கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது
irumbuthirai
April 18, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதிக்குள்ளான குடும்பங்களுக்கு ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் எடுத்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இத்தீர்மானம் காணப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் இப்பணியை நிறைவேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் தாம் தயாரித்து வழங்கிய பெயர்ப்பட்டியல் கருத்திற்கொள்ளப்படாமை போன்ற காரணங்களால் மேற்படி பணியிலிருந்து விலக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது
Reviewed by irumbuthirai
on
April 18, 2020
Rating: