ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு)

July 13, 2020


அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேசிய தேர்தலின் போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் கணக்கிடாத வகையில் சுயமாக வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
ஊழியர்களுக்கு உரிய முறையில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தொழில் தருனர்களால் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலதிக விளக்கங்களும் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. 
தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையை கீழே காணலாம்.


ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on July 13, 2020 Rating: 5

ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்:

July 12, 2020


கொரோனா தொற்றை உறுதிப்படுத்தி அதாவது Pocitive என வழங்கப்பட்ட பெறுபேறுகளை அரசாங்கம் ஏற்க மறுத்ததையடுத்து இனிமேல் பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்வதில்லை என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 
 இந்த செய்தியை The Sunday Morning என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு!

July 12, 2020


ராஜாங்கன பிரதேச செயலாளர் பிரிவின் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்துள்ளார். 
குறித்த பிரதேசத்திலுள்ள குடும்பங்கள் சில தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
தபால் மூல வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு:

July 12, 2020


விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளை உரிய தினத்தில் திறந்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது அதிபர்களின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போதுள்ள கொரோணா பரவல் நிலைமை காரணமாக நாளை அதாவது திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.


விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி அமைச்சு. (அறிக்கை இணைப்பு)

July 12, 2020


தற்போதுள்ள கொரோனா பரவல் மேலும் தீவிரமானால் பாடசாலைகள், பிரிவெனாக்கள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மூடப்படலாம் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
இதேவேளை இந்த பரவல் நிலைமை தொடர்பாக அதிபர்கள், 

கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்வி அமைச்சு மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய தகவல் நிலையம் ஒன்றை ஸ்தாபித்துள்ளது. 
அந்தவகையில் இலங்கையின் சகல பிரதேசங்களினதும் Covid-19 நிலைமை தொடர்பாக இந்த நிலையத்தை தொடர்பு கொண்டு அறிவதோடு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். 
தொடர்பு கொள்ள வேண்டிய உடனடி தொலைபேசி இலக்கம்: 1988. 
கல்வியமைச்சின் அறிக்கையை கீழே காணலாம்.


மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி அமைச்சு. (அறிக்கை இணைப்பு) மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி அமைச்சு. (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்:

July 12, 2020


தற்போதுள்ள கொரோனா பரவல் நிலைமைகளை கருத்திற்கொண்டு இம்மாதம் 13, 14, 15 ஆகிய தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த பிரச்சார கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது ஜன பெரமுன அறிவித்தல் விடுத்துள்ளது. 
இதற்கான ஆலோசனையை கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கியதாக  அக்கட்சியின் செயலாளர் அந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை அக்கட்சியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் தமது கூட்டங்களையும் மக்கள் சந்திப்புகளையும் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு சிறு சிறு சந்திப்புக்களை நடத்தும் பட்சத்தில் மிகத் தீவிரமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் படியும் அதில் கூறப்பட்டுள்ளது. 
இதனையடுத்து நாமல் ராஜபக்ச தனது கூட்டங்களை குறித்த தினங்களில் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக  தனது ட்விட்டர் செய்தியில் அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அறிவித்தலை கீழே காணலாம்.


ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா?

July 12, 2020


எதிர்வரும் சில நாட்களுக்கு  அரசால் பொது விடுமுறை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதாக  சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குறித்து உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா? அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா? Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா?

July 12, 2020


பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தமது ட்விட்டர் செய்தியில் உறுதி செய்துள்ளனர். 
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் ட்விட்டர் செய்திகளை கீழே காணலாம். (ஐஸ்வர்யாராய் மற்றும் மகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட முன் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவுகளே இவை)


அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

முதன் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்...

July 12, 2020


அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக கொரோனாவுக்காக முகக் கவசம் (Face Mask) அணிந்துள்ளார். Walter Reed National Military Medical Center என்ற இடத்திற்கு விஜயம் செய்தபோதே அவர் முகக் கவசத்தோடு சென்றுள்ளார். 
முகக் கவசம் அணிவதை இதுவரை அவர் பெரிதுபடுத்தாமல் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


முதன் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... முதன் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியவர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்...

July 11, 2020

இலங்கை பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்தல் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய குறித்த உத்தியோகத்தர்களை மீளவும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் பாதுகாப்பு அமைச்சால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
விண்ணப்ப முடிவு திகதி: 17-07-2020. 
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:





பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியவர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்... பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியவர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்... Reviewed by irumbuthirai on July 11, 2020 Rating: 5

தபால்மூல வாக்களிப்பு தினங்கள்...

July 11, 2020

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் பல கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் திங்கட்கிழமை வாக்களிக்கவுள்ளனர். 
எதிர்வரும் 14ஆம் 15ஆம் தினங்களில் அரச பணியாளர்களுக்கும் 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால்மூல வாக்களிப்பு தினங்கள்... தபால்மூல வாக்களிப்பு தினங்கள்... Reviewed by irumbuthirai on July 11, 2020 Rating: 5

Results Released: External Pharmacist’s Examination

July 11, 2020

Ceylon Medical College Council
External Pharmacist’s Examination - November 2019.
Click the link below for full results:


Results
Results Released: External Pharmacist’s Examination Results Released: External Pharmacist’s Examination Reviewed by irumbuthirai on July 11, 2020 Rating: 5

இராணுவ தொண்டர் படையில் இணைவதற்கான சந்தர்ப்பம்...

July 11, 2020


மதிப்புமிக்க வாழ்க்கையைத் தொடர விரும்பும் நாட்டின் இளைஞர்கள், ஜூலை 27 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை இராணுவ தொண்டர் படையில் கெடட் அதிகாரியாக இணைவதற்கு அழைக்கப்படுகிறார்கள். 
விண்ணப்ப முடிவு திகதி: 27-07-2020. 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.





இராணுவ தொண்டர் படையில் இணைவதற்கான சந்தர்ப்பம்... இராணுவ தொண்டர் படையில் இணைவதற்கான சந்தர்ப்பம்... Reviewed by irumbuthirai on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.