"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்:

May 26, 2020


அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு நம்புவதற்கு கடினமாக உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், 
இன்று மாலைதான் ஆறுமுகம் தொண்டமான் உடனான சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்திய வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கின்றார். 
ஆறுமுகம் தொண்டமானின் முகநூல் பக்கத்திலும் இந்த சந்திப்பு 

தொடர்பாகவே இறுதியாக பதிவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் மாரடைப்பு காரணமாக தளங்கம வைத்தியசாலையில் இன்று அகாலமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இறக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும். 
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் தளங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: "நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி?

May 26, 2020


ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இன்று (26) வரை கொவிட் தொற்றுடைய எவரும் சமூகத்திலிருந்து இனம் காணப்படாமை நாடு அடைந்த வெற்றியாகும் என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 
முதலாவது கட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 

ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளின் உள்ளக பயன்பாட்டுக்காக (In house Dining) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் முன்னேற்றத்திற்கு ஏற்ப பதிவுசெய்யப்படாத நிறுவனங்களையும் இராணுவத்தின் உதவியுடனும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன் சிற்றுண்டிச் சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
சுற்றுலா பயணிகள் அதிகமுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெற்ற சுற்றுலா பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். 
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றுகூடிய போதே மேற்படி விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு....

May 26, 2020


பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இம்மாதம் 

27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் உள்ளிட்டோரை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 
தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, குறித்த பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு கல்வியமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு.... பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு.... Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020)

May 23, 2020


நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று (23) புதிய அறிவித்தலை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தல் வருமாறு: 
மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும். 
நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். 
மொஹான் சமரநாயக்க 
பணிப்பாளர் நாயகம் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2020.05.23

(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020) Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து

May 23, 2020


ஹிஜ்ரி 1441 ஆம் வருடத்திற்குரிய ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று இலங்கையில் தென்பட்டதால் நாளை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 
எனவே நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் இரும்புத்திரை நியூஸ் இணையத்தளம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோன்று உலகளாவிய ரீதியில் வாழும் சுமார் 1.8 பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக்!! 
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அனைவரும் வீட்டில் இருப்போம்! பாதுகாப்பாக இருப்போம்!!
ஈத் முபாரக்!!

இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

இலங்கை மாணவர்களுக்காக சீனா வழங்கும் முகக் கவசங்கள்

May 23, 2020


பாடசாலை மாணவர்களுக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு செய்வதற்காக இலங்கையிலுள்ள சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
ஒரு மாவட்டத்திற்கு 5000 முகக் கவசங்கள் என மொத்தமாக 125000 முகக் கவசங்கள் வழங்க சீன தூதரகம் இவ்வாறு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மாணவர்களுக்காக சீனா வழங்கும் முகக் கவசங்கள் இலங்கை மாணவர்களுக்காக சீனா வழங்கும் முகக் கவசங்கள் Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்:

May 23, 2020


பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்யப்படுகின்ற ஆயத்த வேலைகளில் உடல் வெப்பநிலையை அளவிட கூடிய கருவி மாத்திரமே அரசினால் வழங்கப்படும் ஏனையவை பாடசாலையே செய்துகொள்ளவேண்டும் என்ற செய்தி பிழையானது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மறுத்திருக்கிறார். இதற்காக மூன்று விடயங்கள் அரசினால் வழங்கப்படும். உடல் வெப்பநிலை அளவிடக்கூடிய கருவி, கைகளை கழுவ கூடிய சிங்க் வசதி, அதேபோன்று மருத்துவ வசதிகளைக் கொண்ட கட்டில் அல்லது அதனை கொண்ட அறை. இதற்காக 200 விட குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு 

30 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார். இதற்காக 680 மில்லியன் ரூபா செலவாகும் என இப்பொழுது கணக்கிடப்பட்டிருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்: வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்: Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

உங்கள் பிரதேச PHI அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமா?

May 23, 2020


பல்வேறு தேவைகளுக்காக உங்கள் பிரதேச பொது சுகாதார அதிகாரி (PHI) அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமென்றால் பொது சுகாதார அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று உரிய தகவல்களை வழங்கி அவர்களது தொலைபேசி எண்களை பெற்றுக் கொள்ளலாம். 
குறித்த இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள Link ஐக் கிளிக் செய்க


உங்கள் பிரதேச PHI அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமா? உங்கள் பிரதேச PHI அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

போக்குவரத்து சபைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகள்...

