நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம்

May 06, 2020

இங்கிலாந்து MCC கிரிக்கற் கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் குமார் சங்ககார மேலும் 1 வருடம் அப்பதவியில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
கொரோனா அசாதாரண நிலை காரணமாக இந்த பதவி நீடிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் தலைவர் பதவியிருக்கும் சங்ககார 2021 செப்தம்பர் 30 வரை தொடர்வார் என தெரிவிக்கப்படுகிறது. 
MCC கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் முதல் வெளிநாட்டவர் சங்ககார என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்...

May 06, 2020

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள், சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்காக துரிதமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவான (Guidelines) சம்மந்தப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்ட பின்னர் மாத்திரம் இந்த நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
அழகு நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் விரைவாக வெளியிடப்படவுள்ளது. அது வெளியிடப்பட்ட பின்னர் அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்களை நடத்தும் நபர்கள் தமது நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்குட்பட்ட 

சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலக எல்லைப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைவாக தமது நிலையத்தில் சேவையை வழங்கக்கூடிய வகையில் கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்ய வேண்டும். இந்த வசதிகள் மற்றும் கட்டமைப்பு பூர்த்தி செய்யப்பட்டமை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் நிலையம் மற்றும் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது மக்கள் சுகாதார சேவை பரிசோதகர்கள் அழகு நிலையங்கள் / சிகை அலங்கார நிலையங்களுக்கு விஜயம் செய்வர்.
அந்த இடங்களை பரிசோதனை செய்து பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் தமது சிபாரிசுகளை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்குவார்கள். இந்த சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு அழகு நிலையங்கள் / தலைமயிர் வெட்டும் இடங்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கும் சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்படும். இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வரையில் நாட்டில் எந்தவொரு அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு முயற்சிக்கக்கூடாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்... சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்... Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது..

May 06, 2020

ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படுவதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் 

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் ,அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய பணியாளர் குழுவினரை மே 11 ஆம் திகதி சேவைக்கு வருகை தருமாறும், முதலில் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்காக ஜூன் 01 ஆம் திகதி அளவில் அனைத்து தரங்களில் உள்ள மாணவர்களுக்காவும் பாடசாலைகரள ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. 
கல்வி அமைச்சின் செயலாளர் எந்த ஒரு மாகாண கல்வி பொறுப்பாளருக்கோ அல்லது வேறு கல்வி நிறுவன தலைவருக்கோ அவ்விதம் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை. மீண்டும் பாடசாலை திறக்கப்படுதல் மற்றும் திறக்கப்படும் விதமானது சுகாதார அமைச்சின் அறிவுரை மற்றும் அரசினால் மேற்கொள்ளப்படும் கொள்கை நடைமுறைக்கு அமைவாக தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி செயலாளரினால் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது மாகாண வலய மற்றும் கல்வித் துறையின் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களை அறியச் செய்யப்பட்டே எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்விச் செயலாளர் தெளிவுபடுத்தினார். நாடு என்ற வகையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் அனைவரும் மிகவும் தீர்மானமிக்கதும் சவால் மிக்க பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள இந்த தருணத்தில் ஒழுக்கத்துக்கு புறம்பானதும் பக்கச் சார்பான விதமானதும் குறுகிய நோக்கத்தை அடைந்து கொள்ளும் எண்ணத்தில் ஊடகத்தை பயன்படுத்தும் சில ஊடகங்கள் மற்றும் இணையத்தள செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சு கடும் வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.. வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.. Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of India (இந்திய வரலாறு)
Language: Tamil. 
Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Logic and Scientific Method 
 Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019 (New Syllabus in 3 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Political Science 
Language: Tamil, English & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019 (New Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019  (New Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Geography 
Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages) G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு..

May 05, 2020

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அரசு தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் மே 15 வரை இதற்கான கால எல்லை வழங்கப்படுகிறது. ஏராளமான வணிகர்கள் தமது வணிகம் தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர். Online முறையில் இந்த தகவல்களை வழங்கலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் வணிகம் தொடர்பான தகவல்களை பதிவு செயய்யலாம்.


கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 04, 2020

29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்..

May 04, 2020

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தில் மாத்திரமே ஆகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (3) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்கு இது எந்த வகையிலும் பொருத்தமாகாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதேவேளை ஏதேனும் பிரதேசமொன்று அல்லது கிராமமொன்று அல்லது ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்டிருக்குமாயின் அவ்வாறான வலயங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்.. ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்.. Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை...

May 04, 2020

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறை திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த கருத்து தெரிவிக்கையில், 
இந்த விடயம் தொடர்பில் தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக தெரிவித்தார். ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த செயலாளர் அதன் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றார். முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 

கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பி திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை... பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை... Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்....

May 03, 2020


கொரோனாவுக்காக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களில் இடம்பெற்ற விற்பனையில் சீனி மற்றும் ஈஸ்ட் ஆகக்கூடுதலாக விற்பனையாகியிருப்பதாக கலால் பிரிவினர் மற்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 
இது சாராயம் முதலியவற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மது பான தயாரிப்புக்காக சீனி மற்றும் 

ஈஸ்ட் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரதுங்க தெரிவித்துள்ளார். இக்காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களில் பழுப்பு சீனி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
இதேவேளை சட்ட விரோத மதுபான உற்பத்தியை முற்றுகையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1022 முற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்.... ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்.... Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை

May 03, 2020

இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய சேவையொன்றை ஆரம்பித்துள்ளது. அதாவது, Online முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேற்றை (Verification of Results) வழங்கும் நடைமுறையை கடந்த 28-04-2020 முதல் ஆரம்பித்துள்ளது. 
இதன் முதற்கட்டமாக 2001 முதல் இதுவரை இடம்பெற்ற 

சா.தர மற்றும் உ.தர பரீட்சை பெறுபேறுகளை உறுதிப்படுத்தி பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேறு தேவைப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகம், வெளிநாட்டு நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குறித்த விண்ணப்பதாரிக்கு Online முறையில் அனுப்பிவைக்கப்படும்.
தபால் நிலையத்தில் இதற்கான கட்டணம் செலத்தியதும் கையடக்க தொலைபேசிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு Pin இலக்கமொன்று அனுப்பப்படும். அந்த இலக்கத்தை பரீட்சை திணைக்கள இணையத்தளத்தின் குறித்த லிங்கிற்கு சென்று பதிவு செய்து Online இல் விண்ணப்பிக்க வேண்டும்.
குறித்த விடயத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5
Powered by Blogger.