பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை:

April 15, 2020



பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் அல்லது வேன் உரிமையாளர்கள், பெற்றோர்களிடம் மாதாந்தக் கட்டணத்தை அறவிடுவது குற்றமாகும் என 

அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பஸ் மற்றும் வேன் உரிமையாளர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
தற்போது நாடு  எதிர்கொண்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு பெற்றோரிடம் கட்டணம் அறவிட்டு, அவர்களை இக்கட்டான நிலைமைக்கு தள்ள வேண்டாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)


பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை: பாடசாலை விடுமுறை காலத்திலும் பெற்றோரிடம் கட்டணம் அறவீடு: சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை: Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

ஆரம்பப் கல்விக்குரிய சிறுவர் பாடல்கள்

April 15, 2020


ஆரம்பப் கல்விக்குரிய (Primary Education) சிறுவர் பாடல்கள் சிலவற்றை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு சிறுவர் பாடல்களும் எழுத்து வடிவிலும் இசை வடிவிலும் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


ஆரம்பப் கல்விக்குரிய சிறுவர் பாடல்கள் ஆரம்பப் கல்விக்குரிய சிறுவர் பாடல்கள் Reviewed by irumbuthirai on April 15, 2020 Rating: 5

வீடுகளுக்கு வரும் திரி போஷா

April 14, 2020

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா, விட்டமின் வகைளையும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது 
  குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களை  072 280 95 77 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன அறிவித்துள்ளார்.
(அ.த.தி)

வீடுகளுக்கு வரும் திரி போஷா வீடுகளுக்கு வரும் திரி போஷா Reviewed by irumbuthirai on April 14, 2020 Rating: 5

வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் நீடிப்பு

April 13, 2020


அரச, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் ஏப்ரல் 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி.)

வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் நீடிப்பு வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் மீண்டும் நீடிப்பு Reviewed by irumbuthirai on April 13, 2020 Rating: 5

கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்தல்: வெளியானது வர்த்தமானி:

April 12, 2020


Covid-19 தொற்று நோயினால் மரணிப்பவரின் பூதவுடல் ,தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பில், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர். பவித்ரா வன்னியாரச்சியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி)

கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்தல்: வெளியானது வர்த்தமானி: கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்தல்: வெளியானது வர்த்தமானி: Reviewed by irumbuthirai on April 12, 2020 Rating: 5

3 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகங்கள்

April 12, 2020


பல்கலைக்கழகங்களை (Universities) 3 கட்டங்களில் திறப்பதற்கு தீர்மானிக்ப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்.
1ஆவது கட்டம் : 
2020 மே மாதம் 4ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவது கல்வி மற்றும் கல்விசார் பணியாளர் சபைக்காக மாத்திரம் இதில், அழைக்கப்பட வேண்டிய பணியாளர் சபை குறித்து தீர்மானிப்பதற்கு அதிகாரம் முழுமையாக அந்தந்த பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு அளிக்கப்படும். 
2ஆவது கட்டம் : 
2020 மே மாதம் 11ஆம் திகதி அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகங்களை திறத்தல். இதற்கமைவாக, வைத்திய பீட கற்கைநெறியில் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், விசேட பட்டக் கற்கை நெறியில் 4ஆவது ஆண்டு மாணவர்களுக்கும் பொதுவான பட்டக் கற்கைநெறியில் மூன்றாவது வருட மாணவர்களுக்கும் என்ற ரீதியில் அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். 
3ஆவது கட்டம் : 
2020 மே மாதம் 18ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். இந்த வகையில் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் பொழுது கொரோனா வைரசு தொற்று நிலமையில் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்து கூடிய விரைவில் சுற்றரிக்கையொன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.
(அ.த.தி)

3 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகங்கள் 3 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகங்கள் Reviewed by irumbuthirai on April 12, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்

April 12, 2020


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய மாதிரி வினாத்தாள்களை (Model Papers) இங்கு தருகிறோம். இதில், 

பகுதி 1 மற்றும் பகுதி-11 வினாப்பத்திரங்களும் அதற்குரிய விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன. 
புள்ளி வழங்கும் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் Reviewed by irumbuthirai on April 12, 2020 Rating: 5

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

April 11, 2020


2020 இல் பாடசாலை இரண்டாம் தவணை மே 11, திங்கள் ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாடசாலை இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 20, திங்கள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்கள் 

தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொலை கல்வி வசதிகளை முடியுமானளவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 
இதேவேளை பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower

April 11, 2020


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இன்று (11) பிற்பகல் 6.45க்கு தாமரை கோபுரம் ஒளியூட்டப்பட்டு கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு தமது உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராது முன்னின்று செயற்பட்டு வரும் அனைவருக்கும் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.  
சவாலான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் தைரியத்தை ஏற்படுத்தி, முழு உலகிற்கும் முன்னுதாரணமாக மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினர், அரச நிர்வாக பொறிமுறைக்குட்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பல ஊழியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 

பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அனைவருக்கும் மக்களினதும் நாட்டினதும் கௌரவம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்...

April 11, 2020

கொரோனா தொடர்பான சகல Update களையும் அறிந்திட புதிய App ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. MyHealth என்ற புதிய கைத்தொலைபேசி செயலியை சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். உலகளாவிய கோவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவத் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவேளையில் ஒரு வலுவான கைத்தொலைபேசி செயலியின் தேவை உணரப்பட்டது. 
அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் மேலான அறிவுறுத்தலின் கீழ் இவ் செயலியை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிமுகப்படுத்தியது. 
இந்த App மூலம் வைரஸ் குறித்த தேவையான தரவு, தகவல் மற்றும் கருத்துக்களை மருத்துவ அதிகாரிகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. 
இவ் கைத்தொலைபேசி செயலியை கூகிள் பிளேஸ்டோர், ஹூவாய் ஆப்ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றீர்கள். இந்தப் பயன்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, 
வைரஸ் கண்டறியப்பட்டால் அதை எல்லா பயனர்களுடனும் பகிரலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் இருந்த இடத்தை உங்கள் இருப்பிடத்துடன் வரைபடமாகக் காண்பிக்கிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் சென்றுவந்த இடங்களின் தரவுகளை அறிந்துகொள்ள முடியும். மேலும், கடந்த 14 நாட்களில் அவர்கள் குடும்பத்தினரையும், அவர்கள் இணைந்த நண்பர்களையும் பாதுகாக்கும் நோக்கில் கைத்தொலைபேசி செயலியில் பயனர்களின் பதிவுசெய்யப்பட்ட இருப்பிடத் தரவுகள் அனைத்தும் கைத்தொலைபேசிக்குள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த கைத்தொலைபேசி செயலில் பதிவுசெய்யப்படும் பயனரின் தகவல்கள் அனுமதியின்றி எந்த வெளி அமைப்புகளுக்கும் அனுப்பப்படாது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால், நீங்கள் தானாகவே தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யலாம். இது கோவிட்-19 வைரஸ் தொற்றலை அடையாளம் காணவும், பரவலைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பிற நபர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இவ்வாறு பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கின்றது இந்த App.
(அ.த.தி)
கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு..

April 11, 2020


மரக்கறி உற்பத்தியாளர்களிடமிருந்து மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ளது. இதற்காக விசேட விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதன் கீழ் தம்புள்ளை பிரதேசத்தில் சில இடங்களில் பிரதேச செயலாளரின் தலைமையில் மரக்கறிகள் இவ்வாறு மொத்தமாக கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது. 
உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, இதற்கான நிதியை பொருளாதார மத்திய நிலையம் வழங்கும். 
(அ.த.தி)

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு.. மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு.. Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்...

April 11, 2020


கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களையும் பொது மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றனர் 
இதன் அடிப்படையின் முகக் கவசம் (Face Mask) அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை 

திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)

கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்... கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

Corona, Covid-19 பெயரில் நடக்கும் மோசடிகள்... WHO விடுக்கும் எச்சரிக்கை ..

April 11, 2020


கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள் வங்கி பணிகள் வர்த்தக பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை இணைய தளங்கள் ஊடாகவே இடம்பெறுகின்றன. அதனால் இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை இணைய தள மோசடி மற்றும் இணைதள குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பயன்படுத்தி நிதி மோசடி மற்றும் குற்றங்களை அதிக அளவில் மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி மற்றும் இணைய தள குற்றச் செயல்கள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று அந்த அமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.  சாதாரண மக்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிக் டாக், ஹலோ சாட்' போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் 

அவர்களை குறிவைத்து செல்படுகின்றனர். ஒவ்வொருவரின் எண்ணுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியே கொரோனா குறித்த தகவல் பதிவு உள்ளதாக இணைய தள லிங்குகளை அனுப்புகின்றனர். மக்கள் ஆர்வமாக பார்க்கும் தகவல்களை, அவற்றின் தலைப்பில் தருகின்றனர். இந்த லிங்கை பயனாளர்கள் திறந்தால் பயனாளரின் ஈ- - மெயில் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை, தானாகவே திருடப்படுகின்றன. 
அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு: 'கொரோனா மற்றும் கோவிட்- - 19' என்ற பெயரில் வரும் one line இணைப்புகளை திறக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள். இணைப்புக்குள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை யோசித்து கொள்ளவும்.உலக சுகாதார நிறுவனமான WHO என்ற பெயரில் யாராவது அழைத்தால், அதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து கொள்ளவும். 
எந்த பயனாளரின் பெயர் மற்றும் ரகசிய வார்த்தையையும் நாங்கள் கேட்பதில்லை. நீங்கள் எங்களுக்கு, - ஈ மெயிலில் தகவல் கேட்காமல் எந்த லிங்கும் இணைப்பு பைலையும் நாங்கள் உங்களது, ஈ- மெயிலுக்கு அனுப்புவதில்லை. நிவாரண நிதியை தனியாக கேட்பதில்லை. அவசரமாக எந்த தகவலையும் அனுப்புமாறு கேட்பதில்லை. எனவே, Online பயன்பாட்டில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

Corona, Covid-19 பெயரில் நடக்கும் மோசடிகள்... WHO விடுக்கும் எச்சரிக்கை .. Corona, Covid-19  பெயரில் நடக்கும் மோசடிகள்... WHO விடுக்கும் எச்சரிக்கை .. Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5
Powered by Blogger.