ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்..
irumbuthirai
May 04, 2020
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தில் மாத்திரமே ஆகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (3) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்கு இது எந்த வகையிலும் பொருத்தமாகாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஏதேனும் பிரதேசமொன்று அல்லது கிராமமொன்று அல்லது ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்டிருக்குமாயின் அவ்வாறான வலயங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்..
Reviewed by irumbuthirai
on
May 04, 2020
Rating: