிசில் 

நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆயிரத்து 500 கோடி ரூபாவாகவுள்ள புலமைப் பரிசில் நிதியத்தை இரண்டாயிர்ம் கோடி வரை உயர்;த்த எதிர்பார்க்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த அரசாங்க நிருவாகத்தின்போது மகாபொல புலமைப்பரிசில் வழங்குவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக இதனை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி.)
மகாபொல புலமைப்பரிசிலுக்கு இணையத்தளம் மகாபொல புலமைப்பரிசிலுக்கு இணையத்தளம் Reviewed by irumbuthirai on January 22, 2020 Rating: 5

மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள்

January 21, 2020


1,000 மாணவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டில்  கணனி டிப்ளோமா அல்லது உயர்தர டிப்ளோமா பாடநெறியை   வார இறுதி நாட்களில் 

தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஹோமாகம தியகமவில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.
மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள் மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள் Reviewed by irumbuthirai on January 21, 2020 Rating: 5

தரம் 02 (கணிதம்): இலகு முறையில்...

January 20, 2020


தரம் 02 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 02 (கணிதம்): இலகு முறையில்... தரம் 02 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 20, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள்

January 19, 2020

பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை இங்கு தருகிறோம்.
இதில்,


13 வகையான பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சையின் பெயர், நடைபெற்ற திகதி, பெறுபேறு வெளியிடப்பட்ட திகதி போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Results in November

பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தால் 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் Reviewed by irumbuthirai on January 19, 2020 Rating: 5
Powered by Blogger.