தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்...

April 19, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான கணிதத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

தரம் 5ற்கான கணிதத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS...

April 19, 2020


ஐரோப்பாவின் சில நாடுகளில் 5G வலையமைப்பு கோபுரங்கள் (5G Towers) எரியூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இங்கிலாந்தில் சுமார் 50 கோபுரங்கள் ஹோலந்தில் (Holand) 

15 கோபுரங்கள் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இப்படி நடந்திருக்கின்றன. 5G வலையமைப்பு கோபுரங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகின்றன என்ற கருத்தே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென கூறப்படுகின்றது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இவ்விடயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு

April 19, 2020


கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என அரசு நேற்று (18) அறிவித்துள்ளது. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
(அ.த.தி.)


கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை

April 19, 2020


சமய விழாக்கள் உட்பட அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. 

கொரோனா வைரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது. பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும் என அரசு அறிவித்துள்ளது. (அ.த.தி)

சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை...

April 19, 2020


மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 
அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயமானதாகும். பஸ் வண்டிகள், வேன் அல்லது புகையிரதங்களில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உற்படுத்த வேண்டும். 
இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
(அ.த.தி.)

ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

April 19, 2020


தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

April 19, 2020


ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும். 
கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். 
ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். 
ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும். 
அலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு

April 18, 2020


ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அரசாங்கம் இன்று (18) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு கல்வி  நிறுவனங்கள்,  திரையரங்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை...

April 18, 2020


நாளை மறுதினம் திங்கள் (20) முதல் அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் (Curfew) அமுல்படுத்தப்படுதல் மற்றும் தளர்த்தப்படுதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும். 

01. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் மீண்டும் அறிவிக்கும் வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும். 

02 கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவதுகொடை, அகுரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இம்மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். 

03. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 22 புதன் முதல் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். 

04. ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகள் வருமாறு, 
கொழும்பு மாவட்டம் : 
கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், பம்பலபிட்டிய, வாழைத்தோட்டம், மரதானை, கொதடுவ, முல்லேரியாவ, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை மற்றும் கொஹுவலை. 
கம்பஹா மாவட்டம்: 
ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை 
புத்தளம் மாவட்டம்: 
புத்தளம், மாரவிலை மற்றும் வென்னப்புவை 
களுத்துறை மாவட்டம்: 
பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கமை.

 இந்த வகையில் கொட்டாஞசேனை, கிரேண்ட்பாஸ், பம்பலபிட்டிய, வாழைச்சேனை, மரதானை, கொதடுவை, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை, கொஹுவலை, ஜாஎலை, கொச்சிக்கடை, சீதுவை, புத்தளம், மாரவிலை, வென்னப்புவை, பண்டாரகமை, பயாகலை, பேருவளை, அளுத்கமை, வரகாபொல, அகுரணை, அலவதுகொடை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 
 ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. 
ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும். ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாக பயணம் செய்யமுடியும். 
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் பிரதான வீதிகளை தொழிலுக்காக சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை... ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை... Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம்

April 18, 2020


தனது உள்ளகப் பணிகளை தபால் திணைக்களம்  ஆரம்பித்துள்ளது. ஒரு மாத காலம் கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.  3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும் மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகைபிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. கடிதங்கள் வகைபிரிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படவுள்ளன. மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)

உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம் உள்ளகப் பணிகளை ஆரம்பித்தது தபால் திணைக்களம் Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி: இலகு முறையில்...

April 18, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான தமிழ்மொழிக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

தரம் 5ற்கான தமிழ்மொழிக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான தமிழ்மொழி: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது

April 18, 2020


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதிக்குள்ளான குடும்பங்களுக்கு ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் எடுத்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இத்தீர்மானம் காணப்பட்டுள்ளது. 
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் இப்பணியை நிறைவேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் தாம் தயாரித்து வழங்கிய பெயர்ப்பட்டியல் கருத்திற்கொள்ளப்படாமை போன்ற காரணங்களால் மேற்படி பணியிலிருந்து விலக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது கிராம சேவையாளர்களின் விலகல் முடிவுக்கு வந்தது Reviewed by irumbuthirai on April 18, 2020 Rating: 5

வீட்டுத்தோட்டம் செய்ய ரூ. 40000 வரை கடன்

April 17, 2020


நவ சபிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைக்க ஆகக்கூடிய தொகையாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவியை 4%வட்டியில் அரச வங்கிகள் ஊடாக கடனாக வழங்க மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடனை மீளச் செலுத்தும் காலம் ஒன்பது மாதங்கள். என அறிவிக்கப்பட்டுள்ளது. 
நெல், மிளகாய், வெங்காயம், கௌபி, பாசிப்பயறு, உழுந்து, சோயா, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு, வற்றாளை, மரவள்ளி, பால்கிழங்கு, மரக்கறி, கத்தரிக்காய், வெண்டிக்காய், பீட்ரூட், போஞ்சி கோவா, கரட் கறி மிளகாய், தக்காளி, லீக்ஸ், ராபு, நோகோல், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கை, இஞ்சி, கரும்பு முதுவானவற்றை இந்த கடன் திட்டத்தின் கீழ் உற்பத்திச் செய்ய முடியும்.
(அ.த.தி)

வீட்டுத்தோட்டம் செய்ய ரூ. 40000 வரை கடன் வீட்டுத்தோட்டம் செய்ய ரூ.  40000 வரை கடன் Reviewed by irumbuthirai on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.