ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை...
irumbuthirai
May 11, 2020
குற்றவியல் விசாரணைகளிலிருந்து குறிப்பாக ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க கையடக்க தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. 25000-50000 வரை இவ்வாறு மோசடி கும்பலினால் கப்பம் கோரப்பட்டுள்ளது.
பொலிஸார் போன்று நடித்து இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக தகவல் தெரிந்தால்
அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 ற்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடி கும்பல் மற்றும் அதனுடன் தொடர்பு வைத்துள்ளவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சால் வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.
ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை...
Reviewed by irumbuthirai
on
May 11, 2020
Rating: