08-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

July 10, 2020


08-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


08-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 08-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 10, 2020 Rating: 5

மின் கட்டண சலுகை மூன்று மாதங்களுக்கு ..

July 10, 2020


கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 மின் அலகுகள் வரையில் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம் மின் கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவைக்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத சலுகை காலம் வழங்குவதற்கும் ஆலோசனை ஒன்றை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு: 
கொவிட் 19 தொற்று நிலைமையால் 2020 மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டு மக்கள் தமது வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டியேற்பட்டதால் பல துறைகளில் தொழிலில் ஈடுபட்டவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. இந்நிலைமையை கருத்தில் கொண்டு மின் கட்டணப் பட்டியலுக்கு வழங்க வேண்டிய மானியம் தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடங்கிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பதற்காக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார். அதற்கமைய குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை திறைசேரி அதிகாரிகளுடன் மேலும் ஆராய்ந்து மக்களுக்கு வழங்கக்கூடிய மானியம் தொடர்பான சிபாரிசுகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை வகுப்பு அமைச்சரான கௌரவ பிரதமரிடம் வேண்டிக்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

அ.த.தி.
மின் கட்டண சலுகை மூன்று மாதங்களுக்கு .. மின் கட்டண சலுகை மூன்று மாதங்களுக்கு .. Reviewed by irumbuthirai on July 10, 2020 Rating: 5

வேட்பாளர்களை ஆதரித்து தமது வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களுக்கு...

July 10, 2020


கட்சிகளை அல்லது குழுக்களை அல்லது வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சகல வாகனங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டப்பட்டுள்ள ஸ்ரிக்கர்களையும் புகைப்படங்களையும் சித்திரங்களையும் அகற்றுதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு;

அ.த.தி.

வேட்பாளர்களை ஆதரித்து தமது வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களுக்கு... வேட்பாளர்களை ஆதரித்து தமது வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களுக்கு... Reviewed by irumbuthirai on July 10, 2020 Rating: 5

வாக்களிக்கச் செல்ல விசேட போக்குவரத்து வசதி தேவையானோர்க்கான விண்ணப்பம்

July 07, 2020


2020 பாராளுமன்ற தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத உடற்றகுதியீனம் உற்றவர்கள் விசேட போக்குவரத்து வசதிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மற்றும் விண்ணப்பம் பின்வருமாறு:


வாக்களிக்கச் செல்ல விசேட போக்குவரத்து வசதி தேவையானோர்க்கான விண்ணப்பம் வாக்களிக்கச் செல்ல விசேட போக்குவரத்து வசதி தேவையானோர்க்கான விண்ணப்பம் Reviewed by irumbuthirai on July 07, 2020 Rating: 5

வெலிக்கடை சிறைக் கைதிக்கு கொரோனா தொற்று...

July 07, 2020


வெலிக்கடை சிறைக் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்தாக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் அறிவித்துள்ளார். 
குறித்த கைதி கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வெலிக்கடை சிறைக்கு கடந்த ஜூன் 27ஆம் திகதி மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதைத்தொடர்ந்து குறித்த கைதியோடு தொடர்புடைய நபர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு PCR பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தும் கருமங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையை கீழே காணலாம்.


வெலிக்கடை சிறைக் கைதிக்கு கொரோனா தொற்று... வெலிக்கடை சிறைக் கைதிக்கு கொரோனா தொற்று... Reviewed by irumbuthirai on July 07, 2020 Rating: 5

பஸ் பயணிகளுக்கான App இன்று முதல்..

July 07, 2020


பஸ் பயணம் தொடர்பான பல்வேறு விபரங்களை அறிந்து கொள்வதற்காக பயணிகளுக்கான App ஒன்று இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. இதில் ஆசன பதிவு (Seat reservation), நேர அட்டவணை (Time table), கட்டண விபரம் (Fare table), ஜி.பி.எஸ். கண்காணிப்பு (GPS Tracking). முறைப்பாடு செய்தல் (Make complaint) போன்ற பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.
Mybus.sl என்ற பெயர் கொண்ட இந்த App ஐ தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பஸ் பயணிகளுக்கான App இன்று முதல்.. பஸ் பயணிகளுக்கான App இன்று முதல்.. Reviewed by irumbuthirai on July 07, 2020 Rating: 5

வாக்களிப்பிற்கான நேரம் நீடிப்பு

July 06, 2020


எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கால எல்லையை ஒரு மணி நேரத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் அதனடிப்படையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பிற்கான நேரம் நீடிப்பு வாக்களிப்பிற்கான நேரம் நீடிப்பு Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

July 06, 2020

இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு: 
வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு ( மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு , இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. இதே போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அ.த.தி)
திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கொழும்பில் வீடு..

July 06, 2020

அரச பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக சொந்தமாக வீடுகளை கொள்வனவு செய்வதற்கு வசதியாக மாடி வீட்டு கட்டிட தொகுதி ஒன்று கொழும்பில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் தெரிவித்தார். இன்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் , உயர்கல்வி புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்... 
பெரும்பாலான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நீண்ட தூரங்களில் இருந்தே கடமைகளுக்கு வருகின்றனர். இவ்வாறு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உத்தேச மாடி வீட்டு கட்டிட தொகுதியை கொழும்பு ஒருகொடவத்தையில் அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

(அ.த.தி)
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கொழும்பில் வீடு.. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கொழும்பில் வீடு.. Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

அஞ்சல் மூல வாக்களிப்பு உரிய தொழில் இடங்களில்..

July 06, 2020

2020 பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூலமாக வாக்களிப்பவர்களுக்கு உரிய தொழில் இடங்களில் வாக்களிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துமாறு தெரிவத்தாட்சி அலுவலரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:



அஞ்சல் மூல வாக்களிப்பு உரிய தொழில் இடங்களில்.. அஞ்சல் மூல வாக்களிப்பு உரிய தொழில் இடங்களில்.. Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு விதிக்கப்பட்ட 11 நிபந்தனைகள்..

July 06, 2020


இன்று (06) தொடக்கம் நிபந்தனைகள் பலவற்றின் கீழ் பல்கலைக்கழக கட்டமைப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தள்ளார். பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 
கடந்த ஜுன் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. 
இன்று தொடக்கம் 2 ஆம் மற்றும் 3 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. இதற்கு அமைவாக அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் அந்தந்த பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளுக்கு மாணவர்களை அழைப்பதற்கு முடியும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார். 
இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை கீழ் கண்ட 11 நிபந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். 
01. ஒரு முறைக்கு பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கக்கூடியவர்கள் வருடம் 2 மாணவர்கள் மாத்திரமாகும். இரண்டாம் மற்றும் 3 ஆம் வருடங்களாயின் மிகவும் பொருத்தமானதாகும். 
02. விடுதி வசதிகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற வீதம் வழங்கப்படுவது கட்டாயமானதாகும். விரிவுரை மண்டபங்களில் நடைமுறை வகுப்புக்கள், நூல் நிலையம் மற்றும் விரிவுரை மண்டபம் ஆகியவற்றில் 1 மீற்றர் இடைவெளியை முன்னெடுப்பது முக்கியமானதாகும். 
03. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது விரவுரை மற்றும் நடைமுறை வகுப்பை பூர்த்தி செய்து பரீட்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படவேண்டும். 
04. பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் நடத்தப்படும் எத்தகைய கல்வி நடவடிக்கைகளுக்கான காலத்தை குறைத்து ஆகக்கூடிய வகையில் 4 வாரத்திற்கு மேற்படாதவாறு அமைய வேண்டும். 
05. இறுதி ஆண்டில் மருத்துவ பீட மாணவர்களுக்கு செய்முறைப்பயிற்சியை ஆரம்பிக்க முடிவதுடன் இதற்காக சம்பந்தப்பட்ட பீடங்களின் ஆலோசனைகள் வழங்கப்படமுடியும். பல் வைத்தியம் மற்றும் ஆயர்வேத இறுதி ஆண்டு மாணர்களுக்கு செய்முறை பயிற்சியை ஆரம்பிக்க முடியும். 
06. கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து தமது வீடுகளுக்கு செல்ல வேண்டும். 
07. பல்கலைக்கழக வளவில் இரவு 7.00 மணிக்கு பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் இருக்க கூடாது. 
08. விளையாட்டு, சமூக பணி அல்லது எத்தகைய ஒன்று கூடலுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. 
09. அனைத்து உப வேந்தர்களும் தமது தங்குமிடங்களில் உள்ள வசதிகள் தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்துவதுடன் ஒரு முறைக்கு பல்கலைக்கழகத்திற்கு அழைக்கக்கூடிய மாணவர் எண்ணிக்கை தொடர்பாக மதிப்பீடுகளை ஆரம்பித்த பின்னர் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். 
10. உயர் கல்வி நிறுவனத்திற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை தொடர்ந்தும் செல்லுபடியானதாகும். 
11. பல்கலைக்கழகங்ளை சுமூகமாக முன்னெடுப்பதற்காக தேவைப்படும் கல்வி நடவடிக்கைகள், தேவையான பணியாளர்கள் குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவாக இந்த நிபந்னைக்கு அமைய பல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க கொவிட் 19 தொற்று நாட்டுக்குள் பரவியதனால் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட போதிலும் இணையத்தளம் மூலமான கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

(அ.த.தி)
பல்கலைக்கழகங்களுக்கு விதிக்கப்பட்ட 11 நிபந்தனைகள்.. பல்கலைக்கழகங்களுக்கு விதிக்கப்பட்ட 11 நிபந்தனைகள்.. Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

03-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 06, 2020

03-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.


Tamil
English
Sinhala
03-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 03-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

26-06-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 06, 2020

26-06-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.


Tamil
English
Sinhala
26-06-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 26-06-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.