May 22, 2020

திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 
இலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 
ஜனாதிபதியின் முன்மொழிவுகள் சில வருமாறு: 

கிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகிறது. இந்த நெறிசலை குறைப்பதற்காக 

தமது சொந்த கார்களில் அலுவலகங்களுக்கு வருவோரை பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இதற்கு தீர்வாக தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்தி அலுவலகங்களுக்கு பஸ் வண்டிகளில் பயணம் செய்வதற்கு தேவையான முறைமையொன்றை (Park and Drive) உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் முன்மொழிந்தார். இதற்கு முழுமையான வசதிகளைக் கொண்ட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். 

பாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பாடசாலை பஸ்களை மஞ்சல் நிறத்துடன் வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளையும் தனியார் பஸ் வண்டிகளையும் இரண்டு நிறங்களில் சேவையில் ஈடுபடுத்தல். 

ஊழியர்களை வலுவூட்டுதல், புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தல், வீண்விரயத்தை குறைத்தல் மற்றும் திருட்டுக்களை ஒழித்தல் போன்றவற்றுக்காக முறையான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டியது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

பயன்படுத்தப்படாத பெருமளவான காணிகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளன. அக்காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டமுடியும். 

சுமார் 4500 பேர் கொண்ட திறமையான தொழிநுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கை போக்குவரத்து சபையில் உள்ளனர். அவர்களிடமிருந்து முழுமையான பயனை பெற்று நிறுவனத்திற்கு வெளியே பராமரிப்புக்காக செயற்கட்டளைகளை பெற்று வருமானம் ஈட்ட முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பட்டார். 

பயிற்சிப் பாடசாலைகளை மேலும் மேம்படுத்தி ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

கிராமிய பிரதேசங்களில் இருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள் இலங்கை போக்குவரத்து சபையிடம உள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்திற்கு அமைய மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் ஜனாதிபதி அவர்களினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

போக்குவரத்து சபைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகள்... போக்குவரத்து சபைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகள்... Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்:

May 22, 2020


நேற்று (21) கொழும்பு – மாளிகாவத்தையில்  இடம்பெற்ற பண பங்கீடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவு பிறப்பித்தது. 
நேற்றைய தினம் கொழும்பு – மாளிகாவத்தையில்  இடம்பெற்ற பணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 68, 62, 59 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கிய மேலும் 9 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் பணப்பகிர்வு இடம்பெற்றிருப்தாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்: மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்: Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் செலுத்தும் முறை..

May 22, 2020


கடந்த பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துமாறு பாவனையாளர்களை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட காலத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்மானி வாசிப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று நீர்ப்பாவனையை கணக்கிட முடியாது போனதால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க நேற்று தெரிவித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தலைமையில் இரத்மலானையிலுள்ள நீர்வழங்கல் வடிகலாமைப்புச் சபையின் தலைமை அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நீருக்கான கட்டணங்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ நீர்பாவனை செய்யப்பட்டிருந்தால் இக் கட்டணங்கள் 06 மாத நீர்க்கட்டண கணக்கில் நிவர்த்தி செய்யப்படும். இதனால் தாமதக் கட்டணம அறவிடப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். சபைக்கு மாதாந்தம் 4.5 பில்லியன் வருமானம் கிடைக்க வேண்டும். ஆனால் இம்மாதம் 1.35 பில்லியனே கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி பற்றாக்குறையாக உள்ளது. 
மேலும் நீர் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் 24 மணிநேரமும் 1939 என்ற இலக்க தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளலாம். அல்லது நீர் கட்டண பட்டியல் தொடர்பாக எதிர்காலத்தில் ஈமெயில் ஊடாக நீர்கட்டண பட்டியலை பெற்றுக் கொள்ள உங்களது ஈமெயில் முகவரியை 0719399999 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
(அ.த.தி)

மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் செலுத்தும் முறை.. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் செலுத்தும் முறை.. Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22-05-2020)

May 22, 2020


ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 
அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். 
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23, சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். 
இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே,26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். 
முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. 
மொஹான் சமரநாயக்க 
பணிப்பாளர் நாயகம் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2020.05.22

(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22-05-2020) ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22-05-2020) Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 22, 2020


20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில்,

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Cabinet decisions
20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5
Powered by Blogger.