இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம்
irumbuthirai
March 05, 2020
விளையாட்டு திறமைகளை விருத்தி செய்து சர்வதேச அரங்கில் வெற்றிகளை தனதாக்கி கொள்வதற்காக சிறுவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம்
ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ச மைதான வளாகத்தில் நிர்மாணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவின் பிரகாரம் விளையாட்டு அமைச்சின் ஊடாக நவீனமயப்படுத்தப்பட்ட அம்பாறை, செனரத் சோமரத்ன விளையாட்டு அரங்கத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நேற்று (04) கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம்
Reviewed by irumbuthirai
on
March 05, 2020
Rating: