பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை
irumbuthirai
May 03, 2020
இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய சேவையொன்றை ஆரம்பித்துள்ளது. அதாவது, Online முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேற்றை (Verification of Results) வழங்கும் நடைமுறையை கடந்த 28-04-2020 முதல் ஆரம்பித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக 2001 முதல் இதுவரை இடம்பெற்ற
சா.தர மற்றும் உ.தர பரீட்சை பெறுபேறுகளை உறுதிப்படுத்தி பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேறு தேவைப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகம், வெளிநாட்டு நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குறித்த விண்ணப்பதாரிக்கு Online முறையில் அனுப்பிவைக்கப்படும்.
தபால் நிலையத்தில் இதற்கான கட்டணம் செலத்தியதும் கையடக்க தொலைபேசிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு Pin இலக்கமொன்று அனுப்பப்படும். அந்த இலக்கத்தை பரீட்சை திணைக்கள இணையத்தளத்தின் குறித்த லிங்கிற்கு சென்று பதிவு செய்து Online இல் விண்ணப்பிக்க வேண்டும்.
குறித்த விடயத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை
Reviewed by irumbuthirai
on
May 03, 2020
Rating:
![பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidp9uanv3jyBHYAoLMRW1-Sy91EMIx6Cs8Fx8t4DammplSKqfeykIN9PbYTxZIxHX6VN0YaKmN0CdtXyOj-EyriA4-JExDcNYPyywhGYSNOTkSISIn-QpzPJ1IL6ekvL5slgBjTcqK62M/s72-c/doe.jpg)