எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை அனுமதி இல்லை
irumbuthirai
June 05, 2020
பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் எந்த விதமான தன்சலுக்கும் இம்முறை அனுமதி இல்லை என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தன்சல் வழங்குவதற்கோ அல்லது உலர் உணவுப் பொதிகளை தன்சலாக வழங்குவதற்கோ இம்முறை எவ்வித அனுமதியும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அவர்களின் கையொப்பத்துடன் வெளியான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை அனுமதி இல்லை
Reviewed by irumbuthirai
on
June 05, 2020
Rating: