G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்)
Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Home Economics (மனைப் பொருளியல்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of Sri lanka (இலங்கை வரலாறு) 
Language: Tamil & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை

May 08, 2020

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அல்லது அரைவாசியை அல்லது ஒரு பகுதியை அல்லது ஒரு வார சம்பளத்தை அல்லது ஒரு நாள் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய சொல்லி ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர தெரிவித்த விடயம் அவரின் தனிப்பட்ட வேண்டுகோளாகும். இது அரசின் அறிவித்தல் அல்ல என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள நிலைக்காக அவர் விடுத்த தனிப்பட்ட வேண்டுகோளே இதுவாகும். இது அரசின் அறிவித்தலோ வேண்டுகோளோ அல்ல. தனிப்பட்ட வேண்டுகோள் என குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டும் இருக்கிறார். விரும்பியவர்கள் மட்டும் இதற்கு பங்களிப்பு செய்யலாம். அவரின் இந்த வேண்டுகோளுக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை Reviewed by irumbuthirai on May 08, 2020 Rating: 5

மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்..

May 08, 2020


கொரோனாவால் நிகழ்ந்த 9வது மரணமான மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மருத்துவ ஆய்வுகூட நிபுணர் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 
கடந்த 5ம் திகதி வெளியான தேசிய வைத்தியசாலை தாதி ஒருவர், ராஜகிரிய, கொலன்னாவை மற்றும் மோதரையைச் சேர்ந்த மரணித்த 52 வயது பெண்மணி ஆகிய நால்வரின் PCR பரிசோதனையை மீண்டும் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் பரிசோதித்த போது அவற்றில் 

குறைபாடுகள் இருந்தமை கண்டறியப்பட்டன. இதுவரை இவ்வாறான 13 PCR பரிசோதனை அறிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் மாத்திரம் சிறீ ஜயவர்தன ஆய்வகத்தின் 8, கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் 4, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 1 பெறுபேறுமாக 13 பெறுபேறுகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் இதுவரை இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறவில்லை. 
PCR சோதனைக்காக மாத்திரம் சுகாதார அமைச்சின் கீழ் 10 ஆய்வகங்களில் சுமார் 200 நிபுணர்கள் இதற்காக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணியின் உடல் கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தைப் போன்று எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்.. மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்.. Reviewed by irumbuthirai on May 08, 2020 Rating: 5

ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு...

May 07, 2020

கொரோனா இடர்கால கொடுப்பனவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 தாக்கம் குறித்து நேற்று (6) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages)

May 07, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of Europe (ஐரோப்பிய வரலாறு) 
Language: Tamil & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை

May 07, 2020

நேற்று புதன்கிழமையன்று தென் கொரிய நாடாளுமன்ற குழுவிடம் பேசியுள்ளார் அந்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவர் சுன் ஹுன். அப்போது வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளில் உண்மை இருப்பதுபோல தெரியவில்லை என்று அவர் கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருடம் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 முறை கிம் ஜாங் உன் பொது வெளியில் காணப்பட்டதும் தெரிய வந்துள்ளது. வழக்கமாக இந்த நேரத்திற்கு அவர் 50 முறை 

வெளியில் காணப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கூட்டங்கள், ராணுவப்படைகள் போன்ற உள்நாட்டு விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் கிம் ஜாங் உன் கவனம் செலுத்தி வந்தார். கொரோனா தொற்று பரவல் குறித்த கவலை எழுந்துள்ளதால், அவர் வெளியில் வருவதை குறைத்திருக்கலாம்" என நாடாளுமன்ற கமிட்டியின் உறுப்பினர் கிம் ப்யுங் கீ தெரிவித்தார்.
கிம் ஏற்கனவே இறந்துவிட்டார் என செய்திகள் பரவியதும் ஆனால் சில தினங்களுக்கு முன் கிம் வடகொரிய உரத் தொழிற்சாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை...

May 07, 2020

இலங்கை கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடற்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 


இலங்கை கடற்படை தலைமையகம் 
கொழும்பு 
2020.05.06 

செய்தி பணிப்பாளர் அலைவரிசை பிரதானி 
ஊடக அறிக்கை 

 1. கடற்படை கொவிட் 19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள் மூலமும் செய்தி இணையதளங்கள் சில வற்றிலும் உண்மைக்குப புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால் மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம். 

2. இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

டப்ளியு.எம்.ஐ.ஆர்.எல்.சூரியபண்டார 
லெப்டினன் கமாண்டர் 
ஊடக இணைப்பு அதிகாரி கடற்படை தளபதிக்கு பதிலாக 

பிரதி:- கொவிட் 19 தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி 
             அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் 
              இராணுவ இணைப்பு அதிகாரி, பாதுகாப்பு அமைச்சு 
             பணிப்பாளர் ஊடகம் பாதுகாப்பு அமைச்சு

(அ.த.தி)

பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை

May 06, 2020

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை வைப்பது தொடர்பாக 06-05-2020 அன்று அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு: 
தென் ஆபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவச் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு கொழும்பு மாநர சபை நூல்நிலைய வளவிற்குட்பட்ட காணியில் இடவசதியைப் பெற்றுக் கொடுத்தல். இதற்காக அரசாங்கம் மானியத்தை ஒதுக்கீடு செய்யாது. 
இதே போன்று எதிர்வரும் தேசிய வீரர்கள் மற்றும் பாராட்டப்பட வேண்டியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உருவச்சிலைகள் நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பு செய்வதற்கு பதிலாக ஒரு விசேட இடத்தில் இவற்றை நிர்மாணித்து அஞ்சலி செலுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
(அ.த.தி)

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்..

May 06, 2020

வாடகைக்கு கட்டிடங்களை வழங்கிய அதன் உரிமையாளர்களிடம் அரசு விஷேட வேண்டுகோளை விடுத்துள்ளது. 
அதாவது கொழும்பில் கட்டிடங்களுக்கு அறவிடப்படும் வாடகை தொடர்பிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. 
இது தொடர்பில் 06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 

"பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவன மாணவர்ளைப் போன்று தொழிற்துறையினரும் கொழும்பு நகரப்பகுதிகளில் விடுதிகளில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர். விடுதி உரிமையாளர்களிடமும் வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை வாடகைக்கு வளங்கிளவர்களிடமும் இந்த கொவிட் 19 காலப்பகுதியில் மாதாந்த வாடகையில் அரைப்பங்கை மாத்திரம் அறவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது."
(அ.த.தி)

வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு

May 06, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணியில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு வழங்க அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு சுமார் 74 இலட்சம் பேருக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிரமமான காலப்பகுதிக்குள் இந்த நிவாரணத்தை வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்பு செய்த கிராம குழுக்களின் அங்கத்தவர்களான அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 06, 2020

06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5
Powered by Blogger.