இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு
irumbuthirai
June 09, 2020
தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் முதல் முறையாக தொழில்நுட்ப பீடமொன்று ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இந்த தொழில்நுட்ப பீடம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா வைபவத்தில் உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகதுறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Bachelor of Engineering Technology, Bachelor of Bio-Systems Technology, Bachelor of Information and Communication Technology போன்ற மூன்று திணைக்களங்களை உள்ளடக்கியதாகவும் சுமார் 300 மாணவர்கள் கற்க கூடிய வசதிகளை கொண்டதாகவும் இந்த பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு
Reviewed by irumbuthirai
on
June 09, 2020
Rating: