2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்...
irumbuthirai
March 30, 2020
2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல்
30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
பெறுபேறுகளை கணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்...
Reviewed by irumbuthirai
on
March 30, 2020
Rating: