நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை
irumbuthirai
May 06, 2020
நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை வைப்பது தொடர்பாக 06-05-2020 அன்று அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு:
தென் ஆபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவச் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு கொழும்பு மாநர சபை நூல்நிலைய வளவிற்குட்பட்ட காணியில் இடவசதியைப் பெற்றுக் கொடுத்தல். இதற்காக அரசாங்கம் மானியத்தை ஒதுக்கீடு செய்யாது.
இதே போன்று எதிர்வரும் தேசிய வீரர்கள் மற்றும் பாராட்டப்பட வேண்டியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உருவச்சிலைகள் நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பு செய்வதற்கு பதிலாக ஒரு விசேட இடத்தில் இவற்றை நிர்மாணித்து அஞ்சலி செலுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
(அ.த.தி)
நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை
Reviewed by irumbuthirai
on
May 06, 2020
Rating: