மே மாதம் 11ஆம் திகதி முதல் பட்டதாரிகளுக்கான பயிற்சி...
irumbuthirai
March 09, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய அரச சேவைகளுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார். அதன்படியே பட்டதாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம்
நாளை மறுதினம் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
மே மாதம் 11ஆம் திகதி முதல் பட்டதாரிகளுக்கான பயிற்சி...
Reviewed by irumbuthirai
on
March 09, 2020
Rating: