இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்...
irumbuthirai
March 30, 2020
Covid-19 (கொரோனா வைரசு தொற்று) நோயாளர்கள் மத்தியில் இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிசெய்துள்ளார்.
இவருக்கு 64 வயது. ஆண் நோயாளி. கொச்சிக்கடை பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர்.
இன்றைய தினம் தனியார் வைத்தியசாலையில் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இந்த நோயாளி கொரோனா வைரசு தொற்று நோயாளர் என்பது இன்றைய தினமே உறுதிசெய்யப்பட்டது. இதுமாத்திரமன்றி இவர் இருதய நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் என்றும் நீண்டகாலமாக சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி.)
இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்...
Reviewed by irumbuthirai
on
March 30, 2020
Rating: