50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு தொடர்பான நடவடிக்கை
irumbuthirai
February 20, 2020
ஒருவருட காலத்துக்கு மேலாக தொழில் வாய்ப்பு இன்றி இருக்கும் சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சரவை துணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இவர்களது தகமைகளை பரிசீலனை செய்து மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் இவர்களுக்கான பயிற்சியாளர் நியமனங்கள் வழங்கப்படும். 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம்
2021 மார்ச் 01 ஆம் திகதி வரையில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலப்பகுதியில் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அதன் பின்னர் 5 வருட காலம் குறிப்பிட்ட பிரதேசத்தில் பணியாற்ற வேண்டும்.
5 வருட காலத்துக்கு பின்னர் இடமாற்றத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
(அ.த.தி)
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு தொடர்பான நடவடிக்கை
Reviewed by irumbuthirai
on
February 20, 2020
Rating: