கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்...
irumbuthirai
April 11, 2020
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களையும் பொது மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றனர்
இதன் அடிப்படையின் முகக் கவசம் (Face Mask) அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை
திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்...
Reviewed by irumbuthirai
on
April 11, 2020
Rating: