G.C.E.(A/L) Marking Scheme for Sinhala - 2019 (New Syllabus)

May 19, 2020

Department of Examination 
C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Sinhala 

Click the link below for the scheme


Sinhala Scheme
G.C.E.(A/L) Marking Scheme for Sinhala - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Sinhala - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) - 2019 (New Syllabus in Languages)

May 19, 2020

Department of Examination 
C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) - 2019 (New Syllabus in Languages) G.C.E.(A/L) Marking Scheme for Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) - 2019 (New Syllabus in  Languages) Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்) - 2019 (New Syllabus in 2 Languages)

May 19, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்)
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

Results released.. BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) - Open University of Sri lanka

May 19, 2020

BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) – 2019/1

Pass mark for the Entry Test of BA in English and English Language Teaching is 60% and above.
A pass in this examination is NOT an indication that you have been selected for the program. In addition to a pass in this examination, you need to fulfill the Entry Criteria

Click the link below to view results


Results

Results released.. BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) - Open University of Sri lanka Results released.. BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) - Open University of Sri lanka Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது..

May 19, 2020

ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் செலவழிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெற் கவுன்சிலும் இலங்கை கிரிக்கெற் நிறுவனமும் இணைந்தே இதற்கான முதலீட்டை மேற்கொள்ளவிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார். 
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடையத்தை தெரிவித்தார்.

கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. கிரிக்கெற்  மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்பங்களை உறுதிப்படுத்தல்: அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் முக்கிய அறிவித்தல்:

May 18, 2020

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் , பாடசாலை பரீட்சார்த்திகளாக தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு மே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை 

வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, குறித்த பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
(அ.த.தி)

பல்கலைக்கழக விண்ணப்பங்களை உறுதிப்படுத்தல்: அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் முக்கிய அறிவித்தல்: பல்கலைக்கழக விண்ணப்பங்களை உறுதிப்படுத்தல்: அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் முக்கிய அறிவித்தல்: Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்?

May 18, 2020

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம தியகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது. 
அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக 26 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 
பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படும் என்றும், முதற்கட்டத்தின் கீழ் 

போட்டியை பார்வையிடும் சுமார் நாற்பதாயிரம் (40000) பேருக்கான வசதிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் இருபதாயிரம் (20000) ஆசனங்களை ஒன்றிணைத்து மொத்தமாக 60 000 பார்வையாளர்களின் ஆசனங்களை கொண்ட வசதிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வலம் வருகின்றன. கொரோனாவினால் நாடு எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியில் இது தேவைதானா? ஒரு புறம் நிதி நெருக்கடியென சுட்டிக்காட்டி அரச ஊழியர்களின் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய கோரும் அரசு மறு புறம் இந்த மைதானத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவது அரசின் இரு வேறுபட்ட நிலைமைகளைக் காட்டுவதாகவும், மைதானத்திற்கு முன் இலங்கை கிரிக்கெற் அணியை செய்ய வேண்டும், நாட்டில் எத்தனையோ பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் இது இப்போதைக்கு அவசரமா என்றெல்லாம் பல விமர்சனங்கள் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்? பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்? Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்...

May 18, 2020


எதிர் வரும் 20 ஆம் திகதி முதல் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும்இ குறிப்பிட்ட ஆளணியினரை வைத்து சில வரையறைகளுக்குட்பட்ட விதத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான சேவையை பெற அதற்கேயுரிய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு திகதி நேரம் என்பவற்றை முன்னரே ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை இலக்க அடிப்படையிலேயே தினம் ஒதுக்கப்பட வேண்டும். 
இது தொடர்பான ஊடக அறிக்கையை கீழே காணலாம்...




20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்... 20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

ஈழம் என்ற வார்த்தை.... சரோஜா சிரிசேன எடுத்த நடவடிக்கை ...

May 18, 2020

ஐக்கிய இராச்சியத்தில் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் 2020 மே 15 ஆந் திகதி  வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டி: ஃப்ரைடே மேன், உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா?' எனத் தலைப்பிடப்பட்ட வினா விடைப் போட்டி தொடர்பில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கவனம் செலுத்துகின்றது.
இதில் இரண்டாவது வினா, 'ஈழம் என்பது எந்தப் பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீகப் பெயர்?' எனும் வகையில் வினவுவதாக அமைந்துள்ளது. இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், 'இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. - தமிழீழ விடுதலைப் புலிகள்' எனும் மேலதிக விளக்கம் தோன்றுகின்றது.
இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சரோஜா சிரிசேன எழுதிய கடிதத்தில் புலிகள் அமைப்பு தமது தனி நாட்டுக் கோரிக்கைக்காக பயன்படுத்திய வார்த்தையே ஈழம் என்பது மற்றப்படி அது எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பழைய பெயராக பயன்படுத்தப்படவில்லை என்று எழுதியுள்ளார்.இதையடுத்து குறித்த பத்திரிகை அதை நீக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஈழம் என்ற வார்த்தை.... சரோஜா சிரிசேன எடுத்த நடவடிக்கை ... ஈழம் என்ற வார்த்தை.... சரோஜா சிரிசேன எடுத்த நடவடிக்கை ... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள்...

May 18, 2020

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாட்டில் 413 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, நாட்டில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 49 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 
இதேவேளை தற்போது நிலவும் மழையுடனான கால நிலையையடுத்து டெங்கு நோய் பரவக்கூடிய நிலை அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்தள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் வீடுகளின் சுற்றாடல்பகுதியை பரிசோதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அருனா ஜெயசேகர தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை போன்று டெங்கு நோய் பரவுதை தடுப்பதற்கும் ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள்... கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள்... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையரின் எதிர்பார்ப்பு...

May 18, 2020


143 நாடுகளிலுள்ள 38,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர் என்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 
அது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு:



(அ.த.தி)



38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையரின் எதிர்பார்ப்பு... 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையரின் எதிர்பார்ப்பு... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

முப்படை மற்றும் பொலிஸாரும் தமது சம்பளத்திலிருந்து நன்கொடை வழங்க வேண்டுமா?

May 18, 2020


கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள திதி நெருக்கடிகளை சமாளிக்க அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரைச் சம்பளம், வார சம்பளம் அல்லது மே மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் 

வெளியான கருத்துக்களை முற்றாக மறுத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, நன்கொடை வழங்கும் இந்த கோரிக்கை இராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படையினருக்கு அவசியமற்றது என உறுதிப்படுத்தினார்.
(அ.த.தி)
முப்படை மற்றும் பொலிஸாரும் தமது சம்பளத்திலிருந்து நன்கொடை வழங்க வேண்டுமா? முப்படை மற்றும் பொலிஸாரும் தமது சம்பளத்திலிருந்து நன்கொடை வழங்க வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Drama and Theatre (நாடகமும் அரங்கியலும்) - 2019 (New Syllabus)

May 17, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Drama and Theatre (நாடகமும் அரங்கியலும்)
Language: Tamil. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for Drama and Theatre (நாடகமும் அரங்கியலும்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Drama and Theatre (நாடகமும் அரங்கியலும்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 17, 2020 Rating: 5
Powered by Blogger.