G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Home Economics (மனைப் பொருளியல்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Tamil medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: History of Sri lanka (இலங்கை வரலாறு) 
Languages: Tamil English & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: Europe (ஐரோப்பிய வரலாறு) 
 Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

June 11, 2020

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையான அபேக்ஷா வைத்தியசாலையின் கிளினிக்குகளுக்காக வருகை தரும் பயணிகளின் நலன் கருதி நாட்டின் சகல மாகாணங்களில் இருந்தும் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவை திங்கட்கிழமை தொடக்கம் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அறிவித்துள்ளது. கொவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியதால் அபேக்ஷா வைத்தியசாலையை நாடிய நோயாளிகள் பெரும் சிரமப்பட்டார்கள். நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு குறித்த பஸ் வண்டிகளில் குளிரூட்டி வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது மாத்தளை, நுவரெலியா, அனுராதபுரம்இ ஹங்குரன்-கெத்த, கண்டி, நிக்கவரட்டிய, கொடகவல, கல்கமுவ, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலிருந்து நாளாந்தம் சேவைகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி?

June 11, 2020


பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணியை வழங்குவதற்கான ஆலோசனையை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு முன்வைத்தபோது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. 
இதற்காக 210 கோடி ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீருடைத் துணிகள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யப்படும். 
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி 1993 முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 2015 முதல் சீருடை துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் துணிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


சிடிசன்.Lk
பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி? பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி? Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு)

June 10, 2020


2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்குரிய இலக்கங்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பெயர், அதற்குரிய சின்னம் என்பன இங்கு தரப்படுகின்றன. 
வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் சிங்கள அகராதி அகர வரிசைப்படியே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Name & Numbers

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ...

June 10, 2020

தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் மற்றும் மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்: 
01. மதவழிபாட்டுத் தலங்கள்: 
மத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது. 
சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. • இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத் தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும். 
02. தனியார் வகுப்புக்கள்: 
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. 
சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். 
இந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.
(அ.த.தி)

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

June 10, 2020

ஜூன் 20ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு:

June 10, 2020


கொரோனா பரவல் ஊரடங்கால் 2019 உயர்தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளை உரிய காலத்திற்கு வெளியிட முடியாமல் போனது. எனவே அந்த பெறுபேறுகளை ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத ஆரம்பத்தில் வெளியிடலாம் என தான் எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு: 2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா?

June 10, 2020


விடைத்தாள் திருத்தும் பணிகள்  இதற்கு முன்னர் சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் நிறைவு பெற்றதன் பின்னரே ஆங்கில மொழி மூலம் ஆரம்பிக்கப்படும். ஆனால் இம்முறை மூன்று மொழி மூலமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும். 
எனவே இம்முறை விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். உயர்தரத்தில் கற்பிப்பவர்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பெற்றவர்களாகவே இருப்பார்கள். அந்த வகையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மாத்திரம் தனியார், சர்வதேச பாடசாலைகளில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.  
நேற்று கல்வி அமைச்சரால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா? விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை  ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா? Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு

June 10, 2020


இவ்வருடம் இடம்பெறும் உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
நேற்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
நூற்றுக்கு 30% ஆனவர்கள் இந்த பணிக்கு வருவதில்லை. இது மாத்திரமன்றி 

இன்னும் சில காரணங்களினால் இம்முறை இந்த மேலதிக கொடுப்பனவு ஒன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று இதற்கு முன்னர் சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் நிறைவு பெற்றதன் பின்னரே ஆங்கில மொழி மூலமான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஆனால் இம்முறை மூன்று மொழி மூலமும் ஒரேநேரத்தில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும்

June 09, 2020


இன்று அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி அதிகாரிகளிடம் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முன்னணி சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு தடையுத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றில் இலங்கை போலீசார் நேற்று பெற்றிருந்தனர். 
ஆனால் இன்று திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடந்தபொழுது அதன் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இன்னும் சிலர் 

லிப்டன் சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அதன் போதும் போலீசாருடன் அமைதியின்மையான நிலைமை ஏற்பட்டவுடன் அதிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். 
இந்தக் கைதுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. 
இதேவேளை இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி எந்தவித அதிகாரிகளுக்கும் தாம் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. 
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 53 பேர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
தொண்டமானின் மரணத்தில் செயல்படுத்தப்படாத சட்டம், அமெரிக்க அதிகாரி இலங்கை வரும்பொழுது விமான நிலையத்தில் செயல்படுத்தப்படாத சட்டம் நியாயமான கோரிக்கை ஒன்றுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பொழுது மட்டுமா செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்து சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்

June 09, 2020


இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கான திகதிகளும் அது தொடர்பான ஏனைய விடயங்களும் கூறப்பட்டன. 
அந்த வகையில் உயர்தரப்பரீட்சை செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையும் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதியும் இடம்பெறும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிக்கையில் , இம்முறை கணக்கீடு உட்பட 5 பாடங்களுக்கு சாதாரண கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இன்னும் சில பாடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் சாதாரண தரப் பரீட்சைக்கு கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்தார். 
 அத்துடன் பரீட்சை நடத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்பொழுது அதாவது வழமையாக பின்பற்றப்படும் முறையானது சமூக இடைவெளிக்குப் போதுமானது என அவர்கள் தெரிவித்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்  2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5
Powered by Blogger.