பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி?
irumbuthirai
June 11, 2020
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணியை வழங்குவதற்கான ஆலோசனையை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு முன்வைத்தபோது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்காக 210 கோடி ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீருடைத் துணிகள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யப்படும்.
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி 1993 முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 2015 முதல் சீருடை துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் துணிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிடிசன்.Lk
சிடிசன்.Lk
பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி?
Reviewed by irumbuthirai
on
June 11, 2020
Rating: