கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்:

April 09, 2020


Covid-19 வைரசு தொற்றின் காரணமாக நேற்று உயிரிழந்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள் இன்று காலை 11. 30 மணியளவில் இடம்பெற்றன. 
44 வயதான இவர் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரி. ஜேர்மனியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கு வந்த பின்னர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
சர்வதேச தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக கொடிகாவத்த பொது மயானத்தில் இறுதி கிரிகைகள் இடம்பெற்றன.
(அ.த.தி)

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி.... கொழும்பில் உள்ள பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி ஒன்றில், அவரது உடலுடைய சாம்பல் மஹ்ரிப் தொழுகைக்கு முன்னதாக 09-04-2020 நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (மேற்படி செய்தியை Jaffnamuslim இணையத்ததளம் வெளியிட்டுள்ளது)
கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்: கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்: Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல்

April 09, 2020


இலங்கைப் பொலிஸாரினால் 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள உள்ளூர் வாகன தண்டப்பண ஆவணம், 14 நாட்கள் கடந்தமை தொடர்பில் எந்தவித மேலதிக தண்டப்பணமும் இல்லாமல் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுவான கடமைகளுக்காக தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் இதை செலுத்தலாம் என தபால் மா அதிபர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல் போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல் Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) அரசறிவியல் (Political Science) : இலகு முறையில்...

April 09, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி அரசறிவியல் (Political Science) என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) அரசறிவியல் (Political Science) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) அரசறிவியல் (Political Science) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

கொரோனா தடுப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விரு அபிமன்

April 08, 2020


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக விரு அபிமன் பெயரில் இந்த இலவச காப்புறுதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இதன் கீழ் 15 இலட்ச ரூபா காப்புறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய் (கொரோனா) தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கடமையின் போது உயிரிழக்கும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

கொரோனா தடுப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விரு அபிமன் கொரோனா தடுப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விரு அபிமன் Reviewed by irumbuthirai on April 08, 2020 Rating: 5

கொரோனா தாக்கம்... கொத்தமல்லி, இஞ்சி ,மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம்

April 08, 2020


கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சள் (வெனிவெல்கட்டை coscinium fenestratum calk , tree turmeric )யை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அதில் மேற்படி தீர்மானம் உட்பட இன்னும் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.
(அ.த.தி)

கொரோனா தாக்கம்... கொத்தமல்லி, இஞ்சி ,மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம் கொரோனா தாக்கம்... கொத்தமல்லி, இஞ்சி ,மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம் Reviewed by irumbuthirai on April 08, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) பௌதிகவியல் (Physics) : இலகு முறையில்...

April 08, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி பௌதிகவியல் (Physics) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) பௌதிகவியல் (Physics) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) பௌதிகவியல் (Physics) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 08, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) உயிரியல் (Biology) : இலகு முறையில்...

April 07, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி உயிரியல் (Biology) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. செயற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) உயிரியல் (Biology) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) உயிரியல் (Biology) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 07, 2020 Rating: 5

தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்...

April 05, 2020


ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
கொவிட்-19 நோய் தொற் றை தடுப்பு தொடர்பாக மாத்தறையில் கடந்த 3ஆம்திகதி நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களுடபான சந்திப்பின்போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.
(அ.த.தி)

தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்... தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்... Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம்

April 05, 2020


Covid-19 ன் அறிகுறிகளான இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறான நோய் குணங்குறிகள் காணப்படுமாயின் 1390 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு 

அல்லது சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் சுவசெரிய வின் 1990 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு யாராவது ஒருவருக்கு நோய் நிலைமை காணப்படுமாயின் அந்த நோய் மற்றவருக்கு பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த உடனடி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

வீட்டிலிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிப்பு

April 05, 2020


வீட்டிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த வாரமும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
(அ.த.தி)


வீட்டிலிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிப்பு வீட்டிலிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிப்பு Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

இலங்கை முழுவதும் Lockdown செய்யப்படுமா?

April 05, 2020

கொரோனா தாக்கம் தொடர்பான நாட்டின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். நாடு முழுவதுமாக ஐந்து நாட்கள் முற்றிலும் முடக்கப்பட உள்ளதாக பரவிவரும் வதந்தி தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், குறித்த வதந்தி மூலம் பொதுமக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உண்மையில் இதுபோன்ற எவ்வித தீர்மானங்களும் அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு அமைவாகவே கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தினை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவ்வாறான நிலை ஏற்படும் போது தற்போது அமுல்படுத்தப்படும் ஊரடங்கு நிலை படிப்படியாக


குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, இவ்வாறாக ஆதாரமற்ற முறையில் தெரிவிக்கப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி தேவையற்ற அச்ச நிலையை ஏற்படுத்தும் இவ்வாறான நபர்கள் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)

இலங்கை முழுவதும் Lockdown செய்யப்படுமா? இலங்கை முழுவதும் Lockdown செய்யப்படுமா? Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) இரசாயணவியல் (CHEMISTRY) : இலகு முறையில்...

April 05, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி இரசாயணவியல் (CHEMISTRY) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. 
செயற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) இரசாயணவியல் (CHEMISTRY) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) இரசாயணவியல் (CHEMISTRY) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல்

April 04, 2020


கொரோனாவுக்காக கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்துஇ பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. 
இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகிள் நிறுவனத்தின் நோக்கமாகும். உலகெங்கிலும் 131 நாடுகளில் பயனர்களின் நகர்வுகள் பற்றிய அறிக்கைகள் பிரத்யேக இணையத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்படும் என கூகிள் நிறவனம் அறிவித்துள்ளது. 
பூங்காக்கள், கடைகள், வீடுகள், வேலைத் தளங்கள் போன்றவற்றுக்கு பயனர்கள் செல்வது குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதை கூகிள் நிறுவனம் பகிரங்கப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல் கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல் Reviewed by irumbuthirai on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.