கொரோனாவினால் ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள்...

March 23, 2020


இந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுநர்,அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை தலைமை செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி, நிதி நிறுவன மற்றும் வரி நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 
அனைத்து நிவாரணங்களும் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும்... 
1. வருமான,வெற் வரி,சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள்,ரூ 15,000க்கு குறைந்த நீர்,மின்சார கட்டணங்கள்,வரிகள்,வங்கி காசோலைகள் செல்லுபடியாகும் காலஎல்லை,ரூ50,000க்கு குறைந்த மாதாந்த கடனட்டை கொடுப்பனவுகள் 2020ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
2. முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் லீசிங் கடன் தவணைக் கட்டணம் அறவிடுவது 06மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
3. அரசாங்க ஊழியர்களினதும் தனியார் துறை பணிக்குழாம் அல்லாத ஊழியர்களினதும் சம்பளத்தில் கடன் தவணை கட்டணங்கள் அறவிடுவது 2020மே மாதம் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
4. வங்கி,நிதி நிறுவனங்களினால் ரூ.10லட்சத்திற்கு குறைவான தனிப்பட்ட கடன் அறவிடுவது 03மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
5. தொழில் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு, 

மார்ச் மாத பயிற்சிக் கால கொடுப்பனவான ரூ.20,000 அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். 
6. கொரோனா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார,பொலிஸ்,சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி நன்மைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
7. சுற்றுலா, ஆடை, சிறிய மற்றம் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக 6மாத கடன் நிவாரண காலத்தை நடைமுறைப்படுத்துதலும் இலங்கை மத்திய வங்கி அந்நிதியை மீள்நிதியாக்கம் செய்தலும். 
8. இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் இணைந்து திறைசேறி பிணை முறிகளில் நிதி முதலீடு செய்கையில்,அதன் மூலம் நிதிச் சந்தையை 7வீத வட்டி விகிதத்தின் கீழ் நிலைப்படுத்தல். 
9. மாதாந்த கடன் தொகையை ரூ.50,000 வரையான தேசிய கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப்படும் கடனட்டைக்கான கடன் வட்டி வீதத்தை அதிகபட்சம் 15வீதத்தின் கீழ் கொண்டு வருதலும் ஆகக் குறைந்த மாதாந்த அறவீட்டை 50வீதமாக குறைத்தலும். 
10. ஊரடங்கு சட்டம் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து வங்கிக் கிளைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேவைகளை வழங்கும் வகையில் திறந்து வைத்தல். 
11. இலங்கை துறைமுகம், சுங்கம் மற்றும் ஏனைய உரிய நிறுவனங்கள் அத்தியாவசிய உணவு,உரம்,மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள்களை தொடர்ச்சியாக உரிய நபர்களுக்கு வழங்க வேண்டும். 
12. சமூர்த்தி நன்மை பெறுபவர்கள், சமூர்த்தி அட்டை உரிமையாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லாத முற்பணத்தை அனைத்து சமூர்த்தி வங்கிச் சங்கங்களின் ஊடாகவும் பெற்றுக்கொடுத்தல். 
13. சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் வெற் வரி மற்றும் ஏனைய பிரதேச வரிகள், கட்டணங்களில் இருந்து விலக்களித்தல். 
14. குறைந்த வருமானம் பெறுவோருக்கான போசனை உணவு பொருட்களை வழங்குவதற்காக சமூர்த்தி அதிகார சபை சமூர்த்தி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உணவு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். அக்குடும்பங்களுக்கு முதியவர்கள், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி, பருப்பு, வெங்காயம் ஆகியன உணவு அட்டையின் ஊடாக வாராந்தம் வழங்க வேண்டும். 
15. கோவிட் - 19வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்குறிய சுகாதார, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் விசேட கணக்கொன்று இலங்கை வங்கியில் திறந்துள்ளது. அதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 100மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. அனைத்து தேசிய,சர்வதேச நன்கொடையாளர்கள் அதற்கு பங்களிப்புச் செய்வதற்காக வரி, வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 
16. சார்க் நாடுகளில் கொரோனா நிதியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் 5மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இத்தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 
(அ.த.தி)
கொரோனாவினால் ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள்... கொரோனாவினால் ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்கள்... Reviewed by irumbuthirai on March 23, 2020 Rating: 5

பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலவச இணைய வசதி

March 22, 2020


ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ்  அரச பல்கலைக்கழகங்களில் தம்மைப் பதிவு செய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 
குறித்த மாணவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை மட்டுமே இந்த இலவச இணையச் சேவை அமுலில் இருக்கும்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தினை நாளை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக தெரிவித்தார். 
(அ.த.தி)
பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலவச இணைய வசதி பல்கலைக்கழக  மாணவர்களுக்கான இலவச இணைய வசதி Reviewed by irumbuthirai on March 22, 2020 Rating: 5

பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு - வர்த்தமானி

March 22, 2020


1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தலை நடாத்த முடியாதுள்ளது. 
இது தொடர்பான வர்த்தமானியை மும்மொழிகளிலும் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு - வர்த்தமானி பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு - வர்த்தமானி Reviewed by irumbuthirai on March 22, 2020 Rating: 5

கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை

March 21, 2020


கொரோனா தொடர்பில் முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கையை இங்கு தருகிறோம். 
இதில், 

இதுவரையுள்ள நிலைமைகளும் மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளும் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு செய்தியைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை Reviewed by irumbuthirai on March 21, 2020 Rating: 5

18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 19, 2020


18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 19, 2020 Rating: 5

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதமாகலாம்...

March 19, 2020


2019 நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் 28 ஆம் திகதி 

வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதமாகலாம்... சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதமாகலாம்... Reviewed by irumbuthirai on March 19, 2020 Rating: 5

பரீட்சை ஒத்திவைப்பு

March 19, 2020


நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையின் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து செயற்றிறன் வெட்டுப்புள்ளி பரீட்சைகளும்  பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைகள் நடைபெறும் தினம் 

பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் அமைச்சின் பரீட்சைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஏ.எல்.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
பரீட்சை ஒத்திவைப்பு பரீட்சை ஒத்திவைப்பு Reviewed by irumbuthirai on March 19, 2020 Rating: 5

தபால் மூல வாக்கு விண்ணப்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு

March 17, 2020

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைவாக தபால் மூல வாக்கிற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதித் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனால் எதிர்வரும் தினங்களில் கிடைக்கப்பெறும் தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் இன்றைய தினத்தில் கிடைத்த விண்ணப்பங்களாக கருத்தில் கொண்டு செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)
தபால் மூல வாக்கு விண்ணப்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு தபால் மூல வாக்கு விண்ணப்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 17, 2020 Rating: 5

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது

March 15, 2020


கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மேற்கொள்வோருக்கும் உடன் தண்டனை வழங்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டுள்னனர் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
(அ.த.தி)

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது Reviewed by irumbuthirai on March 15, 2020 Rating: 5

கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா?

March 15, 2020


கொரோனா வைரஸ் தொற்று கொண்ட அல்லது அந்த விடயம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறானோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் 

ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும். இவர்கள் எதுவித பிடிவிறாந்தும் இல்லாமல் நேரடியாக கைது செய்யப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
(அ.த.தி)
கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா? கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா? Reviewed by irumbuthirai on March 15, 2020 Rating: 5

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி கற்கை நெறிகள்

March 14, 2020

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பயிற்சி மத்திய நிலையங்களில் பயிற்சி கற்கை நெயிகளை தொடர்வோரின் பாதுகாப்பு கருதி நேற்று (13) முதல் அனைத்து பயறிச்சி கற்கை நெறிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. கொரோனா வைரஸின் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடுதலைத் தவித்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு 

இந்த பயிற்சி கற்கை நெறிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன் தங்கி இருந்து பயிற்சி பெறுவோர் அனைவரும் தமது வீடுகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி கற்கை நெறிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on March 14, 2020 Rating: 5

13-03-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்)

March 14, 2020


13-03-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள், 
உட்பட பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியை (தமிழ், சிங்களம்) கிளிக் செய்து இதன் முழு வடிவத்தைப் பார்வையிடுக.

13-03-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) 13-03-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) Reviewed by irumbuthirai on March 14, 2020 Rating: 5

க.பொ.த. (உ/த) உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்: இலகு முறையில்...

March 11, 2020

க.பொ.த. (உ/த) பாடத்திட்டத்தின்படி உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட செய்முறைக் கையேடு இணைக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
பழைய மற்றும் புதிய ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
களப் பரீட்சையும் செய்முறைகளும் இணைக்கப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ/த) உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்: இலகு முறையில்... க.பொ.த. (உ/த) உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on March 11, 2020 Rating: 5
Powered by Blogger